அந்துமணி பதில்கள்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 அக்
2021
00:00

எம். பாரூக், திருச்சி:ஒரே இரவில் இவ்வளவு ரவுடிகளையும் கைது செய்துள்ளாரே, டி.ஜி.பி., சைலேந்திரபாபு...
ஸ்காட்லாந்து போலீசை மிஞ்சி விட்டார்; தமிழகத்துக்கு கிடைத்த வரம்!

* எம். ரங்கராஜன், மதுரை: 'மக்கள் போராட்டமே, 'நீட்' தேர்வுக்கு நிரந்தர தீர்வு' என்று, தொல்.திருமாவளவன் கூறியுள்ளாரே...
ஐயா... ரங்கராஜனே... உங்களுக்கு உழைக்கக் கிடைக்கும் நேரத்தை, இப்படிப்பட்டவர்களின் அறிக்கைகளை, செய்தித்தாள்களிலும், 'டிவி'களிலும், பொதுக்கூட்டங்களிலும் பார்த்து தொலைத்துக் கொண்டிருக்கிறீர்கள்; வேண்டாமே!

* க. கேசவன், குஞ்சன்விளை, கன்னியாகுமரி: ஏகப்பட்ட பிரச்னைகள் உள்ளதே எனக்கு...
பிரச்னைகள் என்பது, நமது மனதைப் பொறுத்து தான் உள்ளது. எல்லாருக்கும் தான் பிரச்னைகள் உள்ளன! பிரச்னைகளை, பிரச்னைகளாக எடுத்துக் கொள்வது தான் பிரச்னை!

ஆர். பிரசன்னா, ஸ்ரீரங்கம், திருச்சி: வைகோவின் மகனாவது, அரசியலில் ஜொலிக்க வாய்ப்புள்ளதா?
அப்பாவாலேயே ஜொலிக்க முடியவில்லை... இவருக்கும் அந்த ஆசை தேவையா?

என். கோவிந்தன், நெல்லை: நான் பணக்காரன்; என் நண்பர்கள் என்னைப் பார்த்து பொறாமைப்படுகின்றனரே...
தன் சொந்தத் திறமையில் நம்பிக்கை கொள்ளாதவர்களும், பணத்தை சம்பாதிக்க திறமை இல்லாதவர்களும் தான், பணக்காரர்களைப் பார்த்து பொறாமை கொள்கின்றனர். இவர்களை, 'கட்' செய்து விடுங்கள்!

க. சரவணன், குளச்சல், குமரி: காதல் குறித்த ஒரு கேள்வி... ரோமியோ - ஜூலியட்; லைலா - மஜ்னு; அம்பிகாபதி - அமராவதி... இவர்களில் உங்களைக் கவர்ந்த ஜோடி எது?
எந்த ஜோடியுமே அல்ல. அவர்கள் எல்லாம் காதலர்களே அல்ல... தங்கள் தற்கொலைக்கு காதலை ஒரு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டவர்கள்!

* கே. மாரிமுத்து, கிருஷ்ணாபுரம், விருதுநகர்: பதவியில் இருக்கும் அரசியல்வாதிகள், சொத்து சேர்த்து வைப்பதில் மட்டும் குறியாக இருக்கின்றனரே... அடுத்து, 'கம்பி' எண்ண வேண்டும் என்ற பயம் இல்லையா?
அப்போதெல்லாம் விஞ்ஞானப்பூர்வமாக ஊழல் செய்து, தப்பி வந்தனர். முன்பு, அ.தி.மு.க.,வில் இந்திரகுமாரி இருந்தபோது (இப்போது தி.மு.க.,வில் உள்ளார்.) செய்த ஊழலுக்காக தற்சமயம், சட்டத்தின் பிடியில் மாட்டிக் கொண்டு ஐந்து ஆண்டு கடுங்காவல் தண்டனை வாங்கியுள்ளார். அவரது கணவரும், இதே தண்டனையை பெற்றுள்ளார்.நீதி தாமதமானாலும், சரியான தீர்ப்பையே வழங்கும் என்பதற்கு இது ஒரு உதாரணம்.

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X