கள்வர்கள் - கதாகாலட்சேபம்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 ஆக
2021
00:00

ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு திறமையைக் கொடுத்திருக்கிறது, தெய்வம். அதை வைத்து நலம்பெற வேண்டும்; எதிர்பாராத பிரச்னைகளில் இருந்து அது காப்பாற்றும். 19-ம் நுாற்றாண்டின் பிற்பகுதியில் நடந்த இந்த வரலாறு அதை மெய்ப்பிக்கும்.
தஞ்சையிலிருந்து பக்கவாத்தியக் குழுவினரோடு புறப்பட்டு, ஓர் ஊரில் கதாகாலட்சேபம் செய்து, ஊர்க்காரர்கள் கொடுத்த சன்மானங்களோடு, இரவோடு இரவாகப் புறப்பட்டார், பாகவதர் ஒருவர்.
அவர்கள் வந்த மாட்டு வண்டிகள், ஊர் எல்லையைத் தாண்டி, அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் புகுந்தன. கும்மிருட்டு. வண்டிக்குள் இருந்த பின்பாட்டுக்காரர், 'இந்தப் பக்கம் தீவட்டிக் கொள்ளைக்காரர்கள் அதிகமாம்...' என்றார்.
அவர் சொல்லி முடிப்பதற்குள், 'ஏய்... நிறுத்து வண்டியை...' என்று, சூழ்ந்து கொண்டனர், தீவட்டி ஏந்திய கொள்ளையர்கள்.
'ம் ம்... இறங்குங்கள் கீழே...' என்றான், கொள்ளையர் தலைவன்.
பாகவதர் உட்பட அனைவரும் இறங்கினர்.
'கழட்டுங்கள் எல்லாவற்றையும். இன்று, சரியான வேட்டை...' என்றான், கொள்ளையர் தலைவன்.
'சரி... இதுவும் இறைவன் திருவிளையாடல்...' என்று எண்ணிய பாகவதர், துண்டை விரித்து ஆபரணங்களை எல்லாம் கழற்றி போட்டார். சன்மானமாகக் கிடைத்த பணத்தையும் அதில் போட்டார்.
'ஏது இவ்வளவு பணம்...' என்றான், கொள்ளையர் தலைவன்.
'நான் கதாகாலட்சேபம் செய்பவன். பக்கத்தில் உள்ள கிராமத்தில் கதாகாலட்சேபம் செய்துவிட்டு வருகிறேன். இந்தப் பணம் அங்கே கொடுத்தனர்...' என்று தன்னைப் பற்றிச் சொன்னார், பாகவதர்.
'இவ்வளவு சன்மானம் கிடைக்கிறது என்றால், உங்கள் கதை நன்றாகத்தான் இருக்க வேண்டும். அங்கே சொன்ன கதையை இங்கே சொல்லுங்கள்; நாங்களும் கேட்கிறோம்...' என்றான்.
பக்கவாத்தியங்களுடன், வள்ளிக்கல்யாணம் எனும் தலைப்பில் கதாகாலட்சேபம் செய்தார், பாகவதர். நொண்டிச்சிந்து, காவடிச்சிந்து, தெம்மாங்கு பாடல்கள் என பாடி, கதாகாலட்சேபம் செய்து, 'வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா...' என, கூவி முடித்தார்.
கொள்ளைக்காரர்களும் மெய்மறந்து கேட்டனர்.
ஆபரணங்களும், பணமும் அடங்கிய மூட்டையை, பாகவதரின் காலடியில் வைத்து, விழுந்து வணங்கி, 'ஐயா... உங்கள் கதாகாலட்சேபத்திற்கு, என்னால் சன்மானம் எதுவும் தர முடியவில்லையே...' என்று வருந்தினான், கொள்ளையர் தலைவன்.
'வருந்தாதே... இன்று முதல் இந்தத் தீய செயலை விட்டு விடு. அதுவே நீ தரும் சன்மானம்...' என்றார், பாகவதர்.
'சத்தியமாக, நாங்கள் இனி கொள்ளையடிக்க மாட்டோம்...' என்றான்.
தீமை செய்ய வந்த திருடர்களை திருத்தியவர், கிருஷ்ண பாகவதர்; 19-ம் நுாற்றாண்டில் மிகவும் புகழ்பெற்றவர்.

