அந்துமணி பா.கே.ப.,
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 அக்
2021
00:00

பா - கே

நண்பர்கள் குழு கூடியிருந்த ஒரு மாலை வேளை...
'இக்கால பிள்ளைகளுக்கு, 'ஸ்மார்ட் போன்' பயன்படுத்துவதில் இருக்கும் புத்திசாலித்தனமும், சாதுர்யமும், மற்ற விஷயங்களில் இருக்கிறதா என்று சந்தேகமாக உள்ளது...' என்று, அலுத்துக் கொண்டார், அன்வர்பாய்.
'ஏன் திடீரென்று இப்படி ஒரு சந்தேகம்...' என்றார், லென்ஸ் மாமா.
'பின்ன என்னப்பா... என் பேரனிடம், ஏண்டா, தலைமுடியை பரட்டை மாதிரி வெச்சிருக்கே... சீப்பு எடுத்து சீவுடான்னேன். சீப்பு பல்லை எல்லாம் கத்தியால் சீவி எடுத்துட்டு வராம்பா...' என்றார், சோகமாக அன்வர்பாய்.

வெடி சிரிப்பு சிரித்த மாமா, 'எதையும் தெளிவா சொல்லணும் பாய்...' என்றார்.
'புத்திசாலித்தனம் என்றதும், மூளை சம்பந்தமா ஒரு செய்தி படிச்சேன்...' என்றபடி, தன் ஜோல்னா பையை துழாவினார், 'திண்ணை' நாராயணன்.
'ஐயோ... வந்துட்டார்ய்யா... என்சைக்ளோபீடியா... எப்பப் பாரு, ஏதாவது தகவல் சொல்லிட்டு...' என்று, நாராயணன் சொல்ல ஆரம்பிப்பதற்கு முன்பே, 'பிரேக்' போட்டார், லென்ஸ் மாமா.
'சும்மாயிருங்க மாமா... ஏதாவது பயனுள்ள தகவலாதான் இருக்கும். நம் வாசகர்களிடமும் பகிர்ந்துக்கலாமே... நீங்க சொல்லுங்க, நாணா சார்...' என்றேன்.
சொல்ல ஆரம்பித்தார்:
இறைவனின் படைப்பில், சிறப்பானதும், உயர்வானதும் மனிதன் தான். அவனின் ஒவ்வொரு உறுப்பும் விலை மதிப்பற்றது. ஆனால், மனிதனோ தன்னையும் தன்னுடைய மதிப்பையும் அறியாமல், செல்லாக்காசாக இருப்பதாக புலம்புகிறான்.
ஒவ்வொரு தனி மனிதனும், செல்லுபடியாகும் காசு தான்.
நம்மையும், நம் உடலுறுப்புகளை குறித்தும் பக்கம் பக்கமாக எழுதலாம். இருந்தாலும், பிரதானமாக மூளையை குறித்து பார்க்கலாம்...
மூளையை நம் உடலின் தலைமைச் செயலகம் என்று கூறலாம்.
ஒரு குண்டுமணி அளவு மூளையில் கோடிக்கணக்கான நியூரான்கள் எனும் நரம்பணுக்கள், பரஸ்பர செய்திகளை பரிமாறிக் கொள்கின்றன. நாம் பார்ப்பது, நினைப்பது எல்லாம் பதிவாகிறது. தேவையான போது அது, நமக்கு ஞாபக அலைகள் மூலம் பளிச்சிடும்.
நம் மூளையில் தேவையில்லாத கண்ட சிந்தனைகளையும் போட்டு, அதை குப்பைக்கூடை ஆக்கிவிடக் கூடாது. ஆகவே, மூளைக்குள் எதை இட வேண்டும் என்பதில் தெளிவு வேண்டும்.
நம் மூளையின் எடை சுமார், 1300 முதல் 1400 கிராமுக்குள் தான் இருக்கும். அதில் தண்ணீர், 80 சதவீதம், கொழுப்பு, 10 சதவீதம், புரதசத்து, 8 சதவீதம் உள்ளது.
இந்த மூளை, இரு பகுதியாக இருக்கிறது.

இடது பக்க மூளையில் இருக்கும் பேக்கேஜ்
1. அன்றாட வேலைகளை வழக்கமாக செய்தல்
2.தர்க்கரீதியான யோசனைகள் செய்வது
3.பேசுவது போன்ற நிகழ்வுகள்
4.ஒரு விஷயத்தை பற்றி புரிந்து கொள்ள முயற்சிப்பது.

