அம்பிகா - அர்ச்சனா - ஆராதனா! (4)
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 அக்
2021
00:00

முன்கதை சுருக்கம்: கண்ணாடியை அம்பிகா என்பவர் வாங்கி சென்றதாக கூறி, விக்ரமிடம் விசிட்டிங் கார்டை தந்தாள், கடைப் பெண். அம்பிகா கொடுத்த கண்ணாடியை வாங்காமல், காதலிப்பதாக கூறினால் வாங்கி கொள்வதாக கூறி சென்றான் -

காதல் என்ற விதையை அம்பிகா மனதில் ஊன்றிய பின், நிம்மதியாக இருந்தான், விக்ரம். அது நிச்சயம் முளைக்கும் என அவனுக்கு தெரியும். ஆனால், சீக்கிரம் முளைத்தால் பரவாயில்லை. அடுத்தடுத்த வேலைகளை பார்க்கலாம் என நினைத்தான்.

மூன்று நாட்கள் அம்பிகாவிடமிருந்து எந்த அழைப்பும் வரவில்லை. நான்காவது நாள், 'ஷேவ்' செய்து கொண்டிருந்த போது, மொபைல் ஒலித்தது. அழைத்தாள், அம்பிகா.
''ஹலோ யாரு?'' தெரியாத மாதிரி கேட்டான்.
''அம்பிகா!''
''ஓ... நீங்களா...
என்ன விஷயம்?''
தயங்கியபடி, ''கண்ணாடியை எங்க வந்து வாங்கிக்கறீங்க?'' என்றாள்.
''அப்படின்னா,'' சிரித்தபடி கேட்டான்.
''என்ன அப்படின்னா?'' புரியாத மாதிரி கேட்டாள்.
''என்னை, 'லவ்' பண்றேன்னு எப்போ சொல்றீங்களா... அப்போ வாங்கிக்கறேன்னு சொன்னேன்.''
அவள் பேச இடம் கொடுத்தான்.
''அதான் வாங்கிக்க சொல்றேன்,'' என, மெல்லிய குரலில் சொன்னாள்.
''கிரேட்... எனக்கு சந்தோஷத்துல என்ன பேசறதுன்னே தெரியல... எங்கே, 'நோ' சொல்லிடுவீங்களோன்னு பயந்தேன். இனிமே, நீங்க, வாங்க எல்லாம் கிடையாது; பேர் சொல்லி கூப்பிடலாம். சரியா அம்பிகா?''
''எனக்கு, உங்க... ஸாரி... உன் பேர் தெரியாதே...''
''வி...'' என்று ஆரம்பித்தவன் உஷாராகி... ''அர்ஜுன், என் பேர் அர்ஜுன்,'' என்றான்.
''வி.அர்ஜுன்?''
''இல்லை.. ஜஸ்ட் அர்ஜுன்.''
''ஓ.கே.,''
''எங்க சந்திக்கலாம்?'' என்றான்.
''டின்னர், மெரின் டிரைவ். 8:00 மணி.''
''டன்!''
விக்கட் விழுந்த உற்சாகத்தில், ரேசரை வேகமாக இழுத்தான், விக்ரம். ரத்தம் எட்டிப் பார்த்தது. 'மெரின் டிரைவ் ரெலிஷ் இன்டர்நேஷனலில்' ஆரம்பித்த அவர்கள் சந்திப்பு, தினமும் தொடர்ந்து, மணிக்கணக்கில் மொபைல் போனிலும் நீண்டது.
'அர்ஜுன்' என்ற பெயர் பதித்த காப்பு ஒன்றை அவனுக்கு பரிசளித்தாள்.
''அம்பிகா... உன் அளவுக்கு எனக்கு வசதி இல்லை. நான் ஒரு விற்பனை பிரதிநிதி. ஊர் ஊரா அலைஞ்சா தான் சம்பளம். அதிகபட்சம், பேல் பூரி, வடா பாவ் தான், நம்ம லெவல்.''
அவன் கையை அழுத்தி பிடித்தவள், ''ஏய்... உன்னை ஏதாவது கேட்டேனா?'' என்றாள்.
சிரித்தபடி இருவரும் நடந்தனர்.
'சும்மா தான் போன் பண்ணேன். ஒண்ணும் முக்கியமா இல்லை...' என்று சொல்லியே, தினம், 10 முறையாவது போன் செய்தனர்.
அலுவலகம் முழுவதும் இவர்களின் காதல் தெரிந்து, கேலி செய்தனர்.
'ஏய்... செம்மையா இருக்கான். --'சூப்பர் ஸ்மார்ட்'யா... -- என் ஆள 'கம்பேர்' பண்ணா, உன் ஆளுக்கு முடி அதிகம்; தொப்பை கம்மி...' தோழியர் பேசப் பேச, அம்பிகாவுக்கு பெருமையாக இருந்தது.

