புதிய தலைமுறை கேடிஎம் ஆர்சி 125 பைக் விரைவில் அறிமுகமாக உள்ளது. முகப்பு வடிவம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
இதன் பிஎஸ்-6 தரத்திலான 124.77 சிசி சிங்கிள் சிலிண்டர் பியூவல் இன்ஜெக்டட் இன்ஜின், 14.2 பிஎச்பி பவரையும், 12 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கும்.
எல்இடி ஹெட்லேம்ப், எல்இடி டிஆர்எல், வெள்ளை-ஆரஞ்ச் இரட்டை வண்ணம், அலைபேசி இணைப்பு வசதி, டிரல்லிஸ் பிரேம், புதுமையான வடிவில் ரியர்வியூ மிரர், சிறப்பான ஹேண்டில் பார், சஸ்பென்ஷன் பணிக்கு யுஎஸ்டி போர்க்குகள், மோனோ ஷாக் அப்சார்பர், சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், டிஎப்டி இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் சிறப்பம்சம்.
எதிர்பார்க்கும் விலை ரூ.1.90 லட்சம் (எக்ஸ்ஷோரூம்)