ராவணன் கோவில்கள்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஆக
2021
00:00

ஒரு நபருக்கு ஒரு தலை இருப்பது தான் சாத்தியம். அதிசயப்பிறவிகள் சில, இரட்டைத் தலையுடன் பிறக்கலாம். ஆனால், ராமாயண கதாபாத்திரமான, ராவணனுக்கு, 10 தலைகள் உண்டு. இதனால், இவனை, தசக்கிரீவன் -10 தலை உடையவன், என்பர்.
தசம் என்றால், 10. கிரீவம் என்றால் தலை. இவனை தசகந்தன் -10 தொண்டை உடையவன் என்றும், தசமுகன் - 10 முகம் உடையவன் என்றும் சொல்வதுண்டு.
பிராமணர் பிரிவைச் சேர்ந்தவன்; மாபெரும் சிவ பக்தன், ராவணன்.

சிவ பக்தர்களில் பலர், ராவணனை மிகவும் மதிப்பர். அதற்கு அடையாளமாக, ராவணனுக்கு உத்தரபிரதேசத்திலுள்ள பிஷ்ரக்ஹ் மற்றும் கான்பூரில் கோவில் கட்டியுள்ளனர். மத்திய பிரதேசத்திலுள்ள விதுஷா மாவட்டம், ராவண கிராமம், குஜராத்தில் மண்டூர் (ஜோத்பூர்) ஆகிய இடங்களிலும் கோவில்கள் உண்டு.
இவற்றில் கான்பூர் கோவில், ஆண்டுக்கு ஒருமுறை தசரா அன்று மட்டுமே திறக்கப்படும். தசரா அன்று, ராவணன் வதம் செய்யப்பட்டதாக, இங்குள்ள மக்கள் நம்புகின்றனர்.
வடமாநிலங்களில் தசரா அன்று, ராவணனின் பொம்மைகளை எரிப்பர். ஆனால், இந்தக் கோவிலில் மட்டும், ராவணனுக்கு சிறப்பு பூஜை செய்வர்.
குஜராத்திலுள்ள கோவிலில், பிராமணர்களில் ஒரு குறிப்பிட்ட பிரிவினர், தங்களை ராவணனின் வழித்தோன்றல்களாக கருதி, தசரா அன்று தர்ப்பணம், சிரார்த்தம் செய்வர். பிண்டம் கரைத்து அஞ்சலி செலுத்துவர்.
சாகாவரம் பெற விரும்பிய ராவணன், சிவனை எண்ணி தவமிருந்து, 10 தலை பெற்றான்.
ரிக், யஜுர், சாமம், அதர்வணம் என்ற நான்கு வேதங்கள் மற்றும் வேதாந்தம் - சடங்குகள், மந்திரங்கள்; வைசேஷிகம் - ஒரு பொருன் சிறப்புத்தன்மையை ஆய்வு செய்தல்; பாட்டம் - வேதமே தெய்வம் என்ற வாதம்; பிரபாகரம் - வேத ஆராய்ச்சி; பூர்வ மீமாம்சை - பூஜை, யாகம் குறித்த அறிவு; உத்தர மீமாம்சை - ஆழமாக சிந்தித்தல் என்ற, ஆறு சாஸ்திரங்கள், அவனுக்கு தலைகளாக அமைந்தன.
எல்லாம் அறிந்தவனுக்கு அடக்கம் வேண்டும். ஆனால், இத்தனையும் இருந்ததால், ஒவ்வொரு தலையிலும் காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாத்சர்யம், மனம், புத்தி, சித்தம், அகங்காரம் ஆகியவை ஏறி நின்றதாகவும் வர்ணிப்பர்.
ராவணனின் புகழ், 10 திசைகளிலும் பரவியிருந்ததால், அவன், 10 தலை உள்ளவனாக கருதப்படுவதாக, பாரதிதாசன் சொல்கிறார்.
தமிழகத்தில், புராணங்களின் அடிப்படையில், சிவனை, ராவணன் சுமந்து வரும் வகையில், கைலாய பர்வத வாகன பவனி, எல்லா பெரிய கோவில்களிலும் நடைபெறுகிறது.

