இது உங்கள் இடம்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஆக
2021
00:00

சிறுவர்களிடமும் எச்சரிக்கை தேவை!
தோழி வீட்டிற்கு சென்றிருந்தபோது, அவள் வீட்டில் இல்லாததால், அருகே மைதானத்தில், சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்ததை, வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன்.
அப்போது, அங்கே வந்த இளம் பெண் ஒருவர், உடற்பயிற்சி செய்ய துவங்கினாள். அதுவரை, ஒழுங்காக கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள், அந்த பெண்ணை கண்டதும், அவளை ஓரக்கண்ணால் பார்ப்பதும், ஒருவருக்கொருவர், 'கமென்ட்' செய்வதுமாய் இருந்தனர்.
அவர்களுக்கு பின்னால் நான் நிற்பது தெரியாமல், அவர்களில் ஒருவன், 'மாப்ள... போன்ல பார்த்த மாதிரியே செமையா இருக்குதுடா...' என்றான்.
இன்னொருவன், ஆபாசமாக பேசியதை கேட்டு, அதிர்ச்சி அடைந்தேன்.
மேலும், அவர்களது கைகளில், 'ஆண்டிராய்டு' போன் இருந்தது, கூடுதல் அதிர்ச்சியை தந்தது. என் தோழி வந்ததும், அவளிடம் மைதானம் குறித்து கேட்டேன்.
'இந்த ஏரியா பெண்கள், இங்கு தான் உடற்பயிற்சி செய்வர்; நானும் இந்த மைதானத்தில் தான் உடற்பயிற்சி செய்வேன். விடுமுறையால், பள்ளி சிறுவர்கள், கிரிக்கெட் விளையாட வருவர்...' என கூறியவனிடம், நடந்ததை கூறினேன்.
அதிர்ச்சி அடைந்த தோழி, 'நான் ஒரு போதும் சிறுவர்களை உன்னிப்பாக கவனிப்பதில்லை. அவர்கள் பிஞ்சிலே பழுத்திருப்பது, நீ சொல்லிதான் தெரிகிறது...' என்றாள்.
'இனிமேல், மைதானத்திற்கு பாதுகாப்பான உடை அணிந்து செல்; சிறுவர்கள்தானே என, அசாதாரணமாய் எடை போடாதே... ஜாக்கிரதையாக இரு...' என, அறிவுரை கூறி வந்தேன்.
தோழியரே... சிறுவர்களையும் சாதாரணமாக எடை போட வேண்டாம்... ஜாக்கிரதை!
- இலக்கியா மகேஷ், கோவை.

வாசகர்களுக்கு உதவும் நுாலகர்!
அண்மையில், ஒரு நுாலகத்திற்கு சென்றிருந்தேன். மேஜையில், படிக்கும் இடத்தில் ஆங்காங்கே கொஞ்சம் துண்டு பேப்பரும், பேனாவும் வைக்கப்பட்டிருந்தது.
இதுகுறித்து நுாலகரிடம் கேட்டேன்.
'நுாலகத்திற்கு வரும் பலரிடம் குறிப்பெடுக்க பேனா, பேப்பர் இருக்காது. இதனால், பலர் புத்தகத்தின் முக்கிய பக்கத்தை யாருக்கும் தெரியாமல் கிழித்து விடுகின்றனர். பலர் பயனடைய வேண்டிய செய்திகளை, இப்படி கிழித்துப் போவதால், அது மற்றவர்களுக்கு கிடைக்காமல் போய் விடுகிறது. ஆகவே தான், இந்த ஏற்பாடு.
'இப்போது புத்தகங்களில் பக்கங்கள் கிழிபடுவது இல்லை. தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் மற்றும் வாசகர்கள் குறிப்பெடுத்துக் கொள்ளவும் வசதியாக இருக்கும்...' என்றார், நுாலகர்.
அவரின் நற்செயலை பாராட்டி வந்தேன்.
- பி. பாண்டியன், காரைக்குடி.