பி. என். பரசுராமன்

ஆன்மிக தகவல்கள்!

அன்னம் முதலியவற்றை, எவர்சில்வர் பாத்திரத்தில் நேரடியாக வைத்து, தெய்வங்களுக்கு நிவேதனம் செய்யக் கூடாது. பாத்திரத்தில் இலை வைத்து, அதில் உணவை வைத்து நிவேதனம் செய்யலாம்.

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (4)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Hari - chennai,சவுதி அரேபியா
03-ஆக-202113:55:49 IST Report Abuse
Hari எங்கள் ஊரில் கட்டுமரம் என்ற ஒரு விங்ஹான திருடர் இருந்தார் அவரு இப்படித்தான்,கொள்ளை அடிப்பார் ஆனால் அதை யாராலும் கண்டுபிடிக்க முடியாது அதையும் ஒருவர்சார்காரிய என்பவர் எப்படியும் கண்டுபிடித்தே தீர்வது என்று முடிவு செய்து முயற்சித்தார் ஆனால் 29 ஆயிரம் ஜீனி மூட்டையையும் எறும்புகளின் துணையோடு நவட்டிட்டு போய்விடடார் இன்னும் அவரை கண்டுபிடிக்க முடியலை .
Rate this:
Cancel
Manian - Chennai,ஈரான்
03-ஆக-202113:03:30 IST Report Abuse
Manian திருடர்களில் ஏழைபங்காளனாக இருந்தவன் நெல்லைச்சீமை ஜம்புலிங்கம்(செம்புலிங்கம்) என்று சொல்வார்களாம். அவரிடமிருந்து தப்பி, இரவிலே நெல்லை கஜானாவில் ஒப்படைக்க ஜெவந்தி ராமய்யர் என்பர் எப்படி பணப்பெட்டியுட் தப்பினார் என்ற உண்மை நிகழ்ச்சியை நெல்லை மூக்கன் அண்ணாச்சி சொன்னார். கருப்பாக, ஒடிசலாக அந்த ஐயர் களக்காடு என்ற ஊரில் பெரிய தெருவில் வசித்தாராம். கஜானாவில் திருடு போகாமல், வரி வசூலை கட்டினால் நல்ல சன்மானம் -பரிசு கிடைக்குமாம். ஜெவந்தி ராமய்யர், துணிவு, சமயோசித புத்தி உள்ளவராம். ஆக, ஒரு அமாவாசை இரவில் பணப்பையுடன் நெல்லை நோக்கி குறுக்கு வழியில் நடந்தாராம். வழியில் இருட்டில் ஒரு பாறை மேல் சம்புலிங்கம் உட்கார்ந்திருந்தானாம். யார்லே அங்ஙனே போறவன்? எங்கலே போறே என்று செம்புலிங்கம் கேட்டானாம் அதற்கு அந்த ஐயரு, ஓர்ஜியோ, நான்தேன் மாடசாமி, கொடைக்கு பலி கொடுகப் போதேனுங்க என்று ஒரு வெவாசாயி மாதிரி பேசிகிட்டே போனாராம். பணம் தப்பியதாம். செம்புலிங்கம், ஏர்வாடி(வள்ளியூர் பக்கம்) தொறைவாப்பாங்க ரெண்டு பேரும் பலே கில்லாடி திருடங்களாம். அண்ணாச்சி, அவரு பேரன் மும்பயிலே அந்த ஐயரு பேரன் ஜெயராமன்ங்கரவருகிட்டே கேட்டு உறதிப்படுத்தின விவரம் இது. ராபின்ஹூட் மாதிரி செம்புலிங்கம்னாறு .
Rate this:
Cancel
கதிரழகன், SSLC - சிவகங்கை, TN,சிங்கப்பூர்
01-ஆக-202118:02:06 IST Report Abuse
கதிரழகன், SSLC புதுசு புதுசா சாஸ்திரம் உண்டாக்குறானுவ. எவர் சில்வர் ஏன் கூடாது? கண்ணப்ப நாயனார் எச்சி செஞ்சு கொடுத்த படையலையே ஏத்துகிட்டார் எங்க சிவானார். உண்மையா பக்தி வையுங்க. படையல் எதுல வேணா வைக்கலாம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X