மலேசிய தமிழரின் முள்ளில்லா அன்னாசி விவசாயம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 செப்
2021
00:00

பழம், ஜூஸ், அழகு கிரீம் தயாரிக்கும் ரகசியம்

மலேசிய தலைநகரம் கோலாலம்பூரிலிருந்து ஒரு மணி நேர பயணத்தில் சிலாங்கூர் மாநிலத்தை அடையலாம். அங்கே 25 ஏக்கர் நிலத்தில் முள்ளில்லா அன்னாசி பயிரிட்டு விவசாய தொழில்முனைவோராக மாறியுள்ளார் மலேசிய தமிழரான நவ்னீத் பிள்ளை. இவரது பூர்வீகம் காரைக்கால்.
புத்தக வெளியீட்டாளராக தொழிலதிபராக இருந்த நவ்னீத் பிள்ளை விவசாயத்தின் பக்கம் தன் பார்வையை மாற்றியுள்ளார். ஐந்து தலைமுறைகளாக மலேசியாவில் குடியிருக்கும் இவர் விவசாயத்தின் மீதான ஆர்வத்தை விவரிக்கிறார்.

விவசாயம் செய்ய நினைத்த போது 3 ஆண்டுகளுக்கு முன் மலேசிய அரசின் உதவியை நாடினேன். விவசாயம் செய்ய நினைப்பவர்களுக்கு அரசு பயிற்சி அளித்து உதவி செய்கிறது. மலேசியாவில் ஆண்டு முழுக்க மழையும் வெயிலும் இருக்கும் என்பதால் அன்னாசி பழங்கள் நன்கு வளரும் என்பதை அறிந்தேன். சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள பழப்பள்ளத்தாக்கில் அரசு நிலத்தில் குத்தகைக்கு 25 ஏக்கரில் அன்னாசி சாகுபடி செய்துள்ளேன். இது எம்.டி 2 எனப்படும் மில்லி டில்லார்டு ரகம். இதில் காரல் தன்மை இருக்காது என்பதால் நாக்கு அரிக்காது. நல்ல இனிப்புச் சுவையுடையது. மேற்பகுதியில் முட்களும் இருக்காது. இது மலைப்பாங்கான ஏற்ற இறக்கமாக உள்ள பகுதி. குறைந்தளவே செடிகள் வைத்து சுற்றிலும் களைகள் வளராமல் இருக்க பாலித்தீன் பாய் விரித்து 10 ஏக்கரில் 50 ஆயிரம் கன்றுகள் நட்டேன். மலேசியன் பைன்ஆப்பிள் இன்டஸ்ட்ரி போர்டு பயிற்சி, வழிகாட்டுதலுடன் 50ஆயிரம் கன்றுகளையும் இலவசமாக வழங்கியது. விவசாயத் துறை சார்பில் மண் பரிசோதனை இலவசமாக செய்து தந்தனர்.

கன்று வைத்து 14 மாதங்கள் கழித்து தான் பலன் கிடைக்கும். அதுவரை சும்மா இருக்கவில்லை. என்.பி. ஏசியா பிரைவேட் லிமிட்டெட் தொடங்கி மற்றவர்களின் தோட்டத்து அன்னாசி பழங்களை வாங்கி விற்க ஆரம்பித்தேன். நிறைய வாடிக்கையாளர்கள் கிடைத்த போது எனது தோட்டத்து பழங்கள் அறுவடைக்கு தயாராக இருந்தது. இதனால் விற்பனைக்கு சிரமப்படவில்லை. வெறுமனே பழங்களை மட்டும் விற்காமல் அதை ஜூஸ் ஆக மாற்றினேன். இதில் பிரிசர்வேடிவ், சர்க்கரை, ரசாயனம் எதுவும் இல்லை. ஜூஸ் மட்டுமேயான விற்பனைக்கு இருமடங்கு லாபம் கிடைக்கிறது.

அடுத்ததாக அன்னாசியின் நடுத்தண்டு பகுதியிலிருந்து அழகுக்கிரீம் தயாரிப்பதற்கான ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளேன். விவசாயியாக நான் வெற்றி பெற்றதை பாராட்டும் வகையில் சிலாங்கூர் மாநிலத்தில் விவசாயம் மற்றும் உணவு தொழில்துறை சார்பில் சிறந்த நான்கு விவசாயிகளில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டு அரசின் மானியமாக மலேசிய மதிப்பில் 20ஆயிரம் ரூபாய் பெற்றேன். தற்போது தேங்காயிலிருந்து தேங்காய்ப்பால் தயாரித்து விற்பனை செய்கிறேன்.

எனது நிலத்தில் ஐ.ஓ.டி எனப்படும் நவீன தொழில்நுட்ப சென்சார் அமைத்துள்ளேன்.
நிலத்தை 6 பகுதிகளாக பிரித்து வீட்டில் இருந்து கண்காணிக்கிறேன். எந்த பகுதியில் தண்ணீர், நுண்ணுாட்டச்சத்து பற்றாக்குறை உள்ளதென கண்காணித்து அதற்கேற்ப தண்ணீர்ப்பாதையை மாற்ற முடியும். இதனால் ஒவ்வொரு செடியாக சென்று பார்க்க வேண்டிய நேரம், அலைச்சல் குறைகிறது. இதன் மூலம் விவசாயத்தின் தரம் உயர்கிறது. தற்போது பழத்தோட்டம், தொழிற்சாலை, ஆராய்ச்சிமையம் ஒருங்கிணைந்து செயல்படுத்துவற்காக அரசிடம் 100 ஏக்கர் குத்தகை நிலம் கேட்டு விண்ணப்பித்துள்ளேன்.

விவசாயப் பணிகளை எளிமையாக்கினால் விவசாயிகள் ஆர்வமாக வேலை செய்வர். எந்தெந்த பணிகள் கடினமாக உள்ளதென முதலில் கண்டறிய வேண்டும். தண்ணீர் பாய்ச்சுவது, களை எடுப்பது கடினமான வேலை. அதை தவிர்த்து விட்டேன். இதனால் விவசாய வேலை செய்பவர்கள் களைப்பாக சலிப்பாக உணர்வதில்லை. இதுவும் விவசாய வெற்றிக்கு முக்கிய காரணம் என்றார்.

தொடர்புக்கு: Navanith Pillay

- எம்.எம்.ஜெயலெட்சுமி, மதுரை

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhakkiya - Salem,இந்தியா
27-செப்-202121:21:19 IST Report Abuse
Bhakkiya More information get this story for pineapple production and value add products. your connect number please any clearfication get a idea from you.thank you.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X