வலது பக்கம் மூலையில் இருக்கும் பேக்கேஜ்
1. திட்டமிடுவது
2. கனவு காண்பது
3.வாழ்வில் முன்னுக்கு வர வேண்டும் எனும் நினைப்பு
4.உணர்ச்சிவசப் படுவது
5. புதிய உத்திகள்
6.இயல், இசை, நாடகம் போன்ற திறமைகளுக்கு காரணமாகிறது.
சிறு பிள்ளைகள் வளரும் போது, மூளையில் நியூரான்கள் அதிகமாய் வளரும். அவர்கள், அந்த வயதில் பல மொழிகளை கற்க முயலலாம், இசை கற்கலாம், கராத்தே பயிலலாம், கதை, கவிதை, கட்டுரைகள் எழுத முயற்சிக்கலாம். இதில் எதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோமோ, அதிலே சிறப்பிடம் பெறுவோம்.
ஒரு சிலர், எல்லாவற்றுக்கும் முக்கியத்துவம் கொடுத்து, ஆர்வம் காட்டும்போது, அவர்கள் சகலகலா வல்லவர்களாய் ஆகின்றனர்.
இறைவன் உண்டாக்கிய மூளையை, இதுவரை உலகில் எந்த மனிதனும் நுாற்றுக்கு நுாறு பயன்படுத்தியதில்லை.
விஞ்ஞான மேதையான ஐன்ஸ்டீன், தன் மூளையில், 30 சதவீத சக்தியை மட்டும் தான் உபயோகப்படுத்தி இருக்கிறார்.
நியூரான் செல்கள் மூலமாகத்தான் கண், காது, மூக்கு, நாக்கு, தோல் ஆகிய ஐந்து புலன்களால் உணரக்கூடிய தகவல்கள், மூளையில் சேமித்து வைக்கப்படுகிறது.
இந்த நியூரான்கள், பிறக்கும்போதே நம்முடன் இணைந்திருக்கிறது. அது ஒவ்வொருவரின் சூழல், அனுபவம், மென்மையான உணர்ச்சிகளின் பராமரிப்பு குறித்து ஒன்றோடு ஒன்று இணைந்து செயல்படும்.
மூளைக்கு வேலை கொடுக்காவிட்டால், நியூரான்களுக்கு இடையில் இருக்கும் இணைப்புகள் மடிந்து, மறைந்து போகும்.
குறுக்கெழுத்துப்போட்டி, விடுகதை, சதுரங்க விளையாட்டு போன்றவை பொழுதுபோக்கு அம்சம் மட்டுமல்ல, நியூரான் வளர்ச்சிக்கும் ஏதுவாய் இருக்கிறது.
இந்த நியூரான்கள் வளர்ச்சிக்கு சத்தான உணவுகள் அவசியம்.
முடிவாக, மனோதத்துவ நிபுணர்களின் கருத்துப்படி, சாதாரண மனிதன், ஒரு நாளைக்கு லட்சம் முடிவுகள் எடுக்கிறானாம்.
- இப்படி கூறி முடித்தார், நாராயணன்.
இதைப் படித்துக் கொண்டிருக்கும் நீங்கள், இனி, என்னென்ன முடிவுகள் எடுக்கப் போகிறீர்கள் என்பது, உங்கள் மூளைக்கு தான் தெரியும்.
இனி, நாம் மூளைக்கு வேலை கொடுத்து, துவண்டு முடங்கிக் கிடக்கும் சிந்தனைகளை தட்டி எழுப்புவோம்.
'நிறைய விஷயங்களை மூளைக்குள் திணித்தால், விரைவில் சோர்வடைந்து விடுவோம்பா...' என்றபடியே அந்த இடத்தை விட்டு நகர்ந்தார், லென்ஸ் மாமா.



கே: தேசிய மொழியாகும் தகுதி, ஹிந்தியை தவிர வேறு எந்த மொழிக்கும் இல்லை என்று, பிரதமர் பேசியிருக்கிறாரே...
ப: இதிலே என்ன சந்தேகம்! ஒரு ஜனநாயக நாட்டில் பேசப்பட்டு வருகிற மொழிகளில் எந்த மொழி அதிக மக்களால் பேசப்படுகிறதோ, அந்த மொழிதானே தேசிய மொழியாக வேண்டும். இப்போது, இந்த நாட்டில் அதிக மக்களால் பேசப்படுகிற மொழி, ஹிந்தி மொழிதானே!
இந்தியாவில் எத்தனையோ பாஷைகள் பேசுகிறவர்கள் இருக்கின்றனர். அவர்களெல்லாம் ஹிந்தியை எதிர்க்காதபோது, இங்குள்ள இரண்டொரு கட்சியை சேர்ந்தவர்கள் மட்டும் எதிர்க்கின்றனர் என்றால், அதற்கு என்ன அர்த்தம்? அவர்கள் ஜனநாயகத்தை எதிர்க்கின்றனர் என்று அர்த்தம் அல்லது தங்கள் கட்சியை வளர்க்கின்றனர் என்று அர்த்தம்!
பல ஆண்டுகளுக்கு முன், தமிழ் வார இதழ் ஒன்றில் வெளியான, கேள்வி - பதில் இது. அது எந்த இதழ், வாசகர் ஒருவரின் கேள்விக்கு பதில் அளித்தவர் யார் என்று ஊகிக்க முடிகிறதா?
க்ளூ: அந்த இதழ் இப்போது வெளி வருவதில்லை. ஆனால், அந்த இதழின் ஆசிரியராக இருந்தவரின் புதல்வர்கள் இருவரில் ஒருவர் எழுத்தாளராகவும், மற்றொருவர், புத்தக வெளியீட்டாளராகவும் இருக்கின்றனர்.

விடை:
கடந்த, 1965ல், 'கல்கண்டு' இதழில், கேள்வி - பதில் பகுதியில் வெளியான, வாசகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு, தமிழ்வாணன் அளித்த பதில் தான் இது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X