'நோக்கியா'வின் புதிய டேப்லெட் | டெக் டைரி | Tech Diary | tamil weekly supplements
'நோக்கியா'வின் புதிய டேப்லெட்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

10 அக்
2021
00:00

எதிர்பார்த்தபடியே, 'நோக்கியா டி 20' டேப்லெட் அறிமுகம் ஆகியுள்ளது. ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தில் செயல்படும் இந்த டேப்லெட்டுக்கு, இரண்டு ஆண்டுகளுக்கு ஆப்ரேட்டிங் சிஸ்டம் அப்டேட்டும், மூன்று ஆண்டுகளுக்கு உரிய நேரத்தில் செக்யூரிட்டி அப்டேட்டுகளும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த டேப்லெட், 2கே டிஸ்பிளே உடன், 3 ஜி.பி., மற்றும் 4 ஜி.பி., ரேம் தேர்வுகளுடன் வந்துள்ளது. கேமராவை பொறுத்தவரை, 5 மெகா பிக்ஸல் செல்பி கேமராவும், பின்பக்கத்தில் 8 மெகா பிக்ஸல் கேமராவும் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், பின்பக்க கேமராவுக்கு எல்.இ.டி., பிளாஷ் வசதியும் உள்ளது.
மேலும் 32 ஜி.பி., மற்றும் 64 ஜி.பி., என இரு வகையான உள் சேமிப்பகம் கொண்டதாக உள்ளது. தேவைப்பட்டால், மைக்ரோ எஸ்.டி., கார்டு வாயிலாக 512 ஜி.பி., வரை அதிகரித்துக் கொள்ளலாம். வைபை இணைப்புடன் மட்டுமின்றி; 4ஜி எல்.இ.டி., இணைப்பும் கொண்ட மாடலும் உள்ளது. ஸ்டீரியோ ஸ்பீக்கர்களும் உள்ளன.
பேட்டரியை பொறுத்தவரை 8,200 எம்.ஏ.எச்., பேட்டரி இருப்பதால், ஒரு முறை சார்ஜ் ஏற்றினால் தாராளமாக நாள் முழுக்க பயன்படுத்தலாம். 10 வாட் சார்ஜர் கொடுக்கப்பட்டிருப்பினும், 15 வாட் சார்ஜரையும் சப்போர்ட் செய்யும்.
முதற்கட்டமாக ஐரோப்பாவில் அறிமுகம் ஆகியுள்ளது. இந்தியாவில் எப்போது என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை.
எதிர்பார்க்கப்படும் விலை:
வைபை மட்டும் கொண்டது: 17,200 ரூபாய்.
வைபை மற்றும் 4ஜி கொண்டது: 20,600 ரூபாய்.

Advertisement

 



We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X