இது உங்கள் இடம்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 அக்
2021
00:00

மனிதராக பார்த்து திருந்தாவிட்டால்...
சமீபத்தில், கோவை சென்றிருந்தேன். மலைப்பாங்கான அடர்ந்த வனப் பகுதியின் சாலையில், 'டிராபிக் ஜாம்' ஆகி நிறைய வண்டிகள் நின்று கொண்டிருந்தன. சாலையோரம் இருந்த கடையில், டீ அருந்த சென்றோம்.
அப்போது, டீ கடையில் இருவர், 'மிகப்பெரிய பழமையான மரத்தை வெட்டிக் கொண்டிருப்பதே, 'டிராபிக் ஜாம்' ஆனதற்கு காரணம். அரசாங்கம் மற்றும் வனத்துறை, பாரம்பரிய பழைய மரங்களை வெட்டுவதை தடுக்க கடுமையான சட்டம் விதித்துள்ளது.

'இருப்பினும்,'பார்ம் ஹவுஸ்' மற்றும் 'ரிசார்ட்ஸ்'களுக்கு இடைஞ்சலாக உள்ள மரங்களை அகற்ற, அதற்கு விஷ ஊசி செலுத்தி விடுவர்.
'சில மாதங்களில் அந்த மரம் பட்டு விடும். அதன்பின் தடையில்லாமல் வெட்டி, அப்புறப்படுத்தி, அவர்களுக்கு தேவையான சாலைகள், கட்டடங்கள், இன்ன பிற வசதிகள் செய்து கொள்வர்...' என பேசியதைக் கேட்டு, அதிர்ச்சி அடைந்தேன்.
என்ன கொடுமை இது. நாம் இளைப்பாற நிழலும், சுவாசிக்க பிராண வாயு மற்றும் கனியும், காயும், விலங்கினங்களுக்கு உணவும் தரும் மரங்களை பாதுகாக்காமல் இப்படி செய்வது நியாயமா?
என்னதான் சட்டம் போட்டாலும், அதை மீறும் கூட்டம் இருக்கத்தான் செய்கிறது. மனிதனாய் பார்த்து திருந்தாவிட்டால், இயற்கை நம்மை மன்னிக்காது.
— ரா. செந்தில்வேல், புதுச்சேரி.

தபால் துறையை பெருமைபடுத்துவோமே...
தோழியின் பிறந்தநாளன்று, அவள் வீட்டிற்கு சென்றிருந்தேன். அப்போது, சுமார், 50 கடிதங்களை தோழியிடம் கொடுத்தார், தபால்காரர்.
அதை கண்டு வியந்த நான், அது குறித்து அவளிடம் கேட்டேன்.
'வாட்ஸ் - ஆப் குரூப் ஒன்றில் இருக்கிறேன். அதில், 70 பேர் இருக்கின்றனர். ஒவ்வொரு நபர் பிறந்தநாள் அன்றும், 'வாட்ஸ் - ஆப்'பில் வாழ்த்து தெரிவித்து கொள்வதை வழக்கமாக கொண்டிருந்தோம். ஒருமுறை குழுவில், அஞ்சல் துறையை பற்றி விவாதம் வந்தது.
'பிறந்தநாள் வாழ்த்து அனுப்புவது, அதை தபால்காரர் தரும்போது ஏற்படும் மகிழ்ச்சி போன்றவைகளை விவாதித்த போது, 'இந்த நவீன தொழில் நுட்பத்தால்தான், அந்த மகிழ்ச்சி குறைந்ததோடு, அஞ்சல்கள் அனுப்புவதும், குறைந்து போனது. நம் சோம்பேறித்தனத்தை ஓரம் கட்டி, பழைய முறையை, நாம் ஏன் பயன்படுத்தக் கூடாது...' என்று யோசித்தோம். அதன்பின், அனைவரும் ஒருமனதாய், இனி வாழ்த்துகளை தபால் மூலம் அனுப்ப முடிவு செய்தோம்...' என்றாள்.
உணர்வுகளை, சொந்த கையெழுத்தில் எழுதி அனுப்புவதால் கிடைக்கும் சந்தோஷமே தனி.
இனி, நாமும் இந்த முறையை பின்பற்றுவோமே!
- அ. மீனாட்சி, கன்னியாகுமரி.

