அந்துமணி பா.கே.ப.,
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 அக்
2021
00:00


வாசகி ஒருவர் எழுதிய கடிதம்:
அன்புள்ள அந்துமணி அவர்களுக்கு,
தங்களின் நீண்டநாள் வாசகி எழுதிக் கொள்வது... இக்கடிதம் என் நெடுநாளைய மனக்குமுறல். இன்று கொட்டித்தீர்க்க துணிந்து விட்டேன்...
நான், திருமணம் வேண்டாம் என்று வாழ்பவள். என் திருமண மறுப்பிற்கு, ஏதோ ஒரு காரணம் இருக்கலாம்; இல்லாமலும் போகலாம்... அது, என் தனிப்பட்ட விஷயம். ஆனால், அதற்கு பின் தான், எத்தனை கற்பனைகள் கட்டவிழ்க்கப்படுகின்றன...

நான், 40 வயதை தாண்டிய பெண் என்பதால், புதிதாக அறிமுகம் ஆகுபவர்கள், என்னிடம் நட்பு கொள்ளும்விதமாக, 'எத்தனை பிள்ளைகள்...' என்ற கேள்வியில் தான் ஆரம்பிப்பர்.
'அன் மேரீட்...' என்று சொன்னதும், அவர்களின் பார்வையே மாறும். அப்படியே, உச்சி முதல் உள்ளங்கால் வரை பார்வை, ஒரு நொடி ஊர்ந்து செல்லும்... பின், 'நல்லாதானே இருக்கீங்க... ஏன் இன்னும் கல்யாணமாகலை...' என்பர்.
'விருப்பமில்லை... அதான், வேண்டாம்னு சொல்லிட்டேன்...' என்பேன்.
அடுத்த நொடி, வில்லிலிருந்து புறப்பட்ட அம்பாய் வரும் அடுத்த கேள்வி... 'ஏன் காதல் தோல்வியா?'
திருமணத்தை மறுப்பவர்கள் எல்லாம், காதலில் தோற்றவர்கள் என்ற பிம்பத்தை யார் இவர்களுக்கு ஏற்படுத்தினரோ தெரியவில்லை. அப்படியே இருந்தாலும், எல்லாரிடமும் அதை பகிர்ந்து கொள்ள வேண்டிய அவசியம் என்ன?
'அப்படியெல்லாம் இல்லை...' என்று சொன்னால், உடனே, 'பெரிய குடும்பமா? நீங்க தான் மூத்த பெண்ணா... தங்கச்சிகள கட்டிக் கொடுக்க வேண்டி, உங்க வாழ்க்கையை தியாகம் செய்துட்டீங்களா?' என்பர்.
'விருப்பமில்லை; திருமணம் செய்துக்கலை...' என்றால், அதை அவர்களால் ஏற்றுக் கொள்ளவே முடியாது.
'உங்கள் வீட்டுல ஒண்ணுமே சொல்லலியா?' என, மீண்டும் கேட்பர்.
'அது எப்படி சொல்லாம இருப்பாங்க. அவங்க அழுது, திட்டி, கோபப்பட்டுன்னு, எல்லா முயற்சியும் எடுத்து பார்த்துட்டாங்க... நான் தான் பிடிவாதமா மறுத்துட்டேன்...' என்றாலும், ஏற்றுக் கொள்வதில்லை.
'நீ ஏன் திருமணம் வேண்டாம்ங்கற. சின்ன வயசில யாராவது உன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தி உள்ளனரா... அதனால் தான், திருமணம் என்றால், பிடிக்காமல் போய்விட்டதா...' என்று, தன் அசாத்திய கற்பனையை அவிழ்த்து விடுவர்.
'நீ, கல்யாணம் ஆகாம இருந்தா, உனக்கு ஆதரவு யாரும் இல்லைன்னு, சொந்தக்காரங்களோ, வெளியாட்களோ உனக்கு பாலியல் தொல்லை கொடுக்க வாய்ப்புள்ளதே...' என்று கூறுபவர்களும் உண்டு.
சில வயதான பெண்கள் என்றால், 'வேண்டாம் மகளே... இப்ப ஒண்ணும் தெரியாது; வயசான காலத்துல நமக்குன்னு யாரும் இல்லையேன்னு தோணும். காய்ச்சல், தலைவலி வந்தாக்கூட, பார்த்துக்க ஆள் வேணும்ல்ல... உனக்குன்னு ஒரு துணை வேணும்...' என்பர்.
இது ஒரு கண்ணியமான அறிவுரை. மேலும், 'உங்க அம்மா - அப்பா அல்லது உறவினரின் திருமண வாழ்க்கை நன்றாக அமையாமல், அது உன்னை பாதித்து திருமணத்தை வெறுக்கிறாயா...' என்று, தன் ஆராய்வை கேள்வியாய் தொடுப்பவர்களும் உண்டு.
இவர்கள் எல்லாரையும் விட, ஒரு பெண், ரொம்ப அறிவுப்பூர்வமாக ஒரு கேள்வி கேட்டாள். அது... 'உடல் தேவைகள் எழுமே... அந்த மாதிரி உணர்ச்சிகளே இல்லையென்று பொய் கூற வேண்டாம். நீ, 'அந்த' உணர்ச்சிகளை எப்படி கட்டுப்படுத்துகிறாய் அல்லது வடிகால் தேடுகிறாய்...' என்று!

