டாடா பஞ்ச் மைக்ரோ எஸ்யூவி.,யின் 'லுக்' கலக்கலாக உள்ளது. ரூ. 21,000 செலுத்தி 'புக்கிங்' செய்யலாம். அக். 20ல் விற்பனைக்கு வர உள்ளது. பியூர், அட்வென்ச்சர், அக்கம்ப்ளிஷ்ட், கிரியேட்டிவ் என நான்கு வேரியன்ட் களில் கிடைக்கும்.
புரொஜக்டர் ஹெட்லேம்ப், பட்ஜெட் விலை, ஐந்து சீட்டர், எல்இடி டிஆர் எல்கள், பெரிய கிரில் அமைப்பு, 16 இன்ச் அலாய் வீல், ரூப் ரெயில், இரட்டை வண்ணம், 7 இன்ச் டச் ஸ்கிரீன் உடன் ஹரமன் இன்போ டெயின்மென்ட் சிஸ்டம், ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார் பிளே இணைக்கும் வசதி, செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், டாடா ஐஆர்ஏ கனெக்டட் தொழில்நுட்பம், இபிடி உடன் ஏபிஎஸ் பிரேக்கிங், ரியர் பார்க்கிங் கேமரா சிறப்பம்சம்.
1.2 லிட்டர் ரெவோட்ரான் பெட்ரோல் (85 பிஎச்பி பவர், 113 என்எம் டார்க் திறன்), 1.2 லிட்டர் டர்போ சார்ஜ்டு பெட்ரோல் (100 பிஎச்பி பவர்) என இரண்டு இன்ஜின் ஆப்ஷனில் கிடைக்கும். 5 ஸ்பீடு மேனுவல்/ஏஎம்டி கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கும்.
எதிர்பார்க்கும் விலை: ரூ.5.5-8 லட்சம் (எக்ஸ்ஷோரூம்)
சென்னை டீலர்: TAFE ACCESS TATA CHENNAI -74016 99805
கோவை டீலர்: SRT Tata - 99448 99448