அந்துமணி பா.கே.ப.,
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 செப்
2021
00:00

பா - கே

ஆஸ்திரேலியாவில் வசிக்கும் நண்பர் ஒருவர், விடுமுறைக்காக சென்னை வந்திருந்தார். கடந்த வாரம் மீண்டும் ஆஸ்திரேலியா திரும்ப இருப்பதாகவும், விமான நிலையத்திற்கு உடன் வரமுடியுமா என்றும் கேட்டார்.
'கொஞ்சம் வேலையிருக்கு, முடித்துவிட்டு, சரியாக, மாலை, 6:00 மணிக்கு, உன் அலுவலகத்திற்கு வந்து விடுகிறேன். காரில் சென்றால், ரோடு டிராபிக் அதிகமாக இருக்கும். 7:00 மணிக்குள் விமான நிலையத்தில் இருக்க வேண்டும். ஆகவே, மெட்ரோ ரயிலில் சென்று விடலாம்...' என்றார், நண்பர்.

நானும் இதுவரை, மெட்ரோ ரயிலில் பயணித்ததில்லை ஆதலால், உடனே சம்மதித்தேன்.
சென்னை, அண்ணாசாலை, எல்.ஐ.சி., மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து கிளம்புவதாக முடிவாயிற்று.
ரயில் நிலையத்தினுள் நுழைந்ததும், 'ஏசி' குளிர் காற்று முகத்தில் பட்டது. டிக்கெட் கவுன்டரில், விமான நிலையத்திற்கு இரண்டு டிக்கெட் வாங்கி வந்தேன். பிளாஸ்டிக் டோக்கன் வடிவில்இருந்தது, டிக்கெட். அதை பயன்படுத்தி பிளாட்பார்முக்கு செல்வது எப்படி என்று, மெட்ரோ ஊழியர் ஒருவர் வழிகாட்டினார்.
பிளாட்பார்முக்கு வந்த ஐந்தாவது நிமிடம், ரயில் வந்து நின்றது. தானியங்கி கதவுகள் திறந்து கொள்ள, பொது பெட்டியில், சூட்கேஸ்களை உருட்டியபடி உள்ளே சென்று, இருவர் அமரும் இருக்கையில் அமர்ந்தோம்.
அலுவலகம் முடிந்து திரும்பும் பயணியரால் நிரம்பி வழிந்தது, மெட்ரோ ரயில். பயணியர் அனைவரும், 'மாஸ்க்' அணிந்திருந்தனர். ஆனாலும், சமூக இடைவெளி... கேள்விக்குறி! இடைவெளி விட்டு அமரும் விதத்தில், இருக்கையில், 'ஸ்டிக்கர்' ஒட்டி இருந்தாலும், யாரும் அதை சட்டை செய்யாமல் நெருக்கியடித்து அமர்ந்திருந்தனர். 90 சதவீதம் பேர், மொபைல் போனில் எதையோ மேய்ந்து கொண்டிருந்தனர்.
தன்னுடைய பாஸ்போர்ட், விசா மற்றும் டிக்கெட் ஆகியவற்றை சரிபார்த்துக் கொண்டிருந்தார், நண்பர்.
என் எதிரில் இருந்தவரிடம், 'விமான நிலையத்திற்கு இன்னும் எத்தனை ஸ்டேஷன்கள் உள்ளன...' என்று கேட்டேன்.
நான் முதன்முதலாக, மெட்ரோ ரயிலில் பயணிப்பவன் என்று தெரிந்து கொண்டாரோ என்னவோ, என்னை ஏற இறங்க பார்த்து, 'கடைசி நிறுத்தம் தான், விமான நிலையம். அதுமட்டுமல்லாம, ஒவ்வொரு ரயில் நிலையம் வருவதற்கு முன்பும், அறிவிப்பு செய்வர்...' என்றார்.
நான் சுற்றிலும் பார்வையை சுழற்றினேன். நாங்கள் அமர்ந்திருந்த அடுத்த பெட்டி, பெண்களுக்கானது. ஏதோ ஒரு நிலையத்தில் (நான் அறிவிப்பையும் கேட்கவில்லை; ரயிலினுள் இருந்த, 'டிஜிட்டல்' பலகையையும் பார்க்கவில்லை.) ரயில் நின்றதும், 'திமுதிமு'வென, ஆண்களும், பெண்களும் ரயிலினுள் ஏறினர்.
எதிரில் இருந்தவரிடம், 'இப்பகுதியில் ஏதாவது அரசு அலுவலகம் இருக்கிறதா?' என்றேன்.
'ஆமாம். எப்படி சரியாக கண்டுபிடிச்சீங்க...' என்றார், அவர்.
'ஒரு அனுமானம் தான்...' என்று சமாளித்தேன்.
இளம் பெண்களில் பெரும்பாலோர், இடமின்மை காரணமாக, நின்றபடி பயணித்தனர். காதில், 'ஹெட்போனை' மாட்டி, மொபைலில் எதையோ மும்முரமாக பார்த்துக் கொண்டிருக்க, நடுத்தர வயது பெண்களில் சிலரும், அதில் கவனமாக இருந்தனர்.
இன்னும் சிலர், டிபன் பாக்சில் இருந்து நொறுக்கு தீனிகளை எடுத்து மொசுக்க ஆரம்பித்தனர். தோழிகள் சிலர், எதை பற்றியோ பேசி, சிரித்து கொண்டிருந்தனர். நாங்கள் இருந்த பெட்டியில் சில ஆண்களும், போனில் சத்தமாக பேசிக் கொண்டிருந்தனர். மொத்தத்தில், டப்பாவில் கூழாங்கற்களை போட்டு குலுக்கினால், எப்படி சத்தம் வருமோ, அதுபோல், 'கசகச'வென்று சத்தம், காதில் ஒலித்தது.
அடுத்து வந்த நிலையத்தில், இரண்டு பைகளை சுமந்தபடி ஒரு பெண்ணும், 7 வயது சிறுவனும் ரயிலில் ஏறினர். அவருடன் வந்த ஆண், ஏறுவதற்குள், தானியங்கி கதவு மூடிக் கொண்டது. அந்த சிறுவன், 'அப்பா, அப்பா...' என்று அலறிய அலறலில், அனைவரும் திடுக்கிட்டு பார்த்தோம்.
மனைவியும், குழந்தையும் ஏறிவிட, கணவர் ஏற முடியாதது அப்போது தான் தெரிந்தது. பெரிதாக அழ ஆரம்பித்தான், சிறுவன்.
புறநகர் மின்சார ரயிலோ, எக்ஸ்பிரஸ் ரயில் என்றாலோ, அபாய சங்கிலி இருக்கும். அதை பிடித்து இழுத்தால், ரயில் நின்று விடும். ஆனால், இதில் அப்படி சங்கிலி எதுவும் காணப்படவில்லை.
சுற்றும் முற்றும் பார்க்க, கதவோரம், 'அவசர உதவி' என்ற எழுத்துக்களும், சிவப்பு நிற கூண்டுக்குள் பட்டனும் இருப்பதை பார்த்து, உடனே பட்டனை அழுத்தினேன். மெதுவாக கிளம்பிய ரயில், உடனே நின்றது. ரயில் நிலைய ஊழியர்கள் ஓடிவந்து நிலைமையை புரிந்து பிரச்னையை தீர்த்தனர். அனைவரிடமிருந்தும் நிம்மதி பெருமூச்சு எழுந்தது.
ஒருவழியாக, 6:50 மணிக்கு, விமான நிலையம் வந்தடைந்தோம். ரயில் நிலையத்திலிருந்து, விமான நிலையத்திற்கு செல்ல, உட்புறமாகவே வசதி செய்யப்பட்டிருந்ததால், விரைவில் சென்றடைந்தோம்.
வெளிநாட்டுக்கு செல்லும் பயணியர் வரிசையில், நண்பரும் சேர்ந்து கொள்ள, அவருக்கு விடைக் கொடுத்து, மீண்டும் மெட்ரோ ரயிலில் ஏறி அமர்ந்தேன். இப்போது கூட்டம் குறைவாக இருந்தது. என்றாவது ஒருநாள், பகல் நேரத்தில், இதில் பயணம் செய்து, நன்றாக வேடிக்கை பார்த்தபடி வர வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.
எல்.ஐ.சி., நிலையத்தில் இறங்கி, அலுவலகம் சென்று, என், 'அட்லசில்' வீட்டிற்கு பறந்தேன்.



