இது உங்கள் இடம்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 அக்
2021
00:00

கிராமத்து இளைஞர்களின் சேவை!
சமீபத்தில், கிராமத்திலுள்ள உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தேன்.
அப்போது, வயல்வெளியில் வேலை பார்த்த பெண்ணுக்கு, பாம்பு கடித்து விட்டதாக தகவல் வந்தது. ஓட்டுனரான என் உறவினர், தன் வீட்டு முன் நிறுத்தியிருந்த இலவச ஆம்புலன்சில் பாம்பு கடிபட்ட பெண்ணை ஏற்றி, அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்து, அவரின் உயிரைக் காப்பாற்றினார்.
'இது என்ன, இலவச ஆம்புலன்ஸ் சேவை?' என்று வினவினேன்.
'வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் பணிபுரியும், எங்கள் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்களின் நன்கொடையில் வாங்கியது, இது; இங்குள்ள மக்களின் அவசர மருத்துவ உதவிகளுக்கு பயன்படுத்துகிறோம்.
'அதுமட்டுமல்லாமல், இதற்கென முறையாக மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற்றுள்ளனர். குறிப்பிட்டதொகையை வங்கியில் வைப்புத் தொகையாக போட்டு, அதில் கிடைக்கும் வட்டியில், எனக்கு மனநிறைவான மாத ஊதியத்தையும் வழங்குகின்றனர்...' என்றார்.
இலவச ஆம்புலன்ஸ் சேவையை செய்து, தங்கள் கிராம மக்களுக்கு உதவிக் கொண்டிருக்கும் அந்த இளைஞர்களை, மனதாரப் பாராட்டினேன்.
- ஆர்.ஜெயசங்கரன், வானுார்.

கம்ப்யூட்டர் பில்லாக இருந்தாலும்...
குடும்பத்தாருடன் ஜவுளி எடுக்க, பெரிய ஜவுளி கடைக்கு சென்றிருந்தோம். தேவையான ஜவுளிகளை வாங்கி, 22 ஆயிரம் சொச்சம், 'பில்' தொகையை, 'டெபிட் கார்டு' மூலம் செலுத்தினேன்.
ஊருக்கு திரும்பியதும், மனதில் சிறிதாக சந்தேகம் வரவே, வாங்கி வந்த ஜவுளிகளை சரிபார்க்கத் துவங்கினேன். அதில், என் மகளுக்கு எடுத்த டிரசில் ஒட்டியுள்ள விலையும், கம்ப்யூட்டர் பில்லில் உள்ள தொகைக்கும், 2,000 ரூபாய் வேறுபாடு இருந்தது. லுங்கி ஒன்றில், 100 ரூபாய் வித்தியாசம். உடனே, கடை தொலைபேசிக்கு அழைத்து, விபரம் கூறினேன்.
'மறுநாள் மதியம், 2:00 மேல் வந்து, சரிபார்த்து பெற்றுக்கொள்ளுங்கள்...' என கூறி, தொடர்பை துண்டித்தனர்.
விதியே என, மறுநாள் அவர்கள் சொன்ன நேரத்திற்கு சென்று கேட்டேன்.
'சார், மன்னிக்கணும்... குழந்தை டிரசில் ஒட்டியுள்ள பார்கோடு பில் தவறானது. ஸ்கேனரும் கொஞ்சம் மக்கர் பண்ணுது. நீங்க அதிகமாக கொடுத்த தொகைக்கு ஏதாவது துணி எடுங்க அல்லது பிறகு எப்பவாவது துணி எடுத்துக்குங்க...' என, சாதாரணமாக பதில் கூறினர்.
வேறு வழியின்றி, மேற்படி தொகைக்கு தேவையில்லாத துணிகளை எடுத்து திரும்பினோம். இது, எல்லாருக்கும் ஒரு பாடமாக அமையட்டும். இதனால், மன உளைச்சல், பஸ், உணவு செலவு மற்றும் நேரமும் வீணானது தான் மிச்சம்.
தீபாவளிக்கு துணி எடுப்போர், கடையிலேயே, ஒருமுறைக்கு இருமுறை ரகங்களையும், விலையையும் சரிபார்த்துக் கொள்வது சாலச் சிறந்தது.
- எம்.எஸ்.வி. அருண், சிவராமபேட்டை.

