வாழைநார், வெட்டிவேர், தர்ப்பை, கோரை, மூங்கில், சணல், பருத்தி இவற்றில் தயாரான இயற்கை பொருட்களுடன் விரிந்திருக்கிறது கோவை, ஆர்.எஸ்.புரம் 'கடைப்பை' அங்காடி.
'பயோ சயின்ஸ்' பட்டதாரி நான். சுற்றுச்சூழல் விழிப்புணர்வை இந்த தொழில் மூலமா மக்களுக்கு ஏற்படுத்துறேன்' என்கிறார் அ.அனிதா ராஜலட்சுமி.
கடைக்குள்...
வாழைநாரில் பழக்கூடை, லாண்டரி கூடை, பூக்கூடை, அன்பளிப்பு கூடை உள்ளிட்டவை 50ற்கும் மேற்பட்ட வடிவங்களில் விற்பனைக்கு இருக்கின்றன. வெட்டிவேர்/ வாழைநார்/ கோரைப்புல் ஜன்னல் திரைச்சீலைகள், வெட்டிவேர் கைவிசிறி, டவல் ஹேங்கிங், வாழைநார்/ வெட்டிவேர் யோகா மேட், பூஜையறைக்கான தர்ப்பை விரிப்பு, ஷாப்பிங்/ லஞ்ச் மற்றும் திருமண தாம்பூலத்திற்கான பருத்தி/ சணல் பைகள், மூங்கில் பட்டை நாரில் துண்டு, கைக்குட்டை உள்ளிட்டவையும் உண்டு!
இவற்றோடு தேங்காய் சிரட்டையில் கிண்ணம்/ குவளை/ ஜாடி உள்ளிட்ட சமையலறை பொருட்களும் இங்கிருக்கின்றன. நுாறு சதுர அடியில் மூங்கில் பசுமை அங்காடிகளை இந்தியா முழுக்க நிறுவி இப்பொருட்களை விற்பனை செய்வது அனிதாவின் இலக்கு.
சிறப்பு பொருள்
துாக்கமின்மை, தலை பாரம், உடல் உஷ்ணம் சீராக்கும் 'வாழைநார், வெட்டிவேர்' தலையணை - ரூ.600 வரை
போன்: 81109 96026