என் வயது, 60; சிறுவர்மலர் இதழின் நீண்டகால வாசகி; ஆங்கிலப் பள்ளியில் பயிலும் பேரன், பேத்தியருக்கு, சிறுவர்மலர் உதவியால் தமிழ் வாசிக்க கற்று தருகிறேன்.
சமீபத்தில் டில்லியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றேன்; அங்கு சிறுவர்மலர் கண்டு, மட்டற்ற மகிழ்ச்சியடைந்தேன். தமிழ் உள்ளடக்கத்தை, ஹிந்தி மொழியில் அங்குள்ளவர்ளுக்கு பெயர்த்து கூறினேன். ஆர்வத்துடன் கேட்டனர்.
'ஸ்கூல் கேம்பஸ்' மற்றும் 'வீ டூ லவ் சிறுவர்மலர்!' பகுதிகளை விரும்பி ரசிக்கின்றனர். நெஞ்சம் நெகிழ்த்தும் மலராகவும், கல்வி களஞ்சியமாகவும் திகழ்கிறது சிறுவர்மலர். தலைமுறைகளை வளர்க்கட்டும்.
- பா.ஜெயலட்சுமி, விருதுநகர்.
தொடர்புக்கு: 99524 12918