நோக்கியாவின் இரண்டு அறிமுகங்கள் | டெக் டைரி | Tech Diary | tamil weekly supplements
நோக்கியாவின் இரண்டு அறிமுகங்கள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

24 அக்
2021
00:00

இந்தியாவில், இரண்டு 'நோக்கியா' போன்கள் அண்மையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
'நோக்கியா சி 30' எனும் பட்ஜெட் ஸ்மார்ட்போனும், இராணுவ தரத்திலான 'நோக்கியா எக்ஸ்.ஆர். 20' எனும் போனும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

நோக்கியா சி.30:
உலக சந்தையில் இந்த போன் கடந்த ஜூலை மா தத்தில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், இந்தியாவில் தற்போது அறிமுகம் ஆகியுள்ளது. இது இது ஒரு பட்ஜெட் போனாகும்.
சிறப்பம்சங்கள்:
6.82 அங்குல எச்.டி., திரை
6,000 எம்.ஏ.எச்., பேட்டரி
10 வாட் சார்ஜிங்
13 மெகா பிக்ஸல் முதன்மை கேமரா
கைரேகை சென்சார்
விலை:
3 ஜி.பி., + 32 ஜி.பி., : 10,999 ரூபாய்
4 ஜி.பி., + 64 ஜி.பி., : 11,999 ரூபாய்

நோக்கியா எக்ஸ்.ஆர்.20:
மிகுந்த உறுதியையும், இராணுவ தரத்திலான வடிவமைப்பையும் கொண்டதாகும் இந்த போன். 55 டிகிரி வெப்பத்திலும் எளிதாக தாக்குப் பிடிக்கும். 1.8 மீட்டர் ஆழ நீரில் மூழ்கடித்தால், ஒரு மணி நேரம் வரை எந்த இந்த போனுக்கு பாதிப்பும் ஏற்படாது.
சிறப்பம்சங்கள்:
6.67 அங்குல முழு எச்.டி., திரை
6 ஜி.பி.ரேம்
48 மெகா பிக்ஸல் முதன்மை கேமரா
இரு வண்ணங்கள்
ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்
5ஜி இணைப்பு வசதி
யு.எஸ்.பி., டைப் சி போர்ட்
4,630 எம்.ஏ.எச்., பேட்டரி
15 வாட் ஒயர்லெஸ் சார்ஜிங்
248 கிராம் எடை
விலை:
6 ஜி.பி., + 128 ஜி.பி., போன்: 46,999 ரூபாய்

Advertisement

 



We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X