அரிதாரம் பூசும் இயக்குனர், ஷங்கர்!
சினிமாவில் நடிக்க வேண்டும் என்பதற்காக தான், விஜயின் அப்பாவான இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரிடம் வாய்ப்பு கேட்டார், இயக்குனர் ஷங்கர். ஆனால், 'உனக்கு நடிப்பு வேண்டாம்...' என்று சொல்லி, தன் உதவி இயக்குனராக்கிக் கொண்டார், சந்திரசேகர். ஆனபோதும், வசந்தராகம், பூவும் புயலும் மற்றும் சீதா என, சில படங்களில் நடித்த, இயக்குனர் ஷங்கர், பின்னர் முழுநேர இயக்குனரானார். இந்நிலையில், சிரஞ்சீவியின் மகன் ராம்சரணை வைத்து, மூன்று மொழிகளில் படத்தை இயக்கி வரும் ஷங்கர், இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கப் போகிறார். அவர் நடிப்பது கதையின் முக்கியமான ரோல் என்றும் கூறப்படுகிறது. ஆக, நீண்ட இடைவேளைக்குப் பின், தனக்குள் இருந்த கனவு நடிகனை வெளியில் எடுத்து விட்டுள்ளார், ஷங்கர்.
— சினிமா பொன்னையா
அலறும் நடிகையர்!
உடம்பை குறைத்து, 'ஸ்லிம்'மாகி அதிரடியான, 'என்ட்ரி' கொடுத்துள்ள குஷ்பு; தன் அபிமான இயக்குனர்கள் மட்டுமின்றி விஜய், அஜீத், தனுஷ் மற்றும் சிம்பு போன்ற நடிகர்களையும் சந்தித்து, தனக்கு சிபாரிசு செய்யுமாறு உரிமையோடு கேட்டு வருகிறார். இதனால், அண்ணாத்த படத்திற்கு பிறகு, குஷ்பு கோலிவுட்டில் பெரிய அளவில் ரவுண்டு கட்டுவதற்கான அறிகுறிகள் தெரிந்து விட்டது. இதையடுத்து, திருமணத்திற்கு பிறகு, சினிமாவில், 'ரீ - என்ட்ரி' கொடுத்துள்ள மீனா, நதியா, சிம்ரன், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட நடிகையர், குஷ்பு, தங்களுக்கு மிகப்பெரிய அளவில், 'டப்' கொடுப்பாரோ என, அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர். இட்டபடியே ஒழிய ஆசைப்பட்டு பலன் இல்லை!
— எலீசா
அடர்ந்த காட்டுக்குள், ராசிகண்ணா!
'ஜிம் சென்டரை' விட, அடர்ந்த காட்டுப் பகுதிகளில் உடற்பயிற்சி செய்வதென்றால் ராசிகண்ணாவுக்கு ரொம்ப பிடிக்குமாம். எனவே, எந்த அவுட்டோருக்கு சென்றாலும், தன் உதவியாளர்களை வைத்து உடற்பயிற்சிக்கான உபகரணங்களை எடுத்து செல்கிறார், ராசிகண்ணா. மரங்கள் சூழ்ந்த பகுதியில், 'டூ - பீஸ்' உடையில், வியர்வை சொட்ட சொட்ட உடற்பயிற்சி செய்வதை மொபைலில் படமெடுக்க வைத்து, 'சோஷியல் மீடியா'வில் வெளியிட்டு, ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கிறார். அதைப்பார்த்து, ராசிகண்ணாவின் ரசிகர்கள், உருகி, வழிந்து கொண்டிருக்கின்றனர். ஆற்றுதே, என்னைத் தேற்றுதே, அம்பலத்திலே என்னை ஏற்றுதே என்ற கதை!
— எலீசா
வடிவேலு அட்ராசிட்டி!
