தீபாவளி ஸ்பெஷல்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 அக்
2021
00:00

ஜவ்வரிசி முறுக்கு!

தேவையான பொருட்கள்:
அரிசி மாவு, ஊற வைத்த ஜவ்வரிசி - தலா ஒரு கப்;
கடலை மாவு - அரை கப்,
மிளகாய் துாள் - அரை தேக்கரண்டி,
சீரகம் - ஒரு தேக்கரண்டி,
பெருங்காய துாள் - கால் தேக்கரண்டி,
உப்பு, எண்ணெய் தேவையான அளவு.
சூடான எண்ணெய் - 2 தேக்கரண்டி.

செய்முறை:
ஜவ்வரிசியை நான்கு மணி நேரம் ஊற வைத்து எடுத்துக் கொள்ளவும். அரிசி மாவு, கடலை மாவு, மிளகாய் துாள், பெருங்காய துாள், சீரகம், உப்பு ஆகியவற்றை ஒன்றாக கலந்து கொள்ளவும். இதனுடன் ஊற வைத்த ஜவ்வரிசி, சூடான எண்ணெய் சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.
வாணலியில் எண்ணெயை சூடாக்கி, பிசைந்த மாவை நட்சத்திர அச்சுள்ள முறுக்கு நாழியில் நிரப்பி பிழிந்து, பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

பாகு பதம் சூட்சுமம்!
இனிப்புக்கான பாகு பதம். வெல்லமானாலும், சர்க்கரையானாலும் அதை கரைத்து சூடாக்கும்போது, பலவித நிலைகளில் மாறி, கடைசியில் மிட்டாய் பதம் வரும். அந்த நிலைகள் இதோ:
நீர்த்த ஜீரா பதம்: சர்க்கரை கரைந்து, பளபளப்பு வரும். கைகளில் ஒட்டாது - ரசகுல்லா
பிசுபிசுப்பான பதம்: சர்க்கரை கரைந்து கொதித்த பின்னர் கைகளில் தொட்டால் பிசுபிசுப்பு தெரியும் - குலாப் ஜாமுன்
அரை கம்பி பதம்: சிறிது பாகை எடுத்து கட்டை விரலுக்கும், ஆள் காட்டி விரலுக்கும் மத்தியில் வைத்து தொட்டு பார்த்தால், அரை அங்குல நீளத்திற்கு கம்பி போல வந்து உடையும் - ஜிலேபி, ஜாங்கிரி
ஒரு கம்பி பதம்: பாகு சிறிதே நீளமாக கம்பி போல வரும் - காஜு கத்லி, பாதுஷா
இரண்டு கம்பி பதம்: கைகளில் தொட்டுப் பதம் பார்த்தால், இரண்டு நிமிடத்தில் கம்பி போல வரும் - ஒரு சில பர்பி வகைகள்
மூன்று கம்பி பதம்: பல இடங்களில் கம்பி போல வந்து உடையும்
திரட்டும் பதம்: பாகை சிறிது தண்ணீரில் விட்டால், கனமாக அடியில் இறங்கும். கைகளாலும் திரட்ட வரும்
மெத்தென்று உருண்டை: சிறிது பாகை நீரில் விட்டு, கைகளால் உருட்டி பார்த்தால் உருட்ட முடியும். உருண்டை மெத்தென்று இருக்கும்
கெட்டியான உருண்டை பதம் - முத்துப் பாகு: தண்ணீரில் விட்டு உருட்டி, வெளியே எடுத்தால் உருண்டை நிற்கும். தட்டில் போட்டால் சத்தம் வரும். உருண்டை முத்து போல அப்படியே இருக்கும்
நார்ப்பதம்: நார் போல நீள நீளமாக வரும்; கெட்டிப்படாமல் இருக்கும்
கெட்டிப் பாகு: சிறிது பாகை தண்ணீரில் விட்டு தொட்டு எடுத்தால், நுால் நுாலாக வரும். கெட்டியாகவும் இருக்கும் - மிட்டாய் வகை.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X