அன்புடன் அந்தரங்கம்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 செப்
2021
00:00

அன்புள்ள அம்மா -
என் வயது: 30. திருமணமாகி ஏழு ஆண்டுகள் ஆகின்றன. சொந்தமாக ரத்த பரிசோதனை மையம் நடத்துகிறார், கணவர். எங்களுக்கு ஐந்து வயதில் மகள் இருக்கிறாள்.
நாங்கள், அடுக்குமாடி குடியிருப்பின் பிளாட்டை விலைக்கு வாங்கி, வசித்து வருகிறோம். அனைவரிடமும் நகைச்சுவையாக பேசுவார், கணவர். பிறருக்கு தயங்காமல் உதவி செய்வார். ரத்த பரிசோதனை மையத்துக்கு வரும் பெண்கள் அனைவரும், இவரது பேச்சில் மயங்கி நிற்பர்.

உள்ளூர் டாக்டர்கள் அனைவரிடமும் நட்பு பாராட்டுவார். ரத்த பரிசோதனைக்கு நோயாளிகளை அனுப்பும் டாக்டர்களுக்கு, கமிஷனை வாரி வழங்குவார்.
எங்கள் பிளாட்டுக்கு நேர் எதிர் பிளாட்டில், ஒரு பெண் குடியிருக்கிறாள். அவள் கவர்ச்சிகரமாக ஆடை உடுத்துவாள். கண்களில் மையை அப்பியிருப்பாள். வயது, 35 இருக்கும். அவளது மூத்த பையனுக்கு, 10 வயது, இளையவனுக்கு, 7 வயது. அவளின் கணவர் வெளிநாட்டில் பணிபுரிகிறார்.
அவள் பிளாட்டின் வாசல் கதவு, எப்போதும் திறந்தே இருக்கும். கதவுக்கு நேராக அமர்ந்தபடி, எங்கள் வீட்டையே தான் பார்த்துக் கொண்டிருப்பாள். எப்போது பார்த்தாலும் நான் பிளாட்டை நிர்வகிப்பதை பற்றி, குறை கூறி கொண்டே இருப்பாள்.
* உன் செருப்பு ஸ்டாண்டை ஏன் என் பிளாட் பக்கம் வச்சிருக்க... உன் பிளாட்டின் வெளிவாசலுக்கு உள்ள வச்சுக்கிட வேண்டியதுதானே?
* உன் மகளுக்கு ஒழுங்கா சோறு போடுறியா இல்லையா... தேவாங்கு மாதிரி இருக்கிறாள்!
* கருவாட்டுக் குழம்பா வச்ச, செம நாத்தம் நாறுது!
* உன்னை பார்த்தா கிராமத்துக்காரி மாதிரி இருக்கு. சிட்டி, உனக்கு செட்டாகுதா?
- இப்படி குறை கூறி கொண்டே இருப்பாள்.
பொறுத்துப் பார்த்து, ஒருநாள் அவளை வாங்குவாங்கென்று வாங்கி விட்டேன்.
பதிலுக்கு அவள், 'குரங்குக்கு புடவை கட்டினது மாதிரி இருக்க. உன் புருஷன் எப்படி உன்கிட்ட ஏமாந்தான்... உன் புருஷன், எனக்கு வெறும் உதவிகள் மட்டும் தான் செய்றான்னு பார்த்தியா, பல தடவை என்னோடு படுக்கையை பகிர்ந்திருக்கான்.
'நீ, என் அடிமை மாதிரி. வாலை சுருட்டிக்கிட்டு கம்முனு கிடக்கணும். தாண்டி குதிச்ச, உன் புருஷன் உன்னை விவாகரத்து பண்ணிட்டு என்கிட்ட வந்துடுவான். அப்புறம் நீ, நடுத்தெருவுல தான் மகளோடு நிப்ப. என் பிள்ளைகள், உன் புருஷனை அப்பான்னு தான் கூப்பிடுதுகள்னு உனக்கு தெரியுமா?' என, தாளித்தாள்.
கணவரிடம் கேட்டதற்கு, 'அவ, என் தங்கச்சி மாதிரி; சண்டையில ஏதோ உளர்றா. நீ நம்பாதே...' என, மழுப்புகிறார். அதன் பின்னும் எதிர் வீட்டுக்காரிக்கு உதவும் சாக்கில், அவள் வீட்டுக்கு போய் வந்து கொண்டு தான் இருக்கிறார்.
