உரிமை!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 அக்
2021
00:00

நாகூர் ஆண்டவர்,- ராகவையா எனும் இருவர், மகா ஞானிகளாக இருந்தனர். பொதுமக்களின் நன்மையையே வாழ்வாகக் கொண்டு, நோய் முதலான துன்பங்களால் துயரப்படுபவர்களுக்கு, அதைத் தீர்த்து வைத்து, அன்பையும், அருளையும் வாரி வாரி வழங்கினர்.
அச்சமயம், தஞ்சையை ஆண்ட மன்னருக்கு நோய் பாதித்து, 'இனி பிழைக்க மாட்டார்...' என, அரண்மனை மருத்துவர்கள் சொல்லி விட்டனர்.
அரண்மனைக்கு சென்ற ராகவையா, மன்னரை காப்பாற்ற வந்திருப்பதாக, வாசல் காவலர்களிடம் சொன்னார். அவர்களோ, ராகவையாவின் எளிமையான தோற்றத்தைக் கண்டு, அவரை அவமானப்படுத்தினர்.

அந்தப் பக்கமாக வந்த மன்னரின் தாயார், ராகவையா கூறியதை கேட்டு, அவரை வணங்கி உள்ளே அழைத்துப் போனார்.
மன்னரை ஒரு சில விநாடிகள் உற்றுப் பார்த்த ராகவையா, 'இவர் நோயைத் தீர்க்க என்னாலாகாது. உடனே போய், நாகூர் ஆண்டவரைப் பாருங்கள். தாமதம் வேண்டாம்...' என்றார்.
நாகூர் சென்று, நாகூர் ஆண்டவரை வணங்கி, 'சுவாமி... என் மகனின் நோயை தீர்த்து அருள் புரியுங்கள்...' என, வேண்டினார், மன்னரின் தாயார்.
'தப்பான காரியங்களை எல்லாம் செய்துவிட்டு, கஷ்டம் வரும்போது என்னிடம் ஓடி வருகிறீர்கள். அரண்மனையில் மன்னர் தலைக்கு மேலுள்ள கூரையில், வட்டமாக புது சாந்து பூசப்பட்டிருக்கும் இடத்தை உடைத்துத் திறந்து விடு. அதற்குள் ஒரு புறா மாட்டி, உயிருக்குத் தவிக்கிறது. அதை விடுதலை செய். உன் மகன் பிழைப்பான்...' என்றார், நாகூர் ஆண்டவர்.
அரண்மனை திரும்பி, நாகூர் ஆண்டவர் சொன்னபடி, புது சாந்து பூசப்பட்ட இடத்தை உடைத்தார், மன்னரின் தாயார். அதன் உள்ளே உயிருக்காகப் போராடிக் கொண்டிருந்த புறாவை வெளியே எடுத்து, அதன் வாயில் சில தானிய மணிகளைப் போட்டு பசியை தணித்தார்.
அதே நேரம், மன்னரின் வாயில் சிறிது சிறிதாக நீரை ஊற்ற, அவருக்கும் புது தெம்பு வந்தது.
'மேலே உள்ள ஓட்டையில் வாழ்ந்து வந்த புறாக்களால், என் படுக்கை அசிங்கமாகி விட்டது. அதனால், அந்த ஓட்டையை அடைக்கச் சொன்னேன். அது, புறாவின் உயிருக்கு ஆபத்தாகி விட்டது...' என, வருத்தப்பட்டார், மன்னர்.
நாகூர் ஆண்டவரின் திருவடிகளில் விழுந்து வணங்கி, 'இனி, எந்த உயிருக்கும் தீங்கு செய்ய மாட்டேன்...' என, உறுதியும் அளித்தார்.
நாகூர் ஆண்டவர் முக்தி அடைந்ததும், அவருக்கு கோவில் கட்டி, ஏராளமான நிலங்களை அளித்து, வரும் விளைச்சலில் இருந்து புறாக்களுக்கு உணவளிக்கும்படிச் செய்தார், மன்னர்.
மனிதர்கள் வாழ உரிமை இருப்பதுபோல, மற்ற உயிர்களும் வாழ உரிமை உண்டு என்பதை விளக்கும் வரலாறு இது.

பி. என். பரசுராமன்

ஆன்மிக தகவல்கள்!
புனஸ்காரம் என்றால், முதல் நாள் இறைவனுக்கு சூட்டிய பூக்களைக் களைந்து, பூஜை பொருட்களை சுத்தம் செய்து, மீண்டும் பூஜை செய்யத் துவங்குவது, என்று பொருள்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X