அந்துமணி பதில்கள்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 அக்
2021
00:00

ஆர்.பாலாஜி, திருச்சி: எனக்கு பிரச்னைகள் வந்து கொண்டே இருக்கின்றனவே...
பிரச்னைகள் என்பது நாயைப் போன்றது... அதைக் கண்டு பயந்து ஓடினால் துாரத்திக் கொண்டே இருக்கும்; நம்மை கதற வைக்கும். திரும்பி நின்றால், அது பயந்து பின்வாங்கும். தைரியமாக பிரச்னைகளை எதிர் கொள்பவர்களுக்கு நம்பிக்கை கூடும்... பயம் பறந்து போய் விடும்!

* நெல்லை குரலோன், பொட்டல்புதுார்: கவுன்சிலர் பதவிகள் லட்சக்கணக்கில் ஏலம் போவது எதைக் காட்டுகிறது?

இப்போது செலவிடும் லட்சங்களில் இருந்து பல லட்சங்கள், லஞ்சத்தின் மூலம் சம்பாதித்து விடலாம் என்பதால் தான்!

மூ. மோகன், வேலுார்: 'நீட்' தேர்வு அறிமுகமாவதற்கு முன், மருத்துவம் படித்த, டாக்டர்கள் திறமைசாலிகள் இல்லையா?
அப்படி இருப்பின், பிரபல நடிகர்கள், அரசியல்வாதிகள் எல்லாம் சிகிச்சைக்காக, எதற்கு துபாய், லண்டன், அமெரிக்கா எல்லாம் செல்கின்றனர்?

* முருகு. செல்வகுமார், சென்னை: வைகோ என்ன செய்து கொண்டிருக்கிறார்?
உதவியாளர் தயாரித்துக் கொடுக்கும் அறிக்கைகளை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார். இனி, அவரது கட்சி ஆட்சியைப் பிடித்து, அவர் முதல்வராக முடியாது என்பது தெரியும். வயதோ, 77 ஆகிவிட்டது. இனி, ஓய்வெடுப்பது அவரது உடல் நலத்திற்கு ஏற்றது!

எஸ். சேனாதிபதி, மகேந்திரகிரி, நெல்லை: என் நண்பன் ஒருவன், என்னை, 'கழுதை... கழுதை' எனக் கேவலமாக திட்டுகிறானே...
கழுதையின் அருமை உங்கள் நண்பருக்கு தெரியவில்லை; நீங்கள் சந்தோஷப்படுங்கள். கழுதை, எது கிடைத்தாலும் சந்தோஷமாக சாப்பிடும். தினமும், 30 நிமிடங்கள் தான் துாங்கும். சுமை எதுவானாலும் கவலைப்படாமல் சுமக்கும். வேலை இல்லாதபோது, குட்டி சுவர் நிழலில் துாங்கும்!
இது என்ன கேவலமான்னு நினைச்சு பாருங்க! உங்களுக்கு வருத்தம் வராது, பெருமை தான்! அத்துடன், கழுதைப் பால் ரொம்ப சத்தானது; குழந்தைகளின் நலனுக்கு மிகவும் நல்லது!

வெ. ரகுநாதன், நாமக்கல்: ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., மற்றும் ஐ.எப்.எஸ்., தேர்வுகளில் வராத தற்கொலைகள், 'நீட்' தேர்வில் மட்டும் வருவது ஏன்?
தாம் போனாலும் பரவாயில்லை; தம் குடும்பத்துக்கு அரசியல் கட்சிகள் மூலம், 10 - 20 லட்சம் கிடைத்து விடுமே என்ற நோக்கம் தான்!

அம்பை தேவா, சென்னை: பா.ம.க., ஆட்சிக்கு வந்தால், 'டாஸ்மாக்' ஒழியுமா?
தேவா... உங்களுக்கு கனவு அதிகமாக வருகிறது என நினைக்கிறேன்; அத்துடன் கற்பனையும் கூடி விட்டது. சீக்கிரமாக, சினிமா கதாசிரியர், வசனகர்த்தாவாக மாறி விடுங்களேன்!

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
krishsrk - Al Ain,ஐக்கிய அரபு நாடுகள்
05-அக்-202112:30:39 IST Report Abuse
krishsrk நெத்தியடி பதில் மோகன், வேலுார்: 'நீட்' தேர்வு அறிமுகமாவதற்கு முன், மருத்துவம் படித்த, டாக்டர்கள் திறமைசாலிகள் இல்லையா? அப்படி இருப்பின், பிரபல நடிகர்கள், அரசியல்வாதிகள் எல்லாம் சிகிச்சைக்காக, எதற்கு துபாய், லண்டன், அமெரிக்கா எல்லாம் செல்கின்றனர்?
Rate this:
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
04-அக்-202101:13:04 IST Report Abuse
D.Ambujavalli அடுத்து பத்தாவது, எட்டாவது தேர்வுகளில் தோற்றதால் தற்கொலை செய்துகொண்டவர்களுக்கும் அரசு எத்தனை லட்சம் என்று ரேட் வெளியிட்டு விடட்டும் செய்ய மாட்டார்கள் அவர்கள் கல்லூரிகளுக்கு கிடைக்கும் பணம் வீணாக நீட் ஒதுக்கீட்டில் வருபவர்களால் நஷ்டமாகிறதே என்ற ஆற்றாமை, அங்காரம்தான்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X