திண்ணை!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 செப்
2021
00:00

க.அருச்சுனன் எழுதிய, 'பெரியோர் வாழ்வில் சுவையானவை' நுாலிலிருந்து: பதினேழு பேர் கொண்ட குடும்பத்தில், 14வது குழந்தையாக பிறந்தவர், பெஞ்சமின் ப்ராங்க்ளின்.
இவர், அமெரிக்காவின் ராஜதந்திரிகளில் ஒருவர், எழுத்தாளர், தத்துவஞானி, விஞ்ஞானி என, பல முகங்கள் கொண்டவர்.
அமெரிக்காவின் விடுதலை பிரகடனத்தை எழுதியவர். முதல் நுாலகம், மருத்துவமனை, அஞ்சல் நிலையம், தீயணைப்பு பிரிவு என, அமெரிக்காவின் பல முதல்களுக்கு மூல காரணம் இவர்.
ஆரம்ப காலத்தில், பல கட்டுரைகள் எழுதி பெயர் குறிப்பிடாமல், அதிகாலையில், தன் சகோதரரின் அச்சக கூட வாயிலில் வைத்து விடுவார், ப்ராங்க்ளின்.
கட்டுரைகள் நன்றாக        இருக்கவே, சகோதரன் ஜேம்ஸ், அதை அச்சிட்டு சிறு பத்திரிகைகள் தயாரித்து, ப்ராங்க்ளினை கொண்டே விற்பனை செய்தார். மக்கள், தம் எழுத்துகளை விரும்பி படிப்பதை கண்ட, ப்ராங்க்ளினுக்கு மகிழ்ச்சியானது.
ஒருநாள், அடக்க முடியாத ஆனந்தத்தில், அண்ணனிடம் உண்மையை சொல்ல, ஆத்திரமடைந்த ஜேம்ஸ், அச்சக பணியிலிருந்து ப்ராங்க்ளினை நீக்கி விட்டார்.
பத்திரிகையை தானே ஏன் துவங்கக் கூடாது என சிந்தித்து, பத்திரிகை ஆசிரியர் ஆனார், ப்ராங்க்ளின். அச்சாளர், நிருபர், எழுத்தாளர் போன்ற எல்லா பொறுப்புகளையும் ஏற்றார்.
ப்ராங்க்ளின் உயர்ந்த சிந்தனையாளர், நேர்மையாளர் என்பதால், அவரை பயன்படுத்திக் கொள்ள விரும்பி, மாஜிஸ்திரேட் பதவி கொடுத்தது, அரசு; பின், துாதுவர் பதவி.
தம் வாழ்நாளில் ஏதாவது கண்டுபிடிக்க வேண்டும் என்ற ஆவல் கொண்டிருந்தார். கூரிய முனைகளால் மின்சாரம் ஈர்க்கப்படுகிறது. அதுபோல, மின்னலும் கூரிய முனைகளால் ஈர்க்கப்படும் எனும் உண்மையை கண்டார்; இடிதாங்கியை கண்டுபிடித்தார்.

சாவி எழுதிய, 'சிவகாமியின் செல்வன் தியாகச் செம்மல் காமராஜ்' நுாலிலிருந்து: காமராஜர் முதல்வராக இருந்தபோது, செங்கல்பட்டு மாவட்டத்தில் சுற்றுப் பயணம் செய்து கொண்டிருந்தார். அவருடன்
நானும் போயிருந்தேன். காரிலேயே கிராமம் கிராமமாக சென்று சொற்பொழிவு நிகழ்த்தி, கடைசியாக, நள்ளிரவு, 12:00 மணிக்கு, பங்களா ஒன்றில் தங்கினார்.
அங்கே படுக்கப் போகுமுன், 'சரி... நான் துாங்கப் போகிறேன். என்னை சரியாக, 6:00 மணிக்கு எழுப்பி விடுங்க...' என்று கூறி, அறைக்குள் சென்றார்.
உடனே, அங்கிருந்தவர்கள், அந்த அறையின் கதவை வெளிப்பக்கம் பூட்டினர். எனக்கு ஒரே ஆச்சரியம்.
'எதற்காக வெளியே பூட்டுகிறீர்கள்...' என்று கேட்டேன்.
'காமராஜ், கதவை உள்பக்கம் தாழிட்டு துாங்கி விட்டால், குறித்த நேரத்தில் அவரை எப்படி எழுப்ப முடியும். அதற்காக தான் வெளியே பூட்டிக் கொள்கிறோம். 6:00 மணிக்கு, கதவை திறந்து, நாங்கள் எழுப்பி விடுவோம்...' என்றனர்.

விகடன் பிரசுரம், அறந்தை மணியன் எழுதிய, 'திரைச்சுடர்கள்' நுாலிலிருந்து: நடிகை அங்கமுத்து என்றாலே, சரியான அடங்காப்பிடாரியாயிற்றே... வில்லத்தனத்தில் பாடாய் படுத்துவாரே என்று தான் பலருக்கு தெரியும். ஆனால், அவருடைய சாதனைகள் பற்றி மேலும் பல தகவல்கள்:
* தமிழ் படங்களில் முதன் முதலாக சைக்கிள் ஓட்டிய நடிகை, படம்: காலேஜ் குமாரி.
* புலியுடன் பயமின்றி நடித்த முதல் நடிகை (சண்டிராணி)
* ஒரே நாளில் மூன்று படங்களுக்கு, 'கால்ஷீட்' கொடுத்து நடித்த நடிகை
* கலைவாணர் - மதுரம் ஜோடி போலவே, அங்கமுத்து - ப்ரண்ட் ராமசாமி ஜோடியும் கலகலப்பில் பிரபலமானவர்களே
* சிறந்த கிருஷ்ண பக்தை. தமிழகத்தில் எட்டு இடங்களில், கிருஷ்ணருக்கு கோவில் எழுப்பியுள்ளார்
* திருமணமே செய்து கொள்ளவில்லை
* 20 மவுனப் படங்களில் நடித்தவர். 500க்கும் அதிகமான படங்களில் நடித்த முதல் நடிகை.

நடுத்தெரு நாராயணன்

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X