ஒரு சனிக்கிழமை பிற்பகல், 4:00 மணி. ஹோட்டலுக்கு அம்பிகாவுடன், ரேஷ்மாவும் வந்திருந்தாள்.
''அர்ஜுன்... ரேஷ்மா தான் முதல்லயே சொன்னா... இது, 'லவ்'தான்னு!''
''தேங்க்ஸ் ரேஷ்மா! அம்பிகா கொஞ்சம் ட்யூப் லைட்,'' என்று கிண்டல் செய்ய, அவன் காலை மிதித்தாள், அம்பிகா.
''எப்போ கல்யாணம்?'' கேட்டாள், ரேஷ்மா.
''இன்னும் ஒரு வருஷம் கழிச்சு தான்.''
''அர்ஜுன், விளையாடறியா... அதுக்குள்ள எனக்கு வீட்ல வேற பையன் பார்த்துட்டா?'' கோபமாக கேட்டாள், அம்பிகா
''நான் எஸ்கேப்!''
''உன்னை...'' என்று, அம்பிகா, அவன் தலையை பிடித்து உலுக்க, மூவரும் சந்தோஷமாக சிரித்தனர்.

ஜுஹு பீச்... - வித விதமான மனிதர்கள், குழந்தைகள், 'வாக்கிங்- ஜாக்கிங்' செல்பவர்கள், போவோர் வருவோரை வேடிக்கை பார்ப்பவர்கள், வாழ்ந்து முடிந்த கதையை பேசியபடி முதியவர்கள், எதிர்காலத்தை பற்றி சிந்தனையுடன் இளைஞர்கள் என, கலகலப்பாக இருந்தது.
விக்ரம், அம்பிகா, ரேஷ்மா மூவரும் மணலில் ஓரிடமாக உட்கார்ந்தனர்.
''என் அப்பா - அம்மா பெங்களூர்ல இருக்காங்க. அவங்ககிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டா போதும். நான் ஒரே பையன் வேற, ஒண்ணும் தடை சொல்ல மாட்டாங்க. ஆனா, கொஞ்சம் டைம் வேணும்,'' என்றான், விக்ரம்.
''ஏன்?'' என்றாள், அம்பிகா.
''என் ஜாதகத்துல, குரு பலன் வர, நாலு மாசம் ஆகுமாம். அதுக்குள்ள கல்யாணம் பண்ணினா விவாகரத்துல முடியும்ன்னு யாரோ ஜோசியர், அப்பா - அம்மாவ பயமுறுத்திட்டார்.''
விக்ரமின் கண்களை பார்த்தாள், அம்பிகா.
''என்னவோ தெரியல டா... நீ இல்லாம என்னால் வாழ முடியாது. என் அப்பா - அம்மா எதிர்த்தாலும், உன்னை தான் கல்யாணம் பண்ணிப்பேன். எவ்வளவு நாள் வேணும்னாலும் உனக்காக,'' என்று கூறும்போதே, அவள் கண்களில் நீர் முட்டியது.
''ஏய்... என்ன பைத்தியம் மாதிரி,'' என, கண்ணீரை துடைத்தான், விக்ரம்.
அம்பிகாவின் தோளை ஆதரவாக பிடித்து, ''அர்ஜுனை சந்திப்போம்ன்னு நினைச்சியா... நடந்ததுல்ல... அந்த மாதிரி கல்யாணமும் நடக்கும்,'' என்றாள், ரேஷ்மா.
விக்ரம் தோளில் சாய்ந்தபடி அலையை பார்த்து கொண்டிருந்தாள், அம்பிகா.
சிறிது நேரத்திற்கு பின், ''அர்ஜுன்... வா, ஒரு, 'செல்பி' எடுத்துப்போம்,'' என எழுந்தாள்.
இதை எதிர்பார்க்கவில்லை, விக்ரம்.
''நோ நோ... நோ போட்டோ, நோ செல்பி... ப்ளீஸ்,'' பதறினான்.
''ஏன் அர்ஜுன்?''
''அது ஒரு சென்ட்டிமென்ட்!'' யோசிக்காமல் பொய் சொன்னான்.
''நான் வீட்ல உன் போட்டோவ காட்ட வேண்டாமா? அதுவும் கொஞ்ச நாள் கழிச்சு தான். புரியல... ஏன்?''
எழுந்தான், விக்ரம்.
''காலேஜ் படிக்கும்போது, நண்பர்களோட, 'ஹார்ஸ்லி ஹில்ஸ் டூர்' போனோம். என் நெருங்கிய நண்பன் விஜய். என்னை போட்டோ எடுக்க சொன்னேன்; போக்கஸுக்காக கொஞ்சம் கொஞ்சமாக பின்னாடி போனவன், ஒரு பெரிய கல் தடுக்கி, என் கண் முன்னாடியே மலைலேர்ந்து கீழ...'' மேல் உதட்டை கடித்து கொண்டு எங்கேயோ பார்த்தான், விக்ரம்.
அவன் கையை ஆதரவாக பிடித்தாள், அம்பிகா.
''வெரி ஸாரி... அர்ஜுன்.''
''என்னை தப்பா நினைக்காதே அம்பிகா,'' நடித்து, நம்ப வைத்தான்.
சூழ்நிலையின் இறுக்கத்தை மாற்றுவதற்காக, ''யாராவது எனக்கு ஐஸ்கிரீம் வாங்கி குடுங்க பா,'' என்றாள், ரேஷ்மா.
மூவரும் சிரித்தபடி அருகில் இருந்த கடையில் ஐஸ்கிரீம் சாப்பிட்டு, விடை பெற்றனர்.

