நகைச்சுவை மன்னன் எஸ்.வி. சேகரின் டிராமாயணம் (20)
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 செப்
2021
00:00

கடந்த, 19 வாரங்களாக என்னுடன் பயணித்த வாசகர்களுக்கு, நன்றி சொல்லும் வாரம் இது:
ஆம்... இந்த வாரத்துடன், என் டிராமாயணத்தின் ஒரு காண்டத்தை நிறைவு செய்கிறேன். உங்களிடம் பகிர்வதற்கு நிறைய விஷயங்கள் இருக்கின்றன. காலமும், நேரமும், கடவுளின் அனுக்கிரகமும் கூடி வரும்போது, மீண்டும் சந்திப்போம்.
ஒன்று மட்டும் நிச்சயம். ஒரு மனிதனுக்கு, குடும்பத்தின் அன்பும், ஆதரவும் மட்டும் இருந்து விட்டால், எதை வேண்டுமானாலும் சாதிக்க முடியும். அதற்கு நானே உதாரணம்.
என் இன்றைய சிறப்பான நிலைக்கும், சந்தோஷத்திற்கும் காரணமான தந்தை எஸ்.வி.வெங்கட்ராமன், தாய் அலமேலு, மனைவி உமா மகேஸ்வரி, மகள் அனுராதா சேகர் - மாப்பிள்ளை பரத், பேத்தி அதிரா பரத், மகன் அஷ்வின், மருமகள் ஸ்ருதி, பேத்தி ஆர்ணா அஷ்வின், பேரன் ஆர்யன், தங்கை சுசிலா - கணவர் சேதுராமன், தம்பி ராஜா வைத்தியநாதன் - மனைவி கிரிஜா, கடைசி தம்பி கிருஷ்ணமூர்த்தி - லதா கிருஷ்ணமூர்த்தி.
என்னுடன் ஆரம்ப காலம் முதல் பயணிக்கும், ஈ.வெ.ரா.மோகன், ஸ்டில்ஸ் ரவி, ஆடிட்டர் ராமகிருஷ்ணன், சுரேஷ் சாரி, வழக்கறிஞர் வெங்கடேஷ் மகாதேவன், வின், 'டிவி' தேவநாதன் யாதவ், சந்துரு நாடகப்பிரியா நிர்வாகி கிருஷ்ணகுமார், நெல்லை வசந்தன்.
என்னுடைய சம்பந்திகள் கோபிசெட்டிபாளையம் ஜெயராமன் - மாதங்கி, போரூர் சவுந்திரராஜன் - ஜோதிலட்சுமி, மனைவியின் சகோதரர் பிரபுராம் - தாரணி மற்றும் உலகெங்கிலும் இருந்து என்னை நேசிக்கும் ரசிகர்களாகிய நண்பர்கள். எல்லாவற்றுக்கும் மேலாக, நான் இப்போது குடியிருக்கும் வீட்டை வாங்க உதவிய, 'தினமலர் - வாரமலர்' அந்துமணி ஆகியோருக்கு, என் நெஞ்சார்ந்த நன்றிகள்!
கடந்த, 40 ஆண்டுகளாக சமூக சேவையில் ஈடுபட்டு வருகிறேன். என் நாடகங்களை காண, நீங்கள் வாங்கும் டிக்கெட் மூலம் வரும் வருமானத்தில் கணிசமான பகுதி, சமுதாயத்தில் நலிந்தவர்களுக்கு, நல நிதியாக வெகு காலமாக கொடுக்கப்பட்டு வருகிறது. இப்போதும், ஸ்ரீ சுகர் பொதுத்தொண்டு நிறுவனம், நாடகப்பிரியா டிரஸ்ட் மூலமாக இது தொடர்கிறது.
வாசகர்கள் பார்க்கும் வடிவங்கள் வேண்டுமானால், 'ஐபேட், ஆன்ட்ராய்ட் போன்' மற்றும் 'டிவி' என்று, பலவித வடிவங்களில் மாறலாம். ஆனால், அதில் பார்க்க வேண்டிய விஷயம், அன்று தொட்டு இன்று வரை, என் நாடகமாகவும் இருக்கிறது; இருக்கும்.
இன்றைய ரசிகர்களின், 'டிரெண்டை' புரிந்து, நானும் நாடகத்தை தற்போது, 'ஆன்லைனில்' வழங்கி வருகிறேன். 100 நிமிடத்தில், 200 சிரிப்பிற்கு, 'கியாரண்டி'யான இந்த நாடகத்தை, நீங்கள் குடும்பத்துடன் வீட்டு வரவேற்பறையில் உட்கார்ந்து பார்க்கலாம் என்பது தான்.
எத்தனையோ விருதுகள், எவ்வளவோ கவுரவ டாக்டர் பட்டம் பெற்றாலும் ரசிகர்கள், என் நாடகத்தை பார்த்து ரசித்து தரும் கை தட்டலைத்தான் பெரிதினும் பெரிதாக மதிக்கிறேன்.
தேசியமும், தெய்வீகமும் தான், என் இரு கண்கள். என் எல்லா உடையிலும் தேசியக் கொடியின் சின்னம் இடம் பெற்றிருக்கும். அதே போல, என் சம்பந்தப்பட்ட எல்லா புகைப்படங்களிலும், 'கடவுள் நம்மோடு இருக்கும் போது, யார் நம்மை எதிர்க்க முடியும்...' என்று, ஒரு வாசகம் தவறாது இடம் பெற்றிருக்கும்.
வாசகர்களாகிய உங்களுக்கு, என் நினைவாகவும், நிறைவாகவும் அந்த வாசக வார்த்தையே பரிசாக தந்து தொடரை நிறைவு செய்கிறேன். நன்றி, வணக்கம்!

இவரை பற்றி அவர்
ஸ்ரீ எஸ்.வி.சேகர்ஜிக்கு நமஸ்காரம். நாடக மேடையில் நீங்கள் தனித்துவமானவர். உங்கள் திறமை காரணமாக, நீங்கள் பிறந்த தமிழ் மண்ணிற்கு மட்டுமின்றி, இந்த நாட்டுக்கே பெருமை சேர்த்து வருகிறீர்கள். நாடகத்திற்கு தரும் அதே முக்கியத்துவத்தை சமூக சேவைக்கும் தந்து வரும் உங்கள் பண்பு, பாராட்டத்தக்கது மட்டுமல்ல, போற்றத்தக்கதும் கூட. மென்மேலும் வாழ்க்கையில், கலையில், சமூகத்தில் வெற்றிகளை குவித்திட மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.
— பாரதப் பிரதமர் மோடி

- நிறைவு பெற்றது.
என்னைத் தொடர்பு கொள்ள விரும்புவோர்,
மொபைல் எண்: 98410 23545
மின்னஞ்சல் முகவரி: mylaporemla@gmail.com

- எல். முருகராஜ்

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
த.கண்ணதாசன்,நாட்டுச்சாலை - நாட்டுச்சாலை,இந்தோனேசியா
23-செப்-202115:48:43 IST Report Abuse
த.கண்ணதாசன்,நாட்டுச்சாலை இவனெல்லாம் நகைசுவை மன்னன் என்றால் உண்மையான நகைசுவை நடிகரை என்னவென்று சொல்வது ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X