வீட்டுத்தோட்டத்திற்கு ஆடி பெருக்கில் 'ஆடிப்பட்டம்' | விவசாய மலர் | Agrimalar | tamil weekly supplements
வீட்டுத்தோட்டத்திற்கு ஆடி பெருக்கில் 'ஆடிப்பட்டம்'
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

31 ஜூலை
2021
00:00

ஆடி 18 வீட்டுத் தோட்டத்திற்கு உகந்தநாள். ஆடி 18ல் வீட்டில் கையளவு இடத்தில் ஏதாவது விதைகளை இட்டு வளர்த்தால் வீட்டின் வளம் அதிகரிக்கும் என்பது நம்பிக்கை.

ஆடி 18-ல் விதைக்கப்படும் சுரைக்காய், புடலங்காய் நன்கு வளர்ந்து நிறைய மகசூல் கொடுக்கும். விதைப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன் காலியிடத்தில் ஒன்றரை அடி நீள, அகலம், ஆழத்தில் குழிகள் தோண்டி, ஒரு வாரத்திற்கு வெயில் படும்படி காயவிட வேண்டும். பூசணிக்காய், சுரைக்காய், பீர்க்கங்காய் கொடி வகைகளுக்கு அதிக இடைவெளியும், செடி அவரை, கொத்தவரை, வெண்டை, முள்ளங்கி, பீட்ரூட் போன்ற குத்துச்செடிகளுக்கு குழிக்குக்குழி 3 அடி இடைவெளியும் விட வேண்டும்.

மட்கிய தொழுஉரம் அல்லது மண்புழு உரம், செம்மண் அல்லது மணல், தோண்டப்பட்ட காய்ந்த மேல் மண்ணை தலா ஒரு பங்கு வீதம் கலந்து குழியில் பாதிக்கு மேல் நிரப்பவேண்டும். குழி ஒன்றுக்கு 250 கிராம் வேப்பம் புண்ணாக்கு துாள் அல்லது இடிக்கப்பட்ட வேப்பம் விதைத்துாளை மண்ணுடன் கலக்கவேண்டும். அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போ பாக்டீரியா நுண்ணுயிர் கலவையை குழி ஒன்றுக்கு 50 கிராம் வீதம் தொழுஉரம், மண்புழு உரத்துடன் கலந்து துாவ வேண்டும்.ஒரு குழிக்கு 10 முதல் 20 விதைகள் விதைக்க வேண்டும். 15ம் நாள் நன்றாக வளர்ந்த செடிகளை தவிர மற்றவற்றை களைந்து விட வேண்டும்.

விதைத்த உடனும், அடுத்து 3ம் நாளும் அடுத்தடுத்து மண்ணின் தன்மைக்கேற்ப 4 முதல் 7 நாட்களுக்கொரு முறை நீர்பாய்ச்ச வேண்டும். பூச்சித்தாக்குதல் தென்பட்டால் 5 சதவீத வேப்பங்கொட்டை கரைசல் அல்லது 2 சதவீத வேப்ப எண்ணெய் கரைசலை தெளித்து கட்டுப்படுத்தலாம். பயிர்க்குழி விவசாயத்தின் மூலம் குறைந்த செலவில் நிறைந்த மகசூல் பெறலாம். நஞ்சில்லாத இயற்கை உணவு உற்பத்தி செய்யலாம்.

சத்துக்கள் வீணாகாமல் பறித்தவுடன் சமைக்கலாம்.

ராஜபாண்டி வேளாண்மை அலுவலர் சிங்காரலீனா
விதைப்பரிசோதனை அலுவலர்
விதைப்பரிசோதனை நிலையம்
நாகமலைபுதுக்கோட்டை
மதுரை, 81446 70180

Advertisement

 

மேலும் விவசாய மலர் செய்திகள்:We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X