பின்னணி பாடகி வாணி ஜெயராமின் இசை பயண தொடர் - நாதமெனும் கோவிலிலே... (2)
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 அக்
2021
00:00

வாணி ஜெயராம் பள்ளியில் படித்த போது, ஓவியம், கையெழுத்து, பேச்சு போட்டி மற்றும் நாடகத்தில் நடிப்பது என, பலவற்றிலும் பங்கெடுத்து, பரிசுகள் வாங்கியுள்ளார். பள்ளி நாடகங்களிலே ராமன், நாரதர் மற்றும் கண்ணகி வேடங்களில் நடித்துள்ளார்.
'ரசிக ரஞ்சனி சபா'வில் நடத்தப்பட்ட பள்ளி நாடகங்கள் எல்லாமே ரொம்ப, 'ப்ரொபஷனல்'லா இருக்கும். பள்ளியில், 'பைனல்' முடிக்கும்போது அவருக்கு, 'ஆல்ரவுண்ட் டாலன்ட் ஷீல்டு' கொடுத்தனர்.

பள்ளியில் நடக்கும் பழைய மாணவியர் சந்திப்பில், இப்போதும் கலந்து கொண்டு வருகிறார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
பழைய மாணவியர் மட்டுமின்றி, ஆசிரியர்களையும் சந்திக்கும்போது கிடைக்கும் சந்தோஷத்துக்கு அளவே இல்லை. எப்பவுமே சின்ன வயசுல நாம கத்துகிற பல விஷயங்கள், பசுமரத்தாணி போல மனசுல பதிஞ்சுடும்.
இன்று நான், இந்த நிலைமையில இருகேன்னு சொன்னா, அதுக்கு எங்க ஆசிரியர்கள் கற்றுக் கொடுத்த கல்வி மட்டுமில்லாம, நல்ல பழக்க வழக்கங்களும், ஒழுக்கமும் முக்கியமான காரணங்களாக இருந்துள்ளது.
பள்ளிப் படிப்பு முடிந்ததும், ராணி மேரி கல்லுாரியில், பி.ஏ., எகனாமிக்ஸ் சேர்ந்தார். அப்போது, மற்ற கல்லுாரிகளில் நடக்கும் பேச்சு போட்டிகளிலே பங்கேற்று, பல பரிசுகள் வாங்கியுள்ளார். கல்லுாரி சார்பில் மட்டுமின்றி, சென்னை பல்கலைக்கழகம் சார்பிலும், பல பேச்சு போட்டிகளில் பங்கேற்று, பரிசுகள் வாங்கியுள்ளார்.
அப்போது, இவரை போலவே, சென்னை பல்கலைக்கழகத்தின் சார்பில் பங்கேற்று, பரிசுகள் வாங்கிய மாணவர்கள் சிலர், பின்னாளில் அரசியலிலும் பிரபலமாய் இருந்திருக்கின்றனர்.
ஆறு மகள்களும், கர்நாடக சங்கீதத்தில் பெரிய சாதனை செய்ய வேண்டும் என, அவரது அம்மா நினைத்தார். ஆனால், வாணி ஜெயராம் விருப்பம் என்னவோ, திரை இசையாக தான் இருந்தது. அதற்கு காரணம், அந்த காலத்தில் அவர்களது பொழுதுபோக்கு புத்தகங்கள் படிப்பதும், ரேடியோ கேட்பது மட்டும் தான்.
பாட்டு கேட்பதென்றால், வாணி ஜெயராமுக்கு ரொம்ப பிடிக்கும். அதிலும், சிலோன் ரேடியோவில் ஒலிபரப்பாகும், 'பினாகா கீத் மாலா' நிகழ்ச்சி, அப்போது ரொம்ப பிரபலம். அந்த நிகழ்ச்சியில், ஹிந்தி சினிமா பாடல்கள் புதன் கிழமை இரவு, 8:00 - 9:00 மணி வரை ஒலிபரப்பாகும்.
'பினாகா கீத் மாலா'வில், ஒரு பாட்டு முதலிடம் பிடித்தால், அது ரொம்ப பெரிய விஷயம். அதிலும், இந்தியா முழுக்க, 'சூப்பர் டூப்பர் ஹிட்' ஆகும் பாட்டு, நீண்ட நாளைக்கு, முதல் இடத்திலேயே இருக்கும். 'நான் பாடுற பாட்டும், ஒருநாள் இப்படி இந்த நிகழ்ச்சியில ஒலிபரப்பாக வேண்டும்...' என்று, கனவு கண்டார்.
கல்லுாரி படிப்பு முடித்த உடனேயே, பாரத ஸ்டேட் வங்கியில் வேலை கிடைத்தது. வங்கி வேலையில் இருந்த போது தான், திருமணம் நிச்சயம் ஆனது.
பெண் பார்க்கும் படலத்தின்போது, வாணியின் பாட்டை கேட்ட, ஜெயராமின் அம்மா, 'இவ்வளவு அழகா பாடுற பொண்ணு தான், எனக்கு மருமகளா வரணும்...' என்று சொல்லி, தன் மகனுக்கு திருமணம் செய்வதில் உறுதியாக இருந்துள்ளார்.
மும்பையில் இருந்த, 'இன்டோ பெல்ஜியம் சேம்பர் ஆப் காமர்ஸ்'சில், உயர் அதிகாரியாக இருந்த ஜெயராமுடன் திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பின், வேலையை மும்பைக்கு மாற்றிக் கொண்டார், வாணி.
வாணியின் கணவருக்கும் இசை ஞானம் உண்டு. அதுமட்டுமின்றி, பண்டிட் ரவிசங்கரின் பள்ளியில், ஆறு ஆண்டு, சித்தார் வாசிக்க கற்றுக் கொண்டவர். வாணி, ஹிந்துஸ்தானி சங்கீதம் கற்றுக் கொள்வதற்கு, கணவர் தான் முழுமுதற் காரணமாக இருந்துள்ளார்.
சரி, திருமணத்திற்கு பின், வாணியின் இசைப்பயணம் என்ன ஆயிற்று. ஹிந்தி படங்களில் எப்படி பாட ஆரம்பித்தார். 'பினாகா கீத் மாலா'வில், தன் பாட்டு வரவேண்டும் என்று, அவரது சிறு வயது கனவு பலித்ததா...

மிக அழகாக ஓவியம் வரைவார், வாணி. 1970லேயே உலகப் பிரசித்தி பெற்ற சிதார் கலைஞர் பண்டிட் ரவிசங்கரின் நிழல் ஓவியத்தை மிக அழகாக வரைந்து, அவரிடமே அதை காண்பித்து, பாராட்டை பெற்றவர். தான் வரைந்த அந்த ஓவியத்தில், ரவிசங்கரின் கையெழுத்தை வாங்கி, பொக்கிஷமாக கருதி, 'பிரேம்' செய்து, வீட்டில் மாட்டி வைத்திருக்கிறார்.

தொடரும்
ஸ்ரீவித்யா தேசிகன்

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R Balasubramanian - Pune,இந்தியா
04-அக்-202113:51:14 IST Report Abuse
R Balasubramanian வாணி அம்மாவின் குரலுக்கு நானும் ஒரு ரசிகன். என்னுடைய கருத்து என்னவெனில் வாணி அம்மாவின் குரல், N.C. வசந்தகோகிலத்தின் மென்மையான வடிவம் போல இருக்கும். திரை இசை உலகம் அவரது திறமையை இன்னும் பயன்படுத்தி இருக்க வென்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X