'வெறும் காகிதத்தில் என்ன பண்ணிட முடியும் நீ?'
- சுற்றமும், நட்பும்!
இக்கேள்விக்கு பதிலாய்... பொம்மைகளில் 7 வகை, வால்ஹேங்கிங் 4 வகை, கூடைகளில் 5 வகை, பேனா ஹோல்டர், தொப்பி, பூந்தொட்டி முதல் குப்பை பெட்டி என 20ற்கும் மேலான காகித படைப்புகளை தயாரிக்கிறார் ஜே.ஏ.ராதிகா.
உடற்குறைபாட்டால் சக்கர நாற்காலியில் இருப்பினும், காகித கலையை தன் அடையாளமாக்கி சாதித்திருக்கும் இவர் கோவையைச் சேர்ந்த 21 வயது கல்லுாரி மாணவி.
நானும் தொழிலும்
வீணாகும் செய்தித்தாள், டிஷ்யூ தாள், மூங்கில் குச்சி, மெல்லிய கம்பி, அக்ரலிக் வண்ணம், பசை... இதெல்லாம்தான் காகித பொம்மைக்கான மூலப்பொருட்கள். எட்டு அங்குலத்துல இருந்து 2 அடி வரைக்குமான காகித பொம்மைகளை தயாரிக்கிறேன். மூன்றடி உயர வால்ஹேங்கிங், இரண்டடி உயர குப்பை பெட்டி, வர்த்தக நிறுவனங்களுக்கான பிராண்டிங் புரோமோஷன் பொம்மைகள்னு என் பட்டியல் நீளுது!
தயாரிப்புக்கு பெற்றோர், சந்தைப்படுத்த ஆன்லைன், விநியோகம் செய்ய சகோதரர் உதவி! இப்போ உலக நாடுகளுக்கும் என் காகித பொம்மைகள் பயணப்படுது. 'பிரத்யேகமான 'பிராண்ட்' உருவாக்கி சாதிக்கணும்'ங்கிறது என் கனவு.
சிறப்பு பொருள்
நம் புகைப்படம் அல்லது நினைவுகளை பிரதிபலிக்கும் காகித பொம்மைகள் ரூ.500 முதல்
97915 15994