சமூக சேவையாற்றும் ஓய்வுபெற்றவர்!
ஆசிரியராக பணிபுரிந்து ஓய்வுபெற்ற நண்பரை வெகுநாட்களுக்கு பின், சமீபத்தில் சந்தித்தேன்.
'ஓய்வு நாட்கள் எப்படி போகிறது...' என கேட்டேன்.
'ஆரம்ப நாட்களில் வீட்டில், 'டிவி' பார்த்துக் கொண்டிருந்தேன்; அது போரடித்தது. ஒருநாள், ஓய்வூதிய பணம் எடுப்பதற்காக வங்கிக்கு போனபோது, வயதானவர்களும், படிப்பறிவில்லாத பாமரர்களும் பணம் எடுக்க, செலுத்த, சலான் எழுதத் தெரியாமல் மிகவும் சிரமப்படுவது தெரிந்து, உதவினேன். இதையே ஏன் தொடர்ந்து செய்யக் கூடாது என எண்ணினேன்.
'வங்கி மேலாளரிடம் அனுமதி பெற்று, ஒரு டேபிள், நாற்காலி வாங்கி, அங்கேயே காலை முதல் மாலை வரை இருந்து, வாடிக்கையாளர்களுக்கு வங்கியின் பல்வேறு திட்டங்களை எடுத்துச் சொல்லி, புதிய கணக்கு துவங்குவது என, பல்வேறு சேவைகளை இலவசமாக செய்யத் துவங்கினேன். இதுபோன்ற பணிகள் மனதுக்கு நிறைவை தருகிறது. ஓய்வு நேரமும் பயனுள்ளதாக கழிகிறது...' என்றார்.
கேட்டதும் உள்ளம் நெகிழ்ந்து, அவரை மனதார பாராட்டி வந்தேன்.
பெ. பாண்டியன், கழனிவாசல்.

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muthukumar - Madurai,இந்தியா
16-அக்-202121:57:45 IST Report Abuse
Muthukumar யாராக இருந்தாலும் ஒரு ஊரிலே ஒரு ராஜா என்று தான் கருத்தை இடுகின்றனர். முழு முகவரி மற்றும் அலைபேசி எண்னை பகிர்ந்து கொண்டால் உதவி செய்வோரை பாராட்டலாமே.?
Rate this:
Cancel
சமநிலை மூர்த்தி அந்தக் கடைக்காரர்கள் சாமர்த்தியம் தான் இது. தப்பாக பில் போட்டு, மீதி பணத்தை கொடுக்காமல் துணியை வாங்க வைக்கும் வியாபார யுக்தி. கொஞ்ச பொருட்கள் எடுத்தால் எளிதாக கண்டுபிடித்து விடலாம் என்று நினைத்து, அதிக பொருட்கள் வாங்கியவர்களிடம் அவர்கள் வேலையை காட்டுகிறார்கள்.
Rate this:
Cancel
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
10-அக்-202106:23:10 IST Report Abuse
NicoleThomson அருண், சிவராமபேட்டை., இப்போது புரிகிறது நாம் துணி தெரிந்து எடுத்தபின்னர் எதற்கு பில்கட்டி நம் கைக்கு வரும்வரை அதை நம் கண்ணிலேயே காட்டுவதில்லை என்று சமீபத்தில் கோவைக்கு சென்று தீபாவளி , கிருஸ்துமஸ் துணிகள் எடுத்து வந்தோம் , இப்போ அதையெல்லாம் காலையில் எடுத்து சரிபார்த்து விடுகிறேன்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X