நட்பு!
நட்பென்றால்
ஜாதி, மத, இன, மொழி,
சமயம் பார்க்காதது!
தொலைவில் இருந்தாலும்
தொலைந்து
போகாதது நட்பு!
உறவுகள் கை விட்டாலும்
நட்புறவுகள்
கைவிடாது!
தனிமை வாட்டும்போது
இனிமை கூட்டுவதும்
ஆறுதல் தருவதும் நட்பு!
தவறு செய்யும்போது
சுட்டிக் காட்டுவதும்
தவறான வழியில்
செல்லாதே என
தட்டிக் கேட்பதும் நட்பு!
நட்பிற்கு வயதில்லை
எல்லையுமில்லை...
நல்ல நட்பு
நடை பிறழாது
கதவை மூடாது
நல்ல நட்பு கிடைக்க
நாமே பொறுப்பு!
வ. மாரிசுப்ரமணியன், களக்காடு.