பழைய வடிவம்; புதிய திறன் | டெக் டைரி | Tech Diary | tamil weekly supplements
பழைய வடிவம்; புதிய திறன்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

13 செப்
2021
00:00

பிரபல ஜே.பி.எல்., நிறுவனம், புதிய புளுடூத் ஸ்பீக்கர் மற்றும் இரண்டு பார்ட்டி ஸ்பீக்கர்களை அறிமுகம் செய்துள்ளது.

ஜே.பி.எல்., பிளிப் 6:
இந்நிறுவனத்தின் புகழ்பெற்ற, 'பிளிப் 5 புளுடூத் ஸ்பீக்கர்' இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மேம்படுத்தப்பட்டு, 'ஜே.பி.எல்., பிளிப் 6' எனும் பெயரில் புதிதாக அறிமுகம் ஆகியுள்ளது.
இருப்பினும், வடிவத்தில் எந்த பெரிய மாறுதலும் செய்யப்படவில்லை. பேட்டரி திறனிலும் மாறுதல்கள் இல்லை. முந்தைய மாடலை போலவே, 12 மணி நேரம் தாக்குப்பிடிக்கும் வகையில் இந்த ஸ்பீக்கர் உள்ளது.
நவம்பரிலிருந்து இது விற்பனைக்கு கிடைக்கும் என தெரிகிறது.
தோராய விலை: அமெரிக்காவில் 9,500 ரூபாய்

பார்ட்டி ஸ்பீக்கர்கள்

ஜே.பி.எல்., நிறுவனம், 'பார்ட்டிபாக்ஸ் 110' மற்றும் 'பார்ட்டிபாக்ஸ் 710' என இரு ஸ்பீக்கர்களை அறிமுகம் செய்துள்ளது.

இந்த புதிய பார்ட்டி ஸ்பீக்கர்கள், முந்தைய மாடல்களை விட அதிக திறனும் வசதியும் கொண்டவையாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவற்றில், பார்ட்டிபாக்ஸ் 110 ஸ்பீக்கர் 160 வாட் ஆர்.எம்.எஸ்., அவுட்புட் பவரும், பார்ட்டிபாக்ஸ் 710 ஸ்பீக்கர் 160 வாட் ஆர்.எம்.எஸ்., அவுட்புட்டும் கொண்டுள்ளன.
பார்ட்டிபாக்ஸ் இரண்டும், அக்டோபரிலிருந்து அமெரிக்காவில் விற்பனைக்கு வருகின்றன.

தோராயவிலை:
பார்ட்டிபாக்ஸ் 710 : 64,900 ரூபாய்.
பார்ட்டிபாக்ஸ் 110: 31,000 ரூபாய்.

Advertisement

 

மேலும் டெக் டைரி செய்திகள்:



We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X