இனி, 'யு டியூப் மியூசிக்' செயலியில், இலவச பயனர்கள் வீடியோ பார்க்க
இயலாது. ஆடியோ மட்டுமே கேட்க முடியும். இந்த மாற்றம் நவம்பர் 3ம் தேதி
முதல், முதல்கட்டமாக கனடாவில் அறிமுகம் ஆகிறது.
பிரீமியம் தொகை
செலுத்தி பயன்படுத்துபவர்கள், யு டியூப் மியூசிக்கில் வழக்கம் போல்
வீடியோவும் பார்க்கலாம். இலவச பயனர்கள் விளம்பரங்களுடன் ஆடியோவை மட்டும்
கேட்கலாம்.
அண்மையில் 'ஆப்பிள்' நிறுவனம், 'ஆப்பிள் மியூசிக்
வாய்ஸ்' சேவையை மாதம் ஒன்றுக்கு 49 ரூபாய் கட்டணத்தில் அறிமுகம் செய்தது
குறிப்பிடத்தக்கது.