சீனாவின் லியோனிங் என்ற மாகாணத்தில், முதுகு தண்டுவட வலியால் பாதிக்கப்பட்டவர்களுக்காக, இயற்கை சிகிச்சை என்ற பெயரில், விபரீத விளையாட்டை அரங்கேற்றி வருகின்றனர்.
பூங்காவில் உள்ள மரங்களில் ஒரு வளையத்தை தொங்க விட்டு, அதை, முதுகு வலியால் அவதிப்படுவோரின் தாடையில் பொருத்துகின்றனர். இதனால், உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காக, தாடையுடன் சேர்த்து, 'மப்ளர்' போன்ற துணியை மாட்டி விடுகின்றனர். பின், அவர்களை ஊஞ்சல் ஆட்டுவது போல் ஆட்டி விடுகின்றனர்.
துாக்கில் தொங்குவதற்கு ஒப்பானது இந்த சிகிச்சை முறை.
இந்த அபாய சிகிச்சைக்கு பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்தாலும், இந்த நடைமுறை சீனாவில் தொடரத் தான் செய்கிறது.
— ஜோல்னாபையன்