இதற்கென்ன பதில் சொல்ல...
மூளையில், சிந்தனையில், காமத்தை திணித்துக் கொண்டால், அது, கட்டுப்படுத்த முடியாதது தான். மற்றபடி, அது ஒன்றும், சினிமாவில் காட்டுவது போல், நடுராத்திரியில் எழுந்து, தலை வழியே பச்சை தண்ணீரை ஊற்றி அடக்கும் அளவுக்கு சக்தி வாய்ந்த உணர்ச்சி அல்ல என்பது, என் எண்ணம்.
ஒரு பெண்ணிற்கு அவளின் அறிவு, மனம், உள்ளுணர்வு, சாமர்த்தியம், தைரியத்தை விட, இந்த உலகில் சிறந்த பாதுகாப்பு எதுவும் இல்லை. இதை படித்த பெண்களான இவர்கள் எப்படி மறந்து போயினர் என்று தெரியவில்லை!
நல்லவேளை... பிறரிடம் பழகுவதில் ஒரு எல்லைக்குள்ளே நின்று விடுவதால், இன்னும், ஓரினச்சேர்க்கையாளரோ இல்லை அந்த ஆணிடம் சிரித்து பழகுகிறாள், இவனிடம் கலகலப்பாக பேசுகிறாள்... திருமணம் தாண்டிய உறவுகளில் விருப்பம் உள்ளவளோ... போன்ற கற்பனை கேள்விகளை யாரும் கேட்கவில்லை. மற்றபடி அனைத்து கேள்விகளையும் கேட்டு விட்டனர்.
இக்கடிதத்தை உங்களுக்கு எழுதுவதன் நோக்கம், இதைப் படிப்பவர்களாவது தங்கள் எண்ணத்தை இனி மாற்றிக் கொள்ள வேண்டும். திருமணம் ஆகாதவர்கள் எல்லாம், இரவில் வெப்ப பெருமூச்சு விட்டுக் கொண்டிருக்கின்றனர் என்றோ, இல்லாத துணையை நினைத்து, ஏங்கி கொண்டிருக்கின்றனரோ என்று எண்ணி, தங்கள் கற்பனையை அவிழ்த்து விட வேண்டாம். அவரவர் வாழ்க்கையை அர்த்தமுடன் வாழுங்கள்; அடுத்தவர்களின் தனிப்பட்ட விஷயங்களில் ஆர்வம் கொள்ளாதீர். அதுதான் நாகரிகமான நல்ல வளர்ப்பில் வளர்ந்த பண்பட்ட மனிதர்கள் என்பதற்கான அடையாளம்.
தன் குழந்தைகள் மீது, பெற்றோரை தவிர, இந்த உலகத்தில் வேறு யாருக்கும் உண்மையான அக்கறையோ அவர்கள் எதிர்காலம் குறித்த கவலையோ, பயமோ நிச்சயமாக இருக்காது. அத்தகைய பெற்றோர் பேச்சையே மீறும் அளவுக்கு, சம்பந்தப்பட்டவர் ஒரு காரியத்தில் உறுதியாக இருக்கிறார் என்றால், அது அவரது தனிப்பட்ட முடிவு.
கடைசியாக ஒன்று... திருமணம் என்பது ஆண் -- பெண் இருபாலருக்கும் மிகவும் அவசியமானது தான்; அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. அதற்காக, திருமணம் வேண்டாம் என, பிரம்மசாரி - சாரிணிகளின் வாழ்வு, பரிதாபத்துக்குரியதோ, கேலிக்குரியதோ அல்ல! அவர்கள் வாழ்வு ஒன்றும் அர்த்தமற்று போய் விடுவதும் அல்ல!
- வாசகர்களின் கருத்து என்னவோ; எனக்கு தெரிவிக்கலாமே!

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Priyan - Madurai,இந்தியா
06-அக்-202110:32:43 IST Report Abuse
Priyan சமூகம் மோசமாக போகிறது. ஏன் கல்யாணம் கேட்பது
Rate this:
Cancel
Priyan - Madurai,இந்தியா
06-அக்-202110:31:48 IST Report Abuse
Priyan என் மனமும் அப்படித்தான் நினைக்கிறது.
Rate this:
Cancel
05-அக்-202110:59:45 IST Report Abuse
Purushothaman Rajendran PLEASE DON'T REPEAT THE SAME COMMENT
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X