'சூப்பரான' போர்ஸ் குர்கா எஸ்யூவி., விற்பனைக்கு களமிறக்கப்பட்டுள்ளது. ரூ. 25 ஆயிரம் செலுத்தி 'புக்கிங்' செய்யலாம். அக்.15ல் 'டெலிவரி' பணிகள் துவங்கும். கிரில், பம்பர் வடிவம் மாற்றப்பட்டுள்ளது.
வட்ட வடிவ ஹெட்லேம்ப்கள், இரட்டை வண்ண இன்டீரியர் தீம், 7 இன்ச் டச் ஸ்கிரீன் உடன் இன்போடெயின்மென்ட் சிஸ்டம், கருப்பு நிற ரூப் ரெயில்கள், 3 ஸ்போக் ஸ்டியரிங் வீல், இபிடி உடன் கூடிய ஏபிஎஸ், டயர் பிரஷ்ஷர் மானிட்டரிங் சிஸ்டம், தனித்தனி ஆர்ம்ரெஸ்ட், பவர்
விண்டோஸ், ரியர் பார்க்கிங் சென்சார், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் சிறப்பம்சம். இதன் பிஎஸ்-6 தரத்திலான 2.6 லிட்டர் டீசல் இன்ஜின், 90 பிஎச்பி பவரையும், 260 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கும். கரடு முரடான சாலை, மலைப்பகுதி, 700 மி.மீ., ஆழமான நீர் நிறைந்த பகுதி என எந்த சூழ்நிலையிலும் போகலாம். அப்ப போர்ஸ் குர்கா வாங்க வந்துருவீங்க தானே...
விலை: ரூ. 13.59 லட்சம்(எக்ஸ்ஷோரூம்)