இளஸ் மனஸ்! (117)
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 அக்
2021
00:00

அன்பு பிளாரன்ஸ்...
என் வயது, 33; இல்லத்தரசியாக உள்ளேன். மகனுக்கு, 10 வயது; 5ம் வகுப்பு படிக்கிறான்; படிப்பில் படுசூட்டி! அவனுக்கு வாசனைகள் என்றாலே கொள்ளை பிரியம்; சாம்பிராணி புகையை விரும்பி முகர்வான்.
தோட்டத்தில் மலரும், மல்லிகைப் பூவை பறித்து மணத்தை ரசிப்பான். பீரோவில், துணிகளுக்கு இடையே போடப்பட்டிருக்கும், அந்துருண்டை வாசனையை சிறப்பாக சொல்வான்.
படிக்கும் அறையில், ஊதுவர்த்தி நறுமணம் வீச வேண்டும்.
திடீரென்று வாசலில் நிறுத்தியிருக்கும் இருசக்கர வாகனத்தில் பெட்ரோல் டேங்கை திறந்து, முகர்ந்து மெய் மறக்கிறான்.
விடுமுறை நாட்களில், வாட்டர் பாட்டிலில் பெட்ரோல் வாங்கி வந்து முகர்ந்துப் பார்க்கிறான். அவனை எப்படி திருத்துவது சகோதரி... பயத்தால் தத்தளிக்கிறேன். சரியான வழிமுறையை கூறுங்கள்.

அன்புள்ள அம்மா...
பெட்ரோலை முகர்ந்து பார்ப்பதும், போதை பழக்கம் போல தான்; பெட்ரோலில், 'பென்ஜின்' மற்றும் 'டோலோன்' என்ற பொருட்கள் கலந்துள்ளன.
பெட்ரோலில் கலந்திருக்கும் ஹைடிரோகார்பனை நீண்ட காலம் சுவாசித்தால், மூச்சு விடுவதில் சிரமம், வாந்தி, வலிப்பு, சுயபிரக்ஞையில் ஊசலாட்டம், மனப்பிரமை தோற்றம், பொய் பரவச நிலை, கருவிழிகள் சுழற்சியில் தடுமாற்றம், பலவீனம், நடுக்கம், மலத்தில் ரத்தம் போதல், தொண்டை வலி, அடிவயிற்றில் வலி போன்ற பிரச்னைகள் ஏற்படும்.
குணப்படுத்த முடியாத அளவுக்கு, மூளை மற்றும் உடல் உறுப்புகள் பாதிப்பு ஏற்படக்கூடும்.
மகன், பெட்ரோல் இருக்கும் பக்கம் செல்லும் வாய்ப்புகளை குறைக்கவும்; பெட்ரோலை சுவாசிப்பதில் ஏற்படும் ஆபத்துகளை விலாவாரியாக விளக்கவும்; கையில் காசு இருந்தால் தானே, பெட்ரோல் வாங்கி வந்து முகர்வான்.
காசு கொடுக்க வேண்டாம்; காசுக்கு பதில், தின்பண்டங்களை வாங்கி கொடுக்கவும். அருகாமையில் இருக்கும் பெட்ரோல் பங்க் ஊழியர்களை எச்சரிக்கவும். தினமும் காலையிலும் இரவிலும் ஒரு தேக்கரண்டி தேன் கொடுக்கவும்.
சாதாரண தேனீருக்கு பதில், 'க்ரீன் டீ' பருக கொடுக்கவும்; மஞ்சள், கீரைகள், ஆலிவ், பீன்ஸ், வால்நட், பருப்பு, செர்ரி பழங்களை உணவில் சேர்க்கவும்.
பெட்ரோலை நீண்ட நாள் சுவாசித்து நுரையீரல் பாதிக்கப்பட்டிருந்தால் மருத்துவமனையில் சேர்த்து, ஆக்ஸிஜன் தெரபி கொடுக்க ஏற்பாடு செய்யவும்.
மகன் ஆபத்தான நிலையில் இருந்தால், 'மெக்கானிகல் வென்டிலேஷன்' எனப்படும் செயற்கை சுவாசம் கூட கொடுப்பர். நுரையீரலில் சேர்ந்து இருக்கும் சளியை, கருவி வைத்து அகற்றுவர்; சுவாச மண்டலத்தை சீர் செய்ய நீராவி தெரபி கொடுப்பர்.
மகனை, யோகாசன வகுப்புக்கு அனுப்பவும்; தியானம், சுவாசப் பயிற்சி மிக நல்லது. பெட்ரோல் வாகனங்களுக்கு பதில், மின்சாரத்தால் இயங்கும், இ - பைக் வாங்கவும்.
மனநல ஆலோசகரிடம் அழைத்துச் சென்று ஆலோசனை வழங்கவும்!
'பெட்ரோலை மற... எதிர்கால வாழ்வை நினை...' என, புதிய ஆத்திசூடி கற்றுக் கொடுக்கவும்.
- அள்ள அள்ள குறையாத அன்புடன், பிளாரன்ஸ்.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X