என் பெற்றோரிடம் கூறினால், 'அட்ஜஸ்ட் பண்ணி போ...' என்கின்றனர். அவரது பெற்றோரிடம் கூறினால், 'உனக்கென்ன விவாகரத்து நோட்டீசா அனுப்பிச்சிட்டான், என் மகன்... வாய்கொழுப்பெடுத்து எதிர் பிளாட்டுகாரியோட ஏன் சண்டை போட்ட...' என, சத்தம் போடுகின்றனர்.
எதிர்காலத்தை நினைத்து, எனக்கு பயமாக உள்ளது. நான், பிளஸ் 2 பெயிலானவள். நாளுக்கு நாள், எதிர் பிளாட்காரியின் அட்டகாசம் அதிகரிக்கிறது. தினம் கதவை தட்டி, வலுக்கட்டாயமாக வீட்டுக்குள் நுழைந்து, வேவு பார்க்கிறாள்.
இந்த பிரச்னைக்கு தகுந்த தீர்வு சொல்லுங்கள், அம்மா.
இப்படிக்கு,
அன்பு மகள்.


அன்பு மகளுக்கு -
அண்டை அயலாருடன் நல்லுறவு பேணுவது, ஒரு கலை. அந்த கலையை கற்றுத் தேர்ந்தோர், மிகச்சிலரே. 90 சதவீத பேருக்கு, அக்கம்பக்கத்து வீடுகள், பாகிஸ்தான், சீனா, இலங்கை போல.
உன் எதிர் பிளாட்காரி, வாய் சண்டை உக்கிரத்தில், அவளுக்கும், உன் கணவருக்கும் கள்ளத்தொடர்பு இருப்பதாக பொய் கூறி, உன்னை காயப்படுத்த முயல்கிறாளோ என்னவோ?
எல்லா திருமணமான ஆண்களும், பெண்களுக்கு உள்நோக்கத்தோடு உதவுவதில்லை. உடன்பிறவா தங்கை என்கிற பாவனை, உன் கணவருக்கு இருக்கலாம்.
'கணவர் வெளிநாட்டில் இருக்கிறார். பாவம், அந்த பெண். இரு குழந்தைகளுடன் திண்டாடுகிறாள். நம்மால் முடிந்த மட்டும் உதவுவோம்...' என்ற மனிதாபிமானத்தில் கூட, உன் கணவர் அவளுக்கு உதவி செய்யலாம்.
இனி நீ, 'டிடக்டிவ்' போல செயல்படு.
உன் கணவர் எந்தெந்த நேரங்களில் எதிர் பிளாட்டுக்கு செல்கிறார். எதிர் பிளாட்காரியை, கணவர் எப்படி கூப்பிடுகிறார்? உன்னுடனான தாம்பத்யத்தில் கணவர் ஆர்வமாய் இருக்கிறாரா அல்லது ஏற்கனவே, 'புல் மீல்ஸ்' சாப்பிட்டு வந்தவன், மீண்டும் சாப்பிட முடியாமல் அவஸ்தைப்படுவானே, அந்த அவஸ்தையை காட்டுகிறாரா...
ரத்த பரிசோதனை மையத்தில் என்னென்ன நேரங்களில் காணாமல் போகிறார், கணவர்... பரிசோதனை மையத்துக்கு எதிர் பிளாட்காரி வருகிறாளா? - இதெல்லாம் அலசி ஆராய்.
எதிர் பிளாட் குழந்தைகளை தனியே கூப்பிட்டு, உணவு லஞ்சம் கொடுத்து, அவர்களது அம்மா, உன் கணவர் உறவு முறை பற்றி உளவறி.
தீர்மானமாக உன் கணவன் கள்ள உறவை உறுதி செய்த பின், கீழ்க்கண்ட நடவடிக்கைகளில் ஈடுபடு...
