இளம் 'ஹீரோ'க்களுக்கான ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 4வி பைக் இன்று அறிமுகமாக உள்ளது.
எக்ஸ்பல்ஸ் 200 பைக்கில் 199.6 சிசி சிங்கிள் சிலிண்டர் 2 வால்வு இன்ஜின்(17.8 பிஎச்பி பவர், 16.45 என்எம் டார்க் திறன்)பயன்படுத்தப்படுகிறது. 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கும். புதிய எக்ஸ்பல்ஸ் 4 வி பைக்கில் நான்கு வால்வு இடம் பெற உள்ளது. இதனால் இன்ஜின் ஆற்றல் 20 பிஎச்பி பவராக அதிகரிக்கலாம்.
எல்இடி ஹெட்லைட், எல்இடி டெயில்லைட், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், புளூடூத் இணைப்பு, டிஸ்க் பிரேக் உடன் சிங்கிள் சேனல் ஏபிஎஸ், முன்புறத்தில் டெலிஸ்கோபிக் போர்க், பின்புறத்தில் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய மோனோஷாக் சிறப்பம்சம்.
சமீபத்தில் ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 பைக்கில் விபத்து காலத்தில் உதவும் 'டாப்பிள் அலர்ட் சிஸ்டம்' சேர்க்கப்பட்டது. இந்த வசதி எக்ஸ்பல்ஸ் 200 4 வி பைக்கிலும் இடம் பெறலாம்.
எதிர்பார்க்கும் விலை ரூ.1.30 லட்சம் (எக்ஸ்ஷோரூம்)
சென்னை டீலர்: Southern Hero - 98845 11373
கோவை டீலர்: Suguna automobile - 98422 21233