மனித நேயம்!
விசித்திரம் நிறைந்த
விந்தை உலகத்தில்
விமர்சனங்களுக்கு நிரந்தர
முற்றுப்புள்ளி வைத்து
வரலாற்று சாதனைகள்
படைப்போம் வாரீர்!
கற்பனை மிகுந்த
கனவு உலகத்தில்
கவலைகளை குப்பையில் எறிந்து
கண் குளிர சிறகு விரித்து
பறப்போம் வாரீர்!
இன்பங்கள் குவிந்த
இனிய உலகத்தில்
துன்பங்களை மூட்டை கட்டி
துாரத்தில் எறிந்து
இயற்கை அழகை
ரசித்து ருசிப்போம் வாரீர்!
அதிசயங்கள் மிகுந்த
அழகிய உலகத்தில்
மன அழுக்கை களைந்து
அற்புதங்கள் பல
நிகழ்த்துவோம் வாரீர்!
செல்வம் கொழிக்கும்
சந்தோஷ உலகத்தில்
செருக்கை மிதித்து
செழிப்பாய் வாழ்வோம் வாரீர்!
மா மனிதர்கள் நிறைந்த
மாணிக்க உலகத்தில்
மாசுகளை துடைத்து
மனித நேயத்தோடு
வாழ்ந்து மகிழ்வோம் வாரீர்!
எல்.மூர்த்தி, கோவை.