திண்ணை!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 செப்
2021
00:00

வீட்டில், நண்பரின் மகனை வேலைக்கு வைத்திருந்தார், கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்.
அவர் ஒருமுறை, பணப் பெட்டியிலிருந்து, 200 ரூபாய் எடுத்து விட்டார். காருக்கு பெட்ரோல் போட்டு, கணக்கு பார்த்தபோது தான், அவரது செயல் வெளிப்பட்டது.
படித்தவன், அத்துடன் நண்பனின் மகன் என்பதால், அவரை அழைத்த, என்.எஸ்.கே., 'கணக்குப்பிள்ளையை மாட்டி விடத்தானே நீ பணத்தை எடுத்தாய். படித்தவன் நீயே இப்படி செய்யலாமா...
'உன் தந்தையோ மானஸ்தன். அவனுக்கு இது தெரிந்தால், உயிரை விட்டு விடுவான். அதனால், உன்னை விரட்டி விடவும் மாட்டேன். இன்று முதல், வீட்டு வரவு - செலவுகளை நீயே கவனித்துக் கொள். பணம் குறைந்தால் உனக்கு தான் தண்டனை...' என்று சொல்லி, பெட்டி சாவியையும், பணப்பையையும் அவனிடம் கொடுத்தார்.
அதன்பின், அந்த பொறுப்பை சரியாகவே செய்தார், அந்த நபர்.

புகழ்பெற்ற ரஷ்ய எழுத்தாளர், டால்ஸ்டாய், சிறந்த நுால்களை எழுதியிருந்தபோதும், ஏழையாகவே வாழ்ந்தவர். ஒருமுறை, வீதியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது,
எதிரில் ஒரு பிச்சைக்காரன் வந்து, 'ஏதேனும் கொடுங்கள்...' என்று கேட்டான்.
தன் பையில் கையை விட்டு தேடிப் பார்த்து, எதுவும் கிடைக்காததால், அவனிடம், 'சகோதரரே, உனக்கு தருவதற்கு இப்போது என்னிடம் எதுவுமில்லை...' என்று, அன்பான வார்த்தைகளில் சொன்னார்.
அவரின் வார்த்தைகளில் நெகிழ்ந்த பிச்சைக்காரன், 'என்னை ஒரு மனிதனாக மதித்து, 'சகோதரர்' என்று அன்புடன் அழைத்தீர்களே. அதுவே போதும்...' என்று சொல்லி, விடைபெற்றான்.

ஒருமுறை, அம்பேத்கரும், அவர் நண்பரும், கல்கத்தா நகர வீதியில் நடந்து சென்று கொண்டிருந்தனர்.
அப்போது, கரடியை வைத்து ஒருவன், 'கரடியின் ஒரு முடியை வாங்கினால் பணக்காரர் ஆகலாம்...' என்று, கூவிக்கூவி, விற்றுக் கொண்டிருந்தான். கரடி முடியை வாங்கிவிட வேண்டும் என்று, அவனை நெருங்கினார், அம்பேத்கரின் நண்பர்.
அவரை தடுத்த அம்பேத்கர், 'நான் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்லிய பின், அந்த முடியை வாங்குங்கள்...' என்றவர், 'நீ, எத்தனை முடி வாங்கினால் பணக்காரனாவாய்...' என்று கேட்டார்.
'ஒரே ஒரு முடி போதும்...' என்றார், நண்பர்.
'நீர் ஒரு முடி வாங்கினால் பணக்காரனாவாய், சரி. ஆனால், அந்த கரடியை வைத்திருக்கிறானே வியாபாரி, அவன் ஏன் பணக்காரன் ஆகாமல், அதை வைத்து பிழைப்பு நடத்துகிறான்...' என்று, கேட்டார், அம்பேத்கர்.
தன் தவறை உணர்ந்தார், நண்பர்.

காங்கிரஸ் கட்சியிலிருந்து பிரிந்து, தனியாக, 'சுதந்திரா கட்சி' என்ற ஒன்றை துவக்கினார், ராஜாஜி. கட்சியை வளர்த்தெடுக்க, ஊர் ஊராக சென்று உறுப்பினர் சேர்ப்பது மற்றும் நிதி வசூலிப்பது என்று, சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்த காலம்.
கடலுார் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்தார், ராஜாஜி. அங்குள்ள பண்ருட்டியில், அவர் பல முக்கியஸ்தர்களை சந்தித்து, ஆதரவு திரட்டிக் கொண்டிருந்தார்.
மார்க்கெட் பகுதி ஜவஹர் வீதியில், விசேஷங்களுக்காக, 'லைட்' வாடகைக்கு விடும், ரத்தினவேல் நயினார் என்பவரையும், தன் ஆதரவாளர்களுடன் சென்று சந்தித்து, சுதந்திரா கட்சிக்கு ஆதரவும், நிதியும் கேட்டார்.
காங்கிரஸ் கட்சியின் ஆதரவாளரான, ரத்தினவேல் நயினார், ராஜாஜியின் கட்சிக்கு ஆதரவளிக்க மறுத்து விட்டார்.
ராஜாஜியுடன் வந்தவர்கள் வற்புறுத்திக் கேட்டும், ஒரு ரூபாய் கூட, கட்சிக்கு நன்கொடை கொடுக்க மறுத்து விட்டார், அந்த, 'லைட்' கடைக்காரர்.
அவரது வீட்டை விட்டு வெளியே வந்த ராஜாஜி, தன் ஆதரவாளர்களிடம், 'இந்த பகுதியில் நம் கட்சி வேரூன்றுவது மிகவும் சிரமமான காரியம் தான்...' என்றார்.
அவர் சொன்னபடி, அந்த பகுதியில், சுதந்திரா கட்சி வேரூன்றவே இல்லை.

நடுத்தெரு நாராயணன்

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramaraj P -  ( Posted via: Dinamalar Android App )
24-செப்-202117:02:41 IST Report Abuse
Ramaraj P மேலும் இன்றைய தேதியில் அம்பேத்கரின் சட்டம் பணம் படைத்தவர்கள், அரசியல் வாதிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.அம்பேத்கரை வைத்து தலித் கட்சிகள் வாழ்க்கை நடத்துகிறது.
Rate this:
Cancel
Ramaraj P -  ( Posted via: Dinamalar Android App )
24-செப்-202117:00:01 IST Report Abuse
Ramaraj P மேலும், அந்த காலத்தில் கரடி என்பது பாண்டா கரடி அல்ல அது கிட்டத்தட்ட 40-கிலோ உள்ள கருப்பு கரடி. அதை யாரும் அவ்வளவு எளிதில் வளர்ப்பு கரடி ஆக மாற்ற முடியாது.
Rate this:
Cancel
M Selvaraaj Prabu - Gaborone,போஸ்ட்வானா
19-செப்-202123:58:40 IST Report Abuse
M Selvaraaj Prabu //ஆனால், அந்த கரடியை வைத்திருக்கிறானே வியாபாரி, அவன் ஏன் பணக்காரன் ஆகாமல், அதை வைத்து பிழைப்பு நடத்துகிறான்// அவன் ரோட்டில் நின்று வேலை (பிழைப்பு) செய்கிறான் என்பதால் அவன் ஏழை என்று நினைத்த அம்பேத்காரை நினைத்தால் சிரிப்புதான் வருகிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X