தன் அறையில், 'சில் பீரை' ஆனந்தமாக விக்ரம் குடித்து கொண்டிருந்தபோது, மொபைல் ஒலித்தது.
''ராஜேஷா... பழம் டா!'' என்றான்.
''அதானே பார்த்தேன். கொஞ்ச நாளா ஆளையே காணோமேன்னு... விபரமா சொல்லு.''
''மொத்தமா நம்பிட்டா... நான் இல்லாம வாழ முடியாதுன்னு சொல்ற அளவுக்கு போயிட்டா.''
''ஒண்டர்புல்... வேற என்ன கேட்டா?''
''ஒரு, 'செல்பி' எடுத்துக்கலாமான்னு கேட்டா.''
''ஐயையோ...'' அதிர்ந்தான், ராஜேஷ்.
''ஒண்ணும் பிரச்னை இல்லடா... பொய்யா, 'பிளாஷ் பேக்' கதையை, அப்போதே தயார் பண்ணி, 'செல்பி' எடுக்க விடாம தடுத்துட்டேன்.''
''நல்லவேளை... கல்யாண டாபிக்?''
''ஜாதகத்துல குழப்பம்... டைம் ஆகும்ன்னு சொல்லியிருக்கேன்.''
''வெரிகுட்... அப்புறம் என்ன, கிளம்ப வேண்டியது தானே?''
''நாளைக்கு சொல்லிட்டு கிளம்பிட வேண்டியது தான்.''
''அடுத்து எங்க?''
''சஸ்பென்ஸ்... போயிட்டு கூப்பிடுறேன்.''
''சரி, டேக் கேர்!''
பீரை முடித்தான். எழுந்து சூட்கேஸை திறந்தவன், கண் கலங்கினான்.
- தொடரும்.
கோபு பாபு

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Girija - Chennai,இந்தியா
20-அக்-202109:47:23 IST Report Abuse
Girija என்ன ஒரு புத்திசாலி கதை ஆசிரியர்? இது என்ன கவுண்டமணி காமெடியா? செலஃபீ எடுப்பதை புத்திசாலித்தனமாக தவிர்த்து விட்டானாம்? ஹீரோ ஹோட்டல், ஹீரோயின் ஆபீஸ், மெட்ரோ போன்ற இடங்களில் உள்ள சிசிடிவியில் ஏற்கனவே சிக்கியாச்சு .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X