தி. செல்லப்பா

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கதிரழகன், SSLC - சிவகங்கை, TN,சிங்கப்பூர்
23-ஆக-202101:21:13 IST Report Abuse
கதிரழகன், SSLC ராவணன் சூர பதுமன் ரெண்டு பேருமே பிராமின்ஸ் தான். அதான் ராமர் ராமேசுவரத்துல பிரம்ம ஹத்தி தோசம் நீங்க சிவபூசை செஞ்சாரு.
Rate this:
Manian - Chennai,ஈரான்
24-ஆக-202104:28:58 IST Report Abuse
Manianபெரியவரே, இதனால என்னா தெரியுதுன்னா, ரொம்பையும் திருடர்கள் களக பயலுக, பிராமணர்களை வம்பிக்கிளுத்தா, புதுசா ஐயர் ராவணன், பிரமண நவீன சூரபதுமன் மொளைப்பானுக. ஆகவே, கோயில் ஐயர் பூசாரிங்களை வம்புக்கிளுக்காதீங்கன்னு சொல்லுதியளா அதை தடுக்கானே துர்கம்மா கோயில் கோயிலாப் போக, சாமியே இனி வராதென்னு அவிங்க புருசனையே மொதல்வராக்கினாரு. இப்ப அவிங்க மகளுமே அதே பாணியிலே போராங்களே...
Rate this:
Cancel
Manian - Chennai,ஈரான்
19-ஆக-202123:10:08 IST Report Abuse
Manian பத்து தலை என்பது: 4 வேதங்கள்+6 சாஸ்திரங்களில் கரை கண்டவன்,இந்த எந்த விஷயத்திலும் தலை சிறந்தவன் என்பை குறிக்கவே 10 தலைகள் என்றார்கள். முருகனை இவ்விதமே -"ஏறு மயில் ஏறி விளைஆடு முகம் ஒன்றே, ஈசருடன் ஞான மொழி பேசும் முகம் ஒன்றே...ஆறுமுகமான பொருள் நீ..." என்றார்கள் 4 வேதங்களின் தலைவனை -பிரம்மனை சதுர்(4) முகன் என்றார்கள். இதையெல்லாம் அதிசய உக்தி என்றார்கள். நம்மினிலும் எல்லோருக்கும் வெவ்வேறு தலைகள் இருக்கின்றதே-அப்பாவிடம் பேசும் தலை,மகனிடம் பேசும் தலை, மனைவியை ஏசும் தலை, மேலதிகாரியிடம் ஏச்சு வாங்கும் தலை,ஓட்டை விற்கும் தலை, ஓசி கேட்கும் தலை, குவார்டர் குடிகார தலை..அரசியல் வியாதிகளுக்கு பல சின்ன வூடுகள், கூலிக்காரப் படைகளுடன் பேசும் போது ஆயிரம் தலைகள் உள்ளன. எனவே மாறு தலையே அடைய வேண்டும் :- இந்த மறைந்திருக்கும் தலைகளையே, ஐயா சங்கரர் "மாயை என்றார். அவருக்கும் இருதலை உண்டே- ஞானி, தாய் பாசம் மிக்க பிள்ளை( தாய்க்க ) கொள்ளி வைக்க வந்தாரே எந்ந எந்த மன நிலைஇல் எப்படிப் பட்ட தலைகளாக மாறுகிறோம் எனவே ஆறு தலையே அடைய வேண்டும்.ராவணனைப் பார்த்து(சொல்லக் கேட்டு ) ஒருதலைவனாக நாம் மாறவேண்டும். திருப்போகளூர் எண் தலை ஏகாம்பரநாதர், சந்நியாச தலையர்.,
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X