வயலில் நெல் வரப்பில் பயறு வகை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 அக்
2021
00:00

பயறு வகை பயிர்களை தழைச்சத்து தொழிற்சாலை என்றும் அழைக்கலாம். வயலில் நெல்லையும் வரப்புகளில் பயறு வகை பயிர்களையும் விதைத்தால் மகசூல் அதிகரிப்பதுடன் மண்வளம் அதிகரிக்கிறது.

நெல் வயல் வரப்பில் உளுந்து, பாசிப்பயறு, தட்டைப்பயறு பயிரிடுவதால் வளிமண்டலத்தில் காணப்படும் தழைச்சத்தை கிரகித்து அவற்றின் வேர்களில் காணப்படும் வேர்முடிச்சுகளில் சேகரித்து வைக்கும். இதனால் மண்ணில் தழைச்சத்து அதிகரித்து அருகிலுள்ள பயிர்களுக்கு தழைச்சத்து கிடைக்கிறது. இப்பயிர்கள் இருக்கும் இடத்தில் நன்மை செய்யும் பொறிவண்டுகள் அதிகளவில் காணப்படும். இவை நெற்பயிரைத் தாக்கும் இலைச்சுருட்டுப் புழு, தண்டு துளைப்பான் போன்ற பூச்சிகளின் முட்டைகளை உண்டு சேதாரத்தை குறைக்கின்றன. இதனால் பயிர் பாதுகாப்புக்கான செலவும் குறைகிறது.
வரப்பில் தேவையற்ற களைகள் வளர்வது தடுக்கப்படுகிறது. இப்பயிர்களின் மூலம் வருமானம் கிடைக்கிறது. பயறு அறுவடைக்குப்பின் தழையானது தீவனமாகவும் தழைச