சுய தொழிலுக்கு வழிகாட்டி!
தையற் கடை வைத்திருக்கும் என்னை, தையல் மிஷின் வாங்க வேண்டும் என்று, உதவிக்கு அழைத்தார், வாடிக்கையாளர் ஒருவர்.
அவருடன் கடைக்கு சென்று, ஒரு தையல் மிஷினை வாங்கினோம். வாங்கிய மிஷினை, என் கடையில் தினக்கூலியாக பணிபுரியும் தையற்கார தொழிலாளிக்கு பரிசளித்தார், வாடிக்கையாளர்.
ஒன்றும் புரியாமல் பார்த்த என்னிடம், 'இன்று, என் பிறந்தநாள். ஒவ்வொரு ஆண்டும், எனக்கு அறிமுகமான சிறந்த தொழிலாளியை, முதலாளியாக்கி பார்ப்பது வழக்கம். சென்ற ஆண்டு, என் வாகனங்களை பழுது நீக்கும், மெக்கானிக் ஷாப்பில் பணிபுரியும், 'வெல்டிங்' வேலை செய்த பையனுக்கு, வெல்டிங் மிஷின் வாங்கிக் கொடுத்து, என் பிறந்தநாளை கொண்டாடினேன்.
'அதற்கு முந்தைய ஆண்டு, நான் வழக்கமாக சாப்பிடும் ஹோட்டலில் பணிபுரிந்த ஒரு முதிய பெண்மணிக்கு, டிபன் கடை ஆரம்பிக்க, தள்ளு வண்டி, கேஸ் அடுப்பு, இட்லி பானை இன்னும் சில பொருட்களை வாங்கி கொடுத்தேன். இது, இனியும் தொடரும்...' என்றார்.
அவரால் உள்ளம் நெகிழ்ந்த நான், அவரை முன் மாதிரியாக வைத்து, அவர் வழியை பின்பற்ற முடிவெடுத்துள்ளேன்.
- கே. கணேஷ், கடலுார்.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nagaraj - Doha,கத்தார்
24-ஆக-202112:58:44 IST Report Abuse
Nagaraj சுய தொழிலுக்கு வழிகாட்டி.... மிகவும் பாராட்டப்பட வேண்டிய செயல்
Rate this:
Cancel
Girija - Chennai,இந்தியா
15-ஆக-202120:07:41 IST Report Abuse
Girija @கே. கணேஷ், கடலுார். இதுமாதி ஊருக்கு ஒருவர் ஊஹீம் தெருவுக்கு ஒருவர் இருந்தால் எப்படி இருக்கும். உங்கள் பதிவை இப்படித்தான் நம்ப வேண்டும் . @இலக்கியா மகேஷ், கோவை. வெட்ட வெளியில் பெண்களால் அதிக பட்சம் ஸ்கிப்பிங், டம்பிள்ஸ், ஜாகிங், வாக்கிங் தான் செய்யமுடியும். புஷ் அப்ஸ்,வெயிட் லிபிட்டிங் போன்றவற்றை செய்ய முடியாது . பொது வெளியில் எக்சர்சைஸ் செய்யும் பெண்கள் டார்க் கலர், லூஸ் பிட்டிங் உள்ள ஆடைகளை தேர்ந்தெடுத்து அணிவது நல்லது. உடலுக்கும் அரோக்கியம், ஓநாய்களிடம் இருந்தும் எட்டி இருக்கலாம். சில பெண்கள் வாசகங்கள் போட்ட பனியனை வயது வித்தியாசம் இல்லாமல் அணிகின்றனர். இவர்களுக்கு எதனை ஆண்ட்ராய்டு , சிசிடிவி இருந்தாலும் கவலையில்லை. @பி. பாண்டியன், காரைக்குடி. லைப்ரரி புக்கை கிழிப்பது பிட் அடிக்கும் மாணவர்கள் தான், நூலகர் பேணா பென்சில் வைப்பதற்கு பதில் ஸிராக்ஸ் மெஷினைதான் வைக்க வேண்டும். மற்றவர்கள் எல்லோரும் தேவையான குறிப்புகளை செல்போனில் போட்டோ எடுத்துகொள்கின்றனர், எப்போது வேண்டுமாலாலும் படிப்பதற்கு வசதியாக.
Rate this:
Cancel
Manian - Chennai,ஈரான்
15-ஆக-202111:56:18 IST Report Abuse
Manian "சுய தொழிலுக்கு வழிகாட்டி"- - வாடிக்கையாளர்- இவர் உண்மையா உழைத்து 15% லாபத்தில் சம்பாதித்தவரா, இல்லை வடுவூர் வாணவராயர் ஜோசியர் செய்ய சொன்ன பரிகார பூஜையா என்ற விவரமும் வெளியிடுவீர்களா?-மாமூலர்களுக்கு இவரைப் பற்றி தெரியாது என்பது திராவிட திருடர்கள் களக மரபில்லையே நிலத்தடி நீர் திருடி செம்மல் இவரை சும்மாவிட்டாரா?:- துர்கா மாதிரி என் கணவரும் இப்படி செய்தால் முதல்வராவாரா?மேலைப் புத்தூர் மருக்கொளுந்து, அரசியல்வியாதி ஐயகோபெருமாள்(புனை பெயர்- தமிள் தியாகி ஜெயகோபாலன்)
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X