திண்ணை!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 அக்
2021
00:00

அக்., 17 கண்ணதாசன் நினைவு நாள்

கண்ணதாசன் இறுதி ஊர்வலம்.
பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி முடித்ததும், கண்ணதாசனின் உடல் இறுதி ஊர்வலத்திற்கான வாகனத்தில் ஏற்றப்பட்டு விட்டது.
அப்போது, கூட்டத்தில் சின்ன சலசலப்பு.
கண்ணதாசன் உடல், கிடைமட்டமாக வாகனத்தில் கிடத்தப்பட்டிருந்ததால், கீழே நின்ற மக்களுக்கு, அவரின் முகம் தெளிவாக தெரியவில்லை.
கடைசியாக, கவிஞர் முகத்தை பார்க்க முடியவில்லையே என்ற ஆதங்கத்தில், கண் கலங்கி கதற ஆரம்பித்தனர், சிலர்.
அப்போது, அங்கே நின்ற ஒருவர், யாரும் எதிர்பார்க்காத நேரத்தில், மின்னல் வேகத்தில், கண்ணதாசன் உடல் இருந்த வாகனத்தில், தாவி ஏறினார்.
கண்ணதாசன் உடலை சற்றே உயர்த்தி, ஒரு சின்ன ஸ்டூல் மீது அவரது தலையை பொருத்தி கட்டிய அந்த மனிதர், சுற்றி நின்ற மக்கள் முகத்தைப் பார்த்தார்.
திரண்டிருந்த மக்கள் முகத்தில் இப்போது திருப்தி தெரிந்தது. ஆம்... இப்போது, கண்ணதாசன் முகம், கீழே நின்ற அத்தனை பேருக்கும் தெளிவாக தெரிந்தது.
திருப்தியோடு அந்த இறுதி வாகனத்தை விட்டு இறங்கிய அந்த மனிதர் யார் தெரியுமா?
அப்போதைய தமிழக முதல்வர், எம்.ஜி.ஆர்., தான். அவர் கண் அசைத்தால், அடுத்த நொடியே காரியம் நடந்திருக்கும். ஆனால், அந்த ஒரு நொடி தாமதத்தை கூட விரும்பவில்லை, எம்.ஜி.ஆர்.,
கண்ணதாசன் மீது, எம்.ஜி.ஆர்., வைத்திருந்த அன்பும், மரியாதையும் தான் இதற்கு காரணம்.
மக்கள் உணர்வுகளுக்கு கொடுத்த உன்னத மதிப்பு!
கண்ணதாசன் மீது வைத்திருந்த கண்ணியமான மரியாதையால் தான், 1978ல், 'அரசவைக் கவிஞர்' பட்டத்தை, அவருக்கு வழங்கினார், எம்.ஜி.ஆர்.,
அந்த விழாவில் பேசிய, கண்ணதாசன் உணர்ச்சிவசப்பட்டவராக, 'நான் இறந்து விட்டால், எனக்கு அரசு மரியாதை கிடைக்கும். இந்த சிறப்பை எனக்கு வழங்கிய, எம்.ஜி.ஆருக்கு முன்கூட்டியே நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்...' என்று சொன்னார்.
ஆம்... கவிஞன் வாக்கு பலித்தது.

ஆரம்ப காலத்தில் எழுதும்போது, எந்த மொழிகளிலும் வார்த்தைகளுக்கிடையே இடைவெளியும், கால் புள்ளி, அரைப் புள்ளி, முற்றுப் புள்ளி பயன்படுத்தப்பட்டதில்லை. கிரேக்கர்கள்தான் வார்த்தைகளுக்கு இடையே இடைவெளி விடுவதையும், இதர குறியீடுகளையும் பயன்படுத்தினர்.
அவர்கள், அரைப் புள்ளி குறியீட்டை, கேள்விக்குறியாக பயன்படுத்தி வந்தனர். லத்தீன் மொழியிலிருந்து தான் இப்போதுள்ள கேள்விக்குறி வந்தது.
மொழிகளின் வளர்ச்சிக்கு, அறிஞர்களின் பங்களிப்பு பெருமளவு கலந்துள்ளது. இன்று, உலக மொழிகளுக்கு அழகு சேர்த்து வரும் முற்றுப்புள்ளியை கண்டுபிடித்து, உலகினர் பயன்படுத்திட வழி காட்டியது, இத்தாலி நாட்டு அச்சுத் தொழிலாளியான, ஆல்டல்ப் மனுஷியஸ் என்பவர் தான்!

பண்டிட் ஜவஹர்லால் நேருவுக்கு, தையல் கலைஞர் உமர் என்பவர் தான், ஆடைகள் தைத்து கொடுப்பார். அவரை, வி.ஐ.பி., டைலராக கருதி, அவரிடம் பேட்டி கண்டார், ஒரு பத்திரிகையாளர்.
'நீங்கள், நேருஜியின் துணிகளை தைப்பதற்கு எவ்வளவு பணம் வாங்குவீர்கள்...' என்று கேட்டார், நிருபர்.
'எல்லாருக்கும் வாங்கும் அதே கூலியை தான் வாங்குகிறேன். பண்டிட்ஜியின்
துணியை மட்டும் வெள்ளி கத்திரியால் வெட்டுகிறேனா என்ன... அநியாயமாய் பணம் வாங்கினால், தெய்வத்திற்கு பொறுக்காது.
கதர் ஷெர்வானிக்கும் 35 ரூபாயும், கம்பளிக்கு, 75 ரூபாயும்...' என்றார், தையல்காரர்.

நடுத்தெரு நாராயணன்

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nagercoil Suresh - India,இந்தியா
21-அக்-202122:14:55 IST Report Abuse
Nagercoil Suresh கண்ணதாசனின் பரம சிவன் கழுத்திலிருந்து பாட்டு மிக மிக அர்த்தம் உள்ள பாட்டு அதன் பொன் வரிகள் ஒரு நாளும் அழியாது...
Rate this:
Cancel
JeevaKiran - COONOOR,இந்தியா
18-அக்-202110:51:24 IST Report Abuse
JeevaKiran தமிழில் ஒரு கவிமகனை சிறுகூடல்பட்டியில் தந்த மலையரசி தாயே. வாழ்க கவிஞர் புகழ்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X