* எதிர் வீட்டு குழந்தைகளிடம் நைச்சியமாக பேசி, அவர்களது அப்பாவின் மொபைல் எண்ணை வாங்கு. மொபைலில் அவருடன் பேசி, எச்சரிக்கை செய். அத்துடன், அவர் மனைவியை, உன் கணவரிடமிருந்து விலகி இருக்க அறிவுறுத்து. பேச்சை ஆரம்பிக்கும்போதே, 'அண்ணா...' என அழை. 'அண்ணா... நான் பேசினது, உங்க மனைவிக்கு தெரியக் கூடாது. நீங்களாகவே தெரிந்துகொண்டது போல தற்காப்பு நடவடிக்கை எடுங்கள்...' எனக்கூறு
* உன் கணவரை நேரடியாக குற்றம் சாட்டாது, கண்ணியமாக அணுகு. 'எதிர் பிளாட்காரி உங்க பெயரை கெடுத்திடுவா போலிருக்குங்க. நம்ம பிளாட்டை வாடகைக்கு விட்டுட்டு, 4 - 5 கி.மீ., துாரத்துல வேறொரு வீட்டை வாடகைக்கு பிடிப்போம். அவ அடிக்கடி நம் பிளாட்டுக்கு வர்றா. அவ, உங்களை அசிங்கமா பேசுறது, நம் மகள் எதிர்காலத்தைதான் பாழாக்கும்...' என, நைச்சியமாக பேசு.
ஆத்துல ஒரு கால் சேத்துல ஒரு கால் வச்சிருக்கிற கணவர், உன் அன்பான அணுகுறையால், தன் திருமணபந்தம் மீறிய உறவை உதறி தள்ளக்கூடும்
* திருமணமான ஏழாவது ஆண்டில், கணவன் - மனைவிக்குள் பரஸ்பரம் ஒரு வெறுப்பு பூக்கும். அதை நீதான் தவிடுபொடியாக்க வேண்டும். கணவர் வீடு திரும்பும்போது, நன்றாக அலங்காரம் செய்து, அவரை வரவேற்க பார். கணவரின் நகைச்சுவை பேச்சை, மனதார ரசி
* மகளை, அப்பாவுடன் நெருங்கி கொஞ்சி விளையாட வை. மகன், மகள் மீது கணவன் வைக்கும் பாசத்தில், பாதி மனைவிக்கும் மடை மாற்றப்படும். பல திருமண பந்தங்கள் அறுந்து போகாமல் நீடிக்க காரணமே, குழந்தைகள் தான்
* பிளஸ் 2 தேர்வை எழுதி, 'பாஸ்' செய்து, கணவரின் ரத்த பரிசோதனை மையத்துக்கு சென்று, அவருக்கு உதவியாக இரு. கணவரை எந்த பெண்ணும் கொத்தி கொண்டு போகாமலிருக்க, நிதானமாக செயல்படு. புத்திசாலிதனத்தில் கிராமத்து பெண், நகரத்து பெண்ணுக்கு எந்த விதத்திலும் சளைத்தவள் இல்லை என்பதை நிரூபி.
வாழ்த்துகள்!
-என்றென்றும் தாய்மையுடன்,
சகுந்தலா கோபிநாத்

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (4)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kamal -  ( Posted via: Dinamalar Android App )
28-செப்-202112:46:58 IST Report Abuse
Kamal பல குடும்பங்கள் பிரியாமல் இருக்க முக்கிய காரணம் குழந்தைகளே - இது சத்திய வார்த்தை. தங்கையே உனது குழந்தையை வைத்து கணவரின் அன்பை பெறு. காலப்போக்கில் இப்பிரச்சினை சரியாகிடும். கவலை வேண்டாம்
Rate this:
Cancel
R Ravikumar - chennai ,இந்தியா
28-செப்-202111:18:39 IST Report Abuse
R Ravikumar இந்த பெண்ணை நினைத்தால் சற்று பாவமாக இருக்கிறது . சூட்சுமமாக இருந்தால் அன்றி வேறு வழியில்லை . சற்று மனதை பலப்படுத்தி கொண்டு வேவு பார்த்து இருக்க வேண்டும் . ஆதாரங்கள் சேர்த்து இருக்க வேண்டும் . எதிர் வீடு பெண் சூழ்ச்சிகரமான அனுபவங்களை கொண்டவள் . அப்படி உள்ளவர்கள் தான் இப்படி பேச முடியும் . கிட்ட தட்ட அரசியல் புத்தி . இந்த பெண் இந்த பிரச்சினையில் இருந்து விடுபட இறைவன் தான் உதவ வேண்டும் .
Rate this:
Cancel
V.B.RAM - bangalore,இந்தியா
27-செப்-202118:51:49 IST Report Abuse
V.B.RAM 'அவ, என் தங்கச்சி மாதிரி சண்டையில ஏதோ உளர்றா. இது ஒன்னு போறதா .அவர்களுக்குள் தவறான உறவு இருக்கு என்று நம்புவதற்கு . இன்னும் என்ன சந்தேகம். கணவரை உடனே உங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவரவும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X