வாக்குக்கு அதிபதியான சரஸ்வதி, நம் உடலில் வெவ்வேறு பெயருடன் வியாபித்திருக்கிறாள். தலையில், வசினி வாக் தேவதையாகவும்; நெற்றியில், காமேஸ்வரியாகவும்; புருவ மத்தியில், மோகினியாகவும்; கழுத்தில், விமலாவாகவும்; இதயத்தில், அருணா வாக் தேவதையாகவும்; நாபியில், ஜயினியாகவும்; மர்ம ஸ்தானத்தில், சர்வேஸ்வரியாகவும்; மூலாதாரத்தில், கவுளினியாகவும் வியாபித்திருப்பதாக, 'சாக்த தந்திர' நுால்கள் கூறுகின்றன.
சரஸ்வதியின் வீணை வகைகள்!
கச்சபி, கபிஸாலா, கதாவாரணா, கின்னரி, லகுகின்னரி, கோஷவதி, குஞ்சிகா, வல்லகி, விபஞ்சி, அலாவணி, சித்ரா, மதுஸ்யந்திரி, திரிகவி, கூர்மி, ஜேஷ்டா, ஸாரங்கி, சத தந்தரி, பரிவர்த்தி, உதம்பரி, பினாகி, கஷ்கலா, நிஸ்ஸங்கா, பிரம்ம வீணா, நகுசவுஷ்டி, தம்ஸபி என்பன, சரஸ்வதியின் வீணை வகைகள்.
சரஸ்வதியின் அருள் பெற்றவர்கள்!
அன்னை ஸ்ரீ சரஸ்வதி தேவியை பிரம்மன், வால்மீகி, வியாசர், காளிதாசர், யாக்ஞவல்கியர், பவபூதி, ஆதிசங்கரர், கம்பர், போஜ மகாராஜா, விசுவாமித்திரர், வாசஸ்பதி, மிகரர், குமர குருபரர், ஒட்டக்கூத்தர் ஆகிய முக்கியமானவர்களுடன், பல யோகிகளும், ஞானிகளும் வழிபட்டு, அவளுடைய அருளை பெற்றுள்ளனர்.
சரஸ்வதியை வழிபட்டோர்!
அஷ்ட சரஸ்வதி வடிவங்களில் ஒன்றான கட சரஸ்வதியை, தண்டி மகாகவி; இன்னொரு வடிவமான சித்தேஸ்வரியை, சாலி வாகன மன்னன்; சியாமளா வடிவ சரஸ்வதியை, காளிதாசன் வழிபட்டதாகவும், சரஸ்வதி மகாத்மியம் கூறுகிறது.