கி.மு.485 - 430ல், முதன் முதலான மார்பகப் புற்று நோயை பதிவு செய்தது கிரேக்க வரலாற்று ஆசிரியர் ஹேரோடோடஸ் என்பவர். அவர் மார்பகப் புற்று நோய் ஒரு கட்டியாக உருவாகி, பிறகு நாளடைவில் பெரிதாகி மார்பகத்தின் தோல் வழியாக புண்ணாகி பின்னர் நெஞ்சு கூடு, தசைகளை ஊடுருவி, மற்ற இடங்களுக்கு பரவி, இறுதியில் மரணத்தை உண்டாக்கியதாக பதிவு செய்தார்.
பண்டை காலத்தில், பில்லி சூனியம் செய்வதால் இத்தகைய கட்டிகள் ஏற்படுகிறது என்று நம்பினர். பயந்தனர். பிறகு 17&18வது நுாற்றாண்டில் பல விளக்கங்கள் கூறப்பட்டது. மார்பகத்தில் அடிபட்டாலோ, கிருமிகள் தாக்கினாலோ, நிணநீர் மண்டலத்தில் அடைப்பு ஏற்பட்டாலோ, பால் கட்டுவதாலோ, இறுக்கமான துணி அணிவதாலோ, அதிகமாக பாலுறவு வைத்துக் கொள்வதால் என்று பல காரணங்கள் கூறப்பட்டது.
இவை அனைத்தும் வெறும் தவறான நம்பிக்கையே என்று கி.மு. 400ல் ஹிப்போகிரடிஸ் என்ற கிரேக்க மருத்துவர் நிரூபித்தார். ஹார்மோன் அளவில் ஏற்படும் மாற்றங்களுக்கும், புற்றுநோய் உருவாவதற்கும் சம்பந்தம் உள்ளது என்று உலகிற்கு எடுத்துரைத்தார்.
கி.பி. ஒன்றாவது நூற்றாண்டில் முதன்முதலில் மார்பகப் புற்றுநோய்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. 18ம் நுாற்றாண்டில் அமெரிக்காவின் பால்டிமோர் பகுதியில் உள்ள ஜான்ஸ் ஹாப்பின்ஸ் மருத்துவமனனயில் முதன் முறையாக மார்பகத்தையும் அதனின் உள்ள தசைகளையும் அக்குளில் உள்ள நிணநீர் கட்டிகளையும் அகற்றினார்.
1945க்குப் பிறகு மார்பகப் புற்றுநோய்க்கு ரேடியேஷன் தெரபி, கீமோதெரப்பி தரப்பட்டது. இன்று ஆரம்பநிலைப் புற்றுநோய்க்கு அறுவை சிகிச்சை, மூலிகை சிகிச்சை மூலம் முற்றிலும் குணமடையச் செய்யலாம். நம்முடைய நாட்டில் உள்ள பெண்களுக்கு அதிக கூச்ச சுபாவம் இருப்பதால் மருத்துவரிடம் சென்று மார்பகப் பரிசோதனை செய்து கொள்ளத் தயங்குகின்றனர். பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும் இந்த விஷயத்தில் விழிப்புடன் இருப்பது அவசியம்.
மூலிகைமணி க. வே. அஜிதா பொற்கொடி,
நோயியல் மருத்துவர், சென்னை
82201 44400