தினமும், 15 முதல் 30 நிமிடம் வரை நடைப்பயிற்சி செய்வது, மிகவும் அவசியம்
* நடைப்பயிற்சியால், புரத கூறுகள் அதிகரித்து, மன அழுத்தம் குறைகிறது. இதனால், மூளையின் ஆரோக்கியம் அதிகரித்து, மறதி நோய் மற்றும் நரம்பியல் சிதைவுகள் ஏற்படாமல் தடுக்கப்படுகிறது
* கண் பார்வை தெளிவாகி, கண் அழுத்த நோய் வராமல் தடுக்கிறது
* நடைப்பயிற்சியால் ரத்த அழுத்தம் குறைகிறது. இதனால், கொழுப்பும் குறையும். மேலும், ரத்த ஓட்டமும் அதிகரிக்கிறது. இதயம் தொடர்பான நோய்கள் குறைந்து, ஆரோக்கியமாக இதயம் செயல்பட வழி வகுக்கிறது
* முறையான நடைப்பயிற்சியால், நுரையீரலில் பிராண வாயு அதிகரித்து, உடலின் மற்ற பகுதிகளுக்கும் செல்கிறது மற்றும் நுரையீரலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, சுவாசக் கோளாறுகளை நீக்குகிறது
* நம் கணையங்களை வலுவாக்குகிறது. உடலில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது; மேலும், சர்க்கரை நோய் வராமல் தடுக்கிறது
* செரிமானம் அதிகரிக்கிறது. பெருங்குடல் புற்றுநோய் வராமல் தடுக்கிறது. வாயுவும் உண்டாவதில்லை
* நடைப்பயிற்சியால் நம் உடல் எடை குறையும்போதும், தசைகள் முறுக்கேறி, அழகிய உடல் அமைப்பு கிடைக்கிறது
* ஒருநாளைக்கு, 30 நிமிடம் நடந்தால், மூட்டு விறைப்பு பிரச்னை ஏற்படுவதில்லை. நடைப்பயிற்சியால் எலும்பு தேய்மானமும் ஏற்படுவதில்லை
* முதுகு எலும்பு பகுதிக்கு, ரத்தம் ஓட்டம் சீராகி, முதுகு வலி குறைகிறது
- மருத்துவ புத்தகம் ஒன்றில் படித்தது!

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X