திண்ணை!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 அக்
2021
00:00

ஒருநாள், தன் வீட்டில் நண்பர்களுக்காக விருந்து வைத்தார், பிரபல ஓவியரான பிகாசோ.
விருந்தில் கலந்துகொண்ட அவரது நண்பர் ஒருவர், பிகாசோ ஓவியம் ஒன்று கூட சுவரில் மாட்டப்படாததை கவனித்தார்.
'உங்கள் ஓவியம் ஒன்று கூட பிடிக்காதா... பிறகு ஏன் ஒரு ஓவியத்தை கூட சுவரில் மாட்டவில்லை...' என கேட்டார், நண்பர்.
'என் ஓவியங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால், அதை வாங்குமளவுக்கு என்னிடம் பணம் இல்லையே...' என்றார், பிகாசோ.

அனைத்து மதங்களையும் சமமாக மதித்தவர், திப்பு சுல்தான். இந்து மத கோவில் வழிபாட்டுக்கும் உரிய மரியாதை அளித்தவர்.
ஸ்ரீரங்கபட்டினம் ஆற்றங்கரையில் உள்ள, ரங்கநாதர் கோவிலின் பூஜை மணி ஒலிப்பதை, தினமும் கேட்க தவற மாட்டார். ஒருமுறை, கோவில் மணி ஓசை தாமதமாக ஒலித்தது.
உடனே, கோவில் அர்ச்சகரை அழைத்து விசாரித்தார்.
'இனிவரும் நாட்களில், வழிபாட்டில் நேரம் தவறக்கூடாது...' என்று அறிவுறுத்தி, அனுப்பி வைத்தார், திப்பு சுல்தான்.

இரண்டாம் உலகப்போருக்கு முன், நியூயார்க் நகர தொலைபேசி டைரக்டரியில், ஹிட்லர் என்ற பெயரில், 22 பேர் இருந்தனர். போர் முடிந்து, உலகமே, ஹிட்லரை வில்லனாக பார்த்தபோது, அடுத்து வெளியிடப்பட்ட டைரக்டரியில், ஹிட்லர் என்கிற பெயரில் ஒருவர் கூட இல்லை.
காரணம், அந்த பெயரில் தொடர்ந்து நீடித்தால் ஆபத்து என்று கருதி, அனைவரும் தங்களது பெயரை மாற்றிக் கொண்டனர்.

விஞ்ஞானி ஜெகதீஷ் சந்திரபோஸை, தன் இல்லத்தில் விருந்தினராக தங்கியிருக்கும்படி அழைத்தார், கவிஞர் ரவீந்திரநாத் தாகூர்.
அதை ஏற்ற ஜெகதீஷ் சந்திரபோஸ், தாகூருக்கு ஒரே ஒரு நிபந்தனை விதித்தார்.
'நான் தங்கியிருக்கும் நாட்களில், தினமும் ஒரு கதையை எழுதி, என்னிடம் படித்துக் காட்ட வேண்டும்...' என்பது தான், தாகூருக்கு விதித்த நிபந்தனை.
தாகூரும், போஸ் விதித்த நிபந்தனையை ஏற்று, தினமும் ஒரு கதையை எழுதினார். அதை தினமும் ஜெகதீஷ் சந்திரபோஸிடம் படித்தும் காண்பித்தார்.
ஒரு விஞ்ஞானியால், ஒரு கவிஞருக்குள் இருந்த கதாசிரியர் கண்டுபிடிக்கப்பட்டதால், பல கதைகள் உலகுக்கு கிடைத்தது.

ஒருநாள், தன் அமைச்சர் பைரம்கானுடன் பேசிக் கொண்டிருந்தார், முகலாய பேரரசர் ஹூமாயூன்.
இரவு வெகு நேரமாகி விட்டது. அப்போது, பைரம்கானுக்கு துாக்கம் வந்து விட்டது. இதைக்கண்ட ஹூமாயூனுக்கு கடுங்கோபம் வந்தது.
'பைரம்கான், நான் உன்னுடன்தான் பேசிக் கொண்டிருக்கிறேன், தெரிகிறதா...' என, கோபமாக கேட்டார்.
உடனே, பைரம்கான் சுதாரித்து, 'அரசே, நான் கவனத்துடன் தான் தங்களது பேச்சை கேட்டுக் கொண்டிருக்கிறேன். அரசர் பணியில், கண்களை கவனிக்க வேண்டும்; துறவியர் பணியில், நாவை கவனிக்க வேண்டும்; அறிஞர் பணியில், ஆராய்ச்சியை கவனிக்க வேண்டும் என்று, நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.
'அவற்றில் நான் எதை கவனிக்க வேண்டும் என்று ஆழ்ந்து ஆராய்ந்து கொண்டிருக்கிறேன். ஏனென்றால், நீங்கள் அரசராகவும், அறிஞராகவும், துறவியராகவும் இருக்கிறீர்கள்...' என்றார்.
அமைச்சரின் பேச்சால், அரசரின் கோபம் குறைந்தது.

நடுத்தெரு நாராயணன்

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
13-அக்-202108:12:05 IST Report Abuse
Natarajan Ramanathan மத வெறியன் திப்பு சுல்தானைப்பற்றிய பல பொய்க்கதைகளில் இதுவும் ஒன்று. அவனால் இந்துக்கள் பட்ட துன்பம் மிகவும் அதிகம்.
Rate this:
Cancel
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
10-அக்-202106:01:19 IST Report Abuse
NicoleThomson இன்று என்னவோ தடுமாறி விட்டீர் திண்ணையாரே திப்பு சுல்த்தான் மேல்கோட்டை என்று ஓர் ஊரில் ஆடிய வெறியாட்டத்தில் அந்த ஊரில் தமிழ் பேசும் குடும்பங்கள் இன்றளவும் தீபாவளி கொண்டாடுவதில்லை ஒரு துக்க நிகழ்வாகவே வைத்துள்ளனர் . கொடகு எனப்படும் கூர்கில் இந்த வெறியனால் கைகால் இழந்தவர்கள் பலர் காரணம் மதம் மாறவில்லை , அவர்கள் இந்த தசராவை அவர்கள் ஊரில் கொண்டாட முயன்றது என்று வரலாறு பல
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X