இதப்படிங்க முதல்ல...
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 அக்
2021
00:00

நயன்தாராவை, 'ஓவர்டேக்' செய்த, கியாரா அத்வானி!
சினிமாவில், 18 ஆண்டுகளாக நடித்து வரும், நயன்தாரா, சமீபகாலமாகத் தான், 5 கோடி சம்பளத்தை எட்டிப் பிடித்திருக்கிறார். ஆனால், ஹிந்தி, தெலுங்கு படங்களில் நடித்து, தற்போது, ராம்சரணை வைத்து, ஷங்கர் இயக்கும் படத்தின் மூலம் முதன் முதலாக தமிழுக்கு வரப்போகும், கியாரா அத்வானியோ, முதல் படத்திலேயே, 5 கோடி சம்பளம் பேசியிருக்கிறார். அடுத்தபடியாக, விஜய்க்கு ஜோடியாகவும் நடிக்கயிருக்கும் அவரது படக்கூலி, இன்னும் எகிறி விடும் என்று தெரிகிறது. இப்படி, நயன்தாராவையே ஓரங்கட்டி, 'நம்பர் ஒன்' நடிகையாகிவிட்ட, கியாரா அத்வானி, 'பிகினி, டூ - பீஸ்' என்று, கலந்து கட்டி அடிப்பதற்கும் தயாராகி விட்டதால், தென்னிந்திய சினிமாவின் கவர்ச்சி கதாநாயகியர் எல்லாம், 'இவர் அடிக்கிற புயல் வேகத்திற்கு நம்மால் ஈடுகொடுக்க முடியாது போலிருக்கே...' என்று, கதிகலங்கி போயுள்ளனர்.

சினிமா பொன்னையா

'கிக்' ஏற்றும், நமீதா!
சமீபத்தில், 17 வயதில் முதன் முதலாக தான் மாடலிங் செய்தபோது எடுத்த புகைப் படங்களை, 'இன்ஸ்டாகிராமில்' வெளியிட்டு, ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார், ஸ்ருதிஹாசன். அதைப்பார்த்து நெட்டிசன்கள், 'உச்' கொட்டி வந்த நிலையில், நமீதாவும், 17 வயதில் எடுத்துக்கொண்ட முதல் போட்டோ ஆல்பத்தை வெளியிட்டு, 'நாங்களும் வருவோம்'ல என்று, ரசிகர்களை அதிர விட்டுள்ளார். ஸ்ருதிஹாசனை மிஞ்சும் ஒல்லிக்குச்சியாக, 'கிக்' ஏற்றும், 'போஸ்' கொடுக்கும், நமீதா படத்தை பார்த்து, 'உடல் பெருத்து பரந்து விரிந்து காணப்படும் நமீதாவா இப்படி அசத்தலாக இருந்திருக்கிறார்...' என்று, வாயடைத்து போயுள்ளனர், ரசிகர்கள். கண் கட்டி வித்தைக் காட்ட வந்தாளோ!
எலீசா

நட்பின் இலக்கணம், விஜய் சேதுபதி!
சினிமாவில் எத்தனை உயரத்துக்கு சென்றாலும், தன் ஆரம்ப கால நண்பர்களை மறப்பதில்லை, விஜய் சேதுபதி. தன்னுடன் கூத்துப்பட்டறையில் படித்த நண்பர்களான, நடிகர் விமல், விதார்த் உள்ளிட்ட பலருடன் இப்போதும் நட்பில் இருக்கிறார். அவர்களின் வீட்டில் பிறந்த நாள் கொண்டாட்டம் என்றால் கூட, மும்பை, ஐதராபாத்தில் படப்பிடிப்பில் இருந்தபோதும் பறந்து வந்து, தன் குடும்பத்துடன் பங்கேற்று அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கிறார். இதனால், கோடம்பாக்கத்தில் விஜய் சேதுபதியை, நட்பின் இலக்கணம் என்றே அழைக்கின்றனர்.
சி.பொ.,

ஆர்வக்கோளாறு, மாதவன்!
இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின், வாழ்க்கை வரலாறு கதையான, ராக்கெட்ரி என்ற படத்தை, தானே இயக்கி, நடித்துள்ளார், மாதவன். இந்த படம், தன்னை அடுத்த லெவலுக்கு அழைத்து செல்லும் என்று, அவர் கற்பனையில் மிதந்து கொண்டிருக்க, படத்தை பார்த்த தியேட்டர் உரிமையாளர்கள் பின்வாங்கி விட்டனர். புரியாமல் தடுமாறிய மாதவன், அவர்களிடத்தில், 'படத்தில் என்ன குறை உள்ளது...' என்று, பவ்யமாக கேட்டுள்ளார். அப்போது, 'ஆர்வக்கோளாறில், மூன்று மணி நேரத்துக்கு படத்தை சுட்டுதள்ளி வைத்திருக்கிறீர்கள். இவ்வளவு நீளமாக இருந்தால், யார் தியேட்டரில் உட்கார்ந்து படம் பார்ப்பர். அதனால், இரண்டு மணி நேரமாக கம்மி பண்ணுங்கள்...' என்று, கூறி விட்டனர். அதையடுத்து, சிற்பி சிலை வடிப்பது போல், தான் பார்த்து பார்த்து செதுக்கி வைத்திருந்த ஒரு மணி நேர காட்சிகளை, கண்ணீர் விட்டபடி கத்தரித்துக் கொண்டிருக்கிறார்.
— சி.பொ.,

ரஜினி பாணிக்கு மாறிய, விக்ரம்!
ரஜினி தனக்கு எப்போது வயதாகி விட்டதாக உணர்ந்தாரோ, அப்போதிலிருந்து வயதான இயக்குனர்களை தவிர்த்து, இளவட்ட இயக்குனர்களின் படங்களில் நடிக்கத் துவங்கினார். காரணம், அவர்கள் தன்னை இளமையாக காண்பிப்பர் என்பதோடு, அவர்களின் சிந்தனையும் புதிதாகவும், இளமையாக இருக்கும் என்பதால், அவர்களுடன் பயணிக்கத் துவங்கினார். அதேபோல் தான் இப்போது விக்ரமும், 'ரொமான்டிக்' பட இயக்குனர்களிடம் கதை கேட்டு வருகிறார். மேலும், 'என் மகன், 'ஹீரோ'வான பிறகு, எனக்கு வயதாகி விட்டது போன்ற எண்ணம் ஏற்படத் துவங்கியிருக்கிறது. அதனால், என்னை இளமையாக காண்பியுங்கள். என் வயதை மறந்து, 'ரொமான்ஸ்' பண்ண வையுங்கள்...' என்கிறார், விக்ரம்.
சினிமா பொன்னையா

சினி துளிகள்!
* டாக்டர் படத்தை அடுத்து, சிவகார்த்திகேயன் நடித்து வரும், டாண் படத்திலும், பிரியங்கா மோகனே நாயகியாக நடிக்கிறார்.
* கவுதம்மேனன் இயக்கத்தில், சிம்பு நடிக்கும், வெந்து தணிந்தது காடு என்ற படத்தில், மராத்தி நடிகை, கயடு லோஹர் -என்பவர் நாயகியாக நடிக்கிறார்.

அவ்ளோதான்!

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kkk -  ( Posted via: Dinamalar Android App )
17-அக்-202120:51:24 IST Report Abuse
kkk கறுப்பு பூனை எங்கப்பா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X