'சோனி' நிறுவனம், அதன் புதிய 'எக்ஸ்பீரியா' போனை, 26ம் தேதி அன்று அறிமுகம் செய்ய உள்ளது. இந்த புதிய எக்ஸ்பீரியா ஸ்மார்ட்போன், ஒரு 'கேம் சேஞ்சர்' ஆக இருக்கும் என்றும்; மிகச் சிறந்த ஸ்மார்ட்போனாக இருக்கும் என்றும் சொல்கிறார்கள்.
இப்போதைக்கு இதுவரை இந்த போன் குறித்த விரிவான தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை என்பதே உண்மை. அதைவிட இந்த போன் குறித்த எந்த தகவலும் இதுவரை கசியவிடப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. சோனி நிறுவனம் கடைசியாக கடந்த ஆகஸ்டில் 'எக்ஸ்பீரியா 10 - 3 லைட்' எனும் போனை அறிமுகம் செய்தது.
இப்போது என்ன பெயரில் என்ன சிறப்பம்சங்களுடன் புதிய போன் அறிமுகம் ஆகிறது என்பது தெரியவில்லை.