பகலில் செய்யும் பூஜை, இறைவனுக்கும், இரவில் செய்யும் பூஜை, இறைவிக்கும் உரியவை என்பது பொதுவான வழக்கமாகும். ஆனால், நவராத்திரி ஒன்பது நாட்கள் பகலிலும், இரவிலும் செய்யும் பூஜைகள் தேவிக்கே நடைபெறுகின்றன. ஒன்பது நாட்களிலும் தேவியை பூஜிக்க முடியாதவர்கள், அஷ்டமியன்றாவது அவசியம் ஜெகன் மாதாவை பூஜிக்க வேண்டும்
* நவராத்திரி பூஜை செய்யும் வழக்கம் புராண காலத்திலேயே இருந்துள்ளது. பஞ்ச பாண்டவர்களில் மூத்தவரான தர்மர், ஸ்ரீராமர், கிருஷ்ணன், சாவித்திரி ஆகியோர் நவராத்திரி வழிபாடு செய்து வந்தனர்
* நவராத்திரியில் லலிதா சஹஸ்ரநாமம் சொல்ல முடியாதவர்கள், அபிராமி அந்தாதியில் வரும், 'தனம் தரும் கல்வி தரும்' என்ற பாடலை தினமும் கூறினாலே, சகல நன்மைகளும் கிட்டும். முடிந்தவர்கள், 100 பாடல்களையும் படிக்கலாம்; தன்னம்பிக்கையை அள்ளித் தரும்
* அரிசியுடன் சிறிதளவு வெந்தயத்தை ஊற வைத்து அரைத்து, இழை கோலம் போட்டால், சீக்கிரம் அழியாது.