அந்துமணி பதில்கள்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 செப்
2021
00:00

க. நாகமுத்து, திண்டுக்கல்: செய்தியாளராக என்ன படித்திருக்க வேண்டும்?
இப்போதெல்லாம் செய்தியாளராக முதுகலைப் பட்டம் பெற்று இருக்க வேண்டும்! அந்தக் காலத்தில் எல்லாம், எஸ்.எஸ்.எல்.சி., - பி.யூ.சி., படித்திருந்தால் போதுமாம்!
யூ.என்.ஐ., - பி.டி.ஐ., போன்ற ஆங்கில ஏஜன்சிகளின் செய்திகளை மொழி பெயர்க்க, பி.ஏ., - எம்.ஏ., ஆங்கிலம் படித்தவர்களை பணியமர்த்துவராம்... இதைச் சொன்னவர், 'ரிட்டயர்' ஆன, ஒரு செய்தி ஆசிரியர்!


* ஆர். பிரசன்னா, ஸ்ரீரங்கம், திருச்சி: உள்ளாட்சித் தேர்தலில், பா.ம.க.,வும், தே.மு.தி.க.,வும் தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளதே...
முழுத் தோல் உரிந்து விடும்; அடுத்து வரும் தேர்தல்களில் திராவிடக் கட்சிகள், பா.ம.க., - தே.மு.தி.க.,வை ஒதுக்கி விடும்!

எஸ். வரதன், கோவில்பட்டி, துாத்துக்குடி: எனக்கு நிறைய நண்பர்கள் இருக்கின்றனர்; அவர்களை நம்பலாமா?
நம்பிக்கை தான் வாழ்வின் அடிப்படை. அவர்களுடன் நெருக்கமான பிறகும் நம்பாவிட்டால், நண்பர்கள் என்று சொல்லிக் கொள்வதில் அர்த்தமில்லை!

* பெ. பொன்ராஜபாண்டி, மதுரை: மத்திய அரசுடன், தி.மு.க., கடின போக்கை கடைப்பிடிப்பது நல்லதா... சுமூக உறவை கடைப்பிடிப்பது நல்லதா?
தமிழக மக்களுக்கு - தமக்கு ஓட்டுப் போட்டவர்களுக்கு நல்லது நடக்க வேண்டும் என்று நினைத்தால், அவர்களே முடிவு செய்து கொள்வர்!

த. மலர்பிரியன், சென்னை: 'முறையாக அரசு பணி செய்யாதவர்களை, இட மாற்றம் செய்ய மாட்டேன்... பணி நீக்கம் செய்து விடுவேன்...' என்கிறாரே அமைச்சர் துரைமுருகன்...
மிகவும் பாராட்டப்பட வேண்டிய துணிச்சலான அமைச்சர். இவர் போல் மற்ற அமைச்சர்களும் துணிய வேண்டும்!

அ. கலைச்செல்வி, பெருமாள்புரம், நெல்லை: புகழ் - நடிகர்கள், எழுத்தாளர்கள் யாருக்கு?
கவுண்டமணி உட்பட பல நடிகர்கள், நடிகையர் காணாமல் போய் விட்டனரே... ஆனால், எழுத்தாளன் மெதுவாக புகழ் பெற்றாலும், அவன் எழுதும் வரை புகழோடு அல்லவா நிலை கொள்கிறான்!

* வ. சேதுராமன், களக்காடு, நெல்லை: அறிவை வளர்த்துக் கொள்ள கல்லுாரி சென்று தான் ஆக வேண்டுமா?
வேலை முக்கியமென்றால் கல்லுாரி சென்று தான் ஆக வேண்டும். பட்டம் பெறுவது தான் அதற்கு உதவும்!

க. விஸ்வநாதன், கடையம், தென்காசி: தவறுகளை ஒத்துக்கொள்ளும் தன்மையும், தைரியமும் உள்ளவன் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
விரைவில் திருந்திக் கொள்பவனாகவும், வெற்றிக்கான சிறந்த வழிமுறைகளை உணர்ந்தவனாகவும் இருப்பான்!

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X