மல்லிகை நடவு செய்யும் நேரமிது
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 அக்
2021
00:00

பூக்கும் கிளைகளை கண்டறிந்து பருவமழை காலத்தில் மல்லிகை பதியன் நடவு செய்வதன் மூலம் நல்ல பலனை பெறலாம் என்கின்றனர் சேலம் வேளாண் அறிவியல் நிலைய உதவி பேராசிரியர் மாலதி, ஒருங்கிணைப்பாளர் ஜெகதாம்பாள்.

மல்லிகை உற்பத்தி குறித்து அவர்கள் கூறியதாவது:
குண்டுமல்லி அதிக மழையை தாங்கி வளரும் வெப்ப மண்டலப் பயிர். நிலத்தில் நீர் தேங்கினால் செடியின் வளர்ச்சி குறைந்து விடும். ஜூன் முதல் நவம்பர் வரை பதியன் மூலம் நடவு செய்யலாம். இரண்டு முறை நிலத்தை ஆழமாக உழுது குழிக்கு 20 கிலோ தொழு உரத்தை மண்ணுடன் கலந்து நிரப்ப வேண்டும். எக்டேருக்கு சாதாரணமாக 6400 பதியன்களும் அடர் நடவில் 8333 பதியன்கள் தேவைப்படும்.
நன்றாக வேர்விட்ட பதியன்களை மழைக்காலத்தில் குழியின் மையத்தில் நடவேண்டும். ஒரு லிட்டர் தண்ணீரில் ஒரு மில்லி குளோர்பைரிபாஸ் கலந்து ஊற்றினால் கரையானால் ஏற்படும் சேதத்தை குறைக்கலாம். நிலத்தில் வேர் பிடிக்கும் வரை வாரத்திற்கு 2 முறையும் அதன் பின் வாரம் அல்லது 10 நாட்களுக்கு ஒருமுறை நீர் பாய்ச்ச வேண்டும்.
மல்லிகை செடிக்கு 5 கிலோ தொழு உரத்துடன் 30 கிராம் தழைச்சத்து, தலா 60 கிராம் மணிச்சத்து, சாம்பல் சத்துக்களை ஜூன் ஜூலையிலும் இதேபோல நவம்பர், டிசம்பரிலும் மண்ணோடு கலந்து விட வேண்டும். துத்தநாக சல்பேட் 0.25 சதவீதம், மக்னீசியம் சல்பேட், பெரஸ் சல்பேட் தலா 0.5 சதவீதம் கலந்து பூப்பதற்கு முன் தழைகளின் மேல் தெளித்தால் மகசூல் அதிகரிக்கும்.
மாதம் ஒரு முறை 3 சதவீத பஞ்சகவ்யா, 0.4 சதவீத ஹியூமிக் அமிலம் கலந்து தெளித்து வளர்ச்சியை ஊக்கப்படுத்தினால் சாகுபடி செலவை குறைக்கலாம். நிலப்போர்வை அமைப்பதன் மூலம் களைகளின் வளர்ச்சியை கட்டுப்படுத்தலாம். மாதம் ஒருமுறை களை எடுக்கும் போது மண்ணை லேசாக கிளறிவிடுவதன் மூலம் பின்செய் நேர்த்தி, களை நிர்வாகத்தை ஒருங்கே செய்து சாகுபடி செலவை குறைக்கலாம்.
செடிகள் நட்ட முதலாண்டிலேயே பூக்க ஆரம்பிக்கும். இரண்டாமாண்டில் இருந்து சீரான மகசூல் பெறலாம். சராசரியாக எக்டேருக்கு 8 - 9 டன் அளவும், துல்லியப் பண்ணைய முறையில் 12 டன் வரை மகசூல் கிடைக்கும்.
மல்லிகை செடியில் சில கிளைகள் பூ எடுக்காமல் தழைகளையே உற்பத்தி செய்யும். திடீர் மரபணு மாற்றத்தால் பூக்காமல் போய்விடும். எனவே பூ எடுக்காத கிளைகளை பதியன் முறைக்கு பயன்படுத்தக்கூடாது. ஒரு முறை பதியன் இட்டால் 15 ஆண்டுகள் பலன் தரும் என்பதால் பூக்கும், பூக்காத கிளைகளை கண்டறிந்து புதிய கன்றுகளை உற்பத்தி செய்ய வேண்டும்.
தொடர்புக்கு 97877 13448

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
என்னுயிர் தமிழகமே - Ameerpet Hyderabad,இந்தியா
07-அக்-202123:18:51 IST Report Abuse
என்னுயிர் தமிழகமே நன்றி மாலதி மற்றும் ஜெதாம்பால்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X