கவிதைச்சோலை!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 அக்
2021
00:00

விலக்கி வைப்போம்!

நம் முன்னோர் வெட்டி விடாத
மரங்கள் தான்
இன்று நாம் இளைப்பாறும்
நிழலை விட்டு வைத்தது!

நம் முன்னோர் துார்க்காத
கிணறுகளும், குளங்களும் தான்
இன்று நாம் தாகம் தீர்க்கத்
தண்ணீரை விட்டு வைத்தது!

நம் முன்னோர் ஆக்கிரமிக்காத
வெட்டவெளி தான்
இன்று நாம் விளையாடும்
மைதானங்களை விட்டு வைத்தது!

நம் முன்னோர் அழிக்காத
வயல்களும், தோப்பும் தான்
இன்று நாம் பசியாறும்
உணவை விட்டு வைத்தது!

நம் முன்னோர் விலக்கிய
புகையும், மதுவும் தான்
இன்று நம் உடலுக்கான
ஆரோக்கியத்தை விட்டு வைத்தது!

நம் முன்னோர் விலக்கிய
ஆடம்பரமும், பகட்டும் தான்
இன்று நாம் குறையின்றி
வாழ்வதற்கான
வசதியை விட்டு வைத்தது!

எதையெதை
விலக்க வேண்டுமென்ற
அறிவுரையை அவர்கள்
எழுதி மட்டும் போகவில்லை
வாழ்ந்து காட்டி போயினர்!

இன்று நாம்
விலக்க வேண்டியவை
என்னவென்று யோசித்து
விலக்கி வைப்போம்...
நம் வழித்தோன்றல்களும்
நம்மைப் போல வாழ்வதற்கு!

கீர்த்தி, சென்னை.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
MUTHUKRISHNAN S - Sankarankovil,இந்தியா
27-அக்-202122:40:32 IST Report Abuse
MUTHUKRISHNAN S வரிகள் அருமை உதாரணங்கள் அதைவிட அருமை தொகுத்தது அதைவிட அருமை தலைப்பு மற்றும் முடித்த விதம் அருமையிலும் அருமை என்னவோ தெரியவில்லை உங்கள் கவிதையை படித்த என்னால் விலக்கி வைக்க முடியவில்லை இதுவும் ஒரு அருமை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X