வடிவேலு சினிமாவில், 'ரீ - என்ட்ரி' கொடுப்பதால், சில, 'ஹீரோ'கள் அவர் பக்கம் திரும்பியுள்ளனர். இந்நிலையில், வடிவேலுவும் தன் காமெடி இலாகாவை வைத்து, மீண்டும் மரண மாஸ் காமெடிகளை கொடுப்பதற்கு வரிந்து கட்டி வருகிறார். இதனால், இத்தனை காலமும் சரியான காமெடியன்கள் இல்லாததால், நடிக்கும் வாய்ப்பை பெற்ற சூரி, சதீஷ் உள்ளிட்ட சிலர் பட வாய்ப்புகள் இல்லாத நிலைக்கு தள்ளப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அந்த வகையில், மறுபிரவேசம் செய்யும் வடிவேலுவால், கோலிவுட்டின் அனைத்து காமெடியன்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
— சினிமா பொன்னையா
கறுப்புப்பூனை!
அரசியல் எதிர்பார்த்தபடி கை கொடுக்காததால், மீண்டும் கலைச்சேவையில் தீவிரமடைந்துள்ளார், உலக நடிகர். அதோடு, தன் வயதுக்கேற்ற கதைகள் என்பதிலிருந்து மாறுபட்டு, தல- - தளபதிகள் நடிப்பது போன்ற கதைகளில் ஆர்வத்தை திருப்பியுள்ளார். அதன் காரணமாக, தளபதி நடிக்க மறுத்த ஒரு கதையை, முருகனடி வைத்திருப்பதை அறிந்து, அவரை அழைத்து, அந்த கதையை கேட்டு, தன் பாணிக்கு மெருகேற்றி விட்டார், உலக நடிகர். 'அந்த படத்தில், தளபதி நடிகரின், 'கெட் - அப்'பில், நான் திரையில் தோன்றி, மொத்த கோலிவுட்டை திரும்பிப் பார்க்க வைக்கப் போகிறேன். அதேபோல், தல நடிகருக்காக கதை தயார் செய்து வைத்துள்ள இயக்குனர்களை அழைத்தும், அதில் நடித்து, 'ஸ்கோர்' பண்ணவும் தயாராகி விட்டேன்...' என்கிறார். ஆக, ஒரு காலத்தில், உச்ச நடிகருக்கு போட்டியாக இருந்து வந்த, உலக நடிகர், இப்போது அடுத்த தலைமுறை நடிகர்களான, தல- - தளபதிக்கு, 'டப்' கொடுக்க, தயாராகி விட்டார்.
'அப்பா... தம்பிகளுக்காக, ஹோட்டல் மற்றும் டிபார்ட்மென்டல் ஸ்டோரை, உங்க நண்பர்களிடமிருந்து வாங்க ஏற்பாடு செய்தீங்க. ஆனா, தம்பிகள் அதை ஏற்காமல், அவங்களுக்கு பிடித்தமான வேறு தொழில்கள் செய்ய போய் விட்டனர். நான் வேணா, அவற்றை எடுத்து நடத்துறேனே...' என்றான், கமல்.
'சரி... சரி... நமக்கு கைமாற்றி விடுறதா சொன்ன ஹோட்டல் மற்றும் டிபார்ட்மென்ட் ஸ்டோர் உரிமையாளர்கள, உன்னை வந்து சந்திக்க சொல்றேன். நீயே எடுத்து நடத்து...' என்று ஒப்புதல் அளித்தார், அப்பா.
சினி துளிகள்!
* 'கதைக்கேற்ப மட்டுமின்றி, உங்களது எதிர்பார்ப்புகளையும் முழுமையாக பூர்த்தி செய்யும் வகையில் வளைந்து கொடுத்து நடிக்க தயாராக இருக்கிறேன்...' என்று அறிவித்துள்ளார், கேத்ரின் தெரசா.
* விக்ரம் படத்தில் நடிப்பதற்காக, 10 கிலோ எடை குறைத்துள்ளார், கமல்.
அவ்ளோதான்!