'ப்ரா'வால் வந்த ப்ராபளம்!
அரசு துறையில் அதிகாரியாக உள்ள நண்பர் மகனுக்கு, பெண் பார்த்து, நிச்சயதாம்பூல நிகழ்ச்சிக்கு ஏற்பாடு நடந்தது. இந்நிலையில், சம்பிரதாயபடி, மாப்பிள்ளை வீட்டார், பெண்ணுக்கு, உடைகள் எடுக்க வேண்டும் என்பதற்காக, பெண் வீட்டாரிடம் கேட்டனர்.
பெண் வீட்டார் தந்த பட்டியலில், பட்டுப் புடவை உள்ளிட்ட வழக்கமான பொருட்களோடு, 'விக்டோரியா சீக்ரெட் ப்ரா' என்று குறிப்பிட்டிருந்தனர்.
ஜவுளிக்கடையில், 'விக்டோரியா சீக்ரெட் ப்ரா' குறித்து கேட்டுள்ளனர். 'அது இறக்குமதி வகை ப்ரா. அதன் விலை குறைந்தபட்சம், 4,000 - 10 ஆயிரம் ரூபாய் வரை ஆகும்...' என்று விளக்கியுள்ளார், கடைக்காரர்.
திடுக்கிட்ட மாப்பிள்ளை வீட்டார், பெண் வீட்டாரிடம் சொல்ல, 'பெண் விரும்புகிறது. அதுதான் வேண்டும் என பிடிவாதமாக இருக்கிறாள்...' என, அவர்கள் பதில் சொல்ல, இரு தரப்புக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு விட்டது.
மாப்பிள்ளையின் அப்பா வசதி படைத்தவர் என்றாலும், எளிமையாக இருக்க விரும்புபவர். அத்தியாவசியமான, நியாயமான செலவு என்றால் தயங்க மாட்டார். அதேசமயம், ஆடம்பரங்களை முற்றிலும் வெறுப்பவர்.
'நமக்கு இந்த இடம் சரி வராது. 'ப்ரா' விஷயத்தில் இவ்வளவு பிடிவாதமாகவும், ஆடம்பரமாகவும் இருக்கும் பெண், நாளைக்கு மற்ற விஷயங்களில் எப்படி இருப்பாள் என்பதை யூகிக்க முடிகிறது. வேறு பெண் பார்த்துக் கொள்ளலாம்...' என்று, நிச்சயதாம்பூலம் வரை வந்த திருமணத்தை நிறுத்தி விட்டார், நண்பர்.
வீண் ஆடம்பர பொருட்களுக்கு, ஆர்வக்கோளாறில் ஆசைப்படுவது நடுத்தர வர்க்கத்தினருக்கு அழகல்ல.
எங்கோ, யாரோ பயன்படுத்துவதை பார்த்து, அதேபோல் நாமும் போட வேண்டும் என்ற தேவையற்ற எதிர்பார்ப்பால், நல்ல வாழ்க்கையை தவற விட்ட அப்பெண்ணை நினைத்து, பரிதாபப்படுவதை தவிர வேறு என்ன செய்ய முடியும்!
— எஸ். ராஜேந்திரன், தஞ்சாவூர்.

'சபாஷ்' வீடியோ!
சமீபத்தில், 'வாட்ஸ் ஆப்'பில் தோழி பகிர்ந்த வீடியோவை பார்த்து, 'இப்படிக் கூட திருடுவரா...' என்று அதிர்ச்சி அடைந்தேன். வாசகர்களையும் எச்சரிக்கை செய்யவே, இக்கடிதம்...
ஏதோ பைலுடன், அரசு அதிகாரி போல் வரும், 'டிப் டாப்' நபர், வீட்டில் தனியாக இருக்கும் பெண்ணை நோட்டமிட்டு, அவரிடம் ஏதோ விபரம் கேட்க வேண்டுமென அழைக்கிறான்.
வந்த பெண், 'மாஸ்க்' அணியாமல் இருப்பதால், இவரே தன்னிடமுள்ள, 'மாஸ்க்'கை கொடுத்து, அதைப் போட்டு பேசுமாறு பணிக்கிறான்.
அவர் தந்த, 'மாஸ்க்'கை வாங்கி போட்டுக் கொள்ளும் அப்பெண், அடுத்த நொடி, அப்படியே மயங்கி விழுகிறார். பிறகு தான் தெரிகிறது, மயக்க மருந்து தெளிக்கப்பட்ட, 'மாஸ்க்' என்பது.
வந்த நபர், மயங்கி விழுந்த பெண்ணின் நகைகளை திருடி, நைசாக நழுவுகிறான். பொதுநல எண்ணத்தோடு, நல்லதொரு வீடியோவை வெளியிட்டவர்களுக்கு, மனதிற்குள்ளேயே, 'சபாஷ்' போட்டேன்.
பெண்களே... இனி, முன்பின் அறிமுகமில்லாத 'டிப் டாப்' ஆசாமிகளிடம் எச்சரிக்கையாக இருங்கள்.
- எஸ்.நாகராணி, மதுரை.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (7)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kamal -  ( Posted via: Dinamalar Android App )
08-அக்-202112:13:46 IST Report Abuse
Kamal ப்ரா வால் வந்த problem ஒரு நல்ல எடுத்துக்காட்டு. தமிழ்நாட்டில் ஒரு குடும்பத்தில் பெண் எடுப்பது என்பது அந்த குடும்பத்தையே தத்தெடுப்பது போல. மணமகள் வீட்டாரின் குணநலன்கள், விட்டுக்கொடுத்து போகும் தன்மை எல்லாவற்றையும் விசாரித்து பெண் எடுக்கவேண்டும்.
Rate this:
Cancel
Tamilnesan - Muscat,ஓமன்
04-அக்-202122:27:15 IST Report Abuse
Tamilnesan ப்ரா பிரச்சனைக்கு காரணம் தற்போதய கேடு கெட்ட சினிமா கலாச்சாரமே காரணம்.
Rate this:
Cancel
சமநிலை மூர்த்தி கடைசி கடிதம் நல்ல விழிப்புணர்வு கடிதம். எப்படியெல்லாம் விழிப்புணர்வாக இருக்கவேண்டியிருக்கிறது. ப்ராவால் வந்த பிரச்சினை, நம்ப முடியவில்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X