தேவையான பொருட்கள்:
பப்பாளிபழத் துண்டு - 10
அரிசி - 200 கிராம்
நெய் - 100 கிராம்
உளுந்தம் பருப்பு - 4 தேக்கரண்டி
வெந்தயம் - 1 தேக்கரண்டி
தண்ணீர் - தேவையான அளவு.
செய்முறை:
அரிசி, உளுந்தம் பருப்பு, வெந்தயத்தை, தண்ணீரில், 1 மணி நேரம் ஊற வைத்து அரைக்கவும். நன்றாக அரைபட்டதும், பப்பாளித் துண்டுகளையும் சேர்த்து அரைக்கவும்.
பணியாரக்கல் குழியில் நெய் தடவி, அரைத்த மாவை ஊற்றி, இருபுறமும் வேக வைத்து எடுக்கவும். அற்புத சுவையில், 'பப்பாளி பணியாரம்!' தயார்.
சிறுவர், சிறுமியர் விரும்பி சுவைப்பர். கண் பார்வையை துலக்க வல்லது.
- ஏ.அபிபுன்னிஸ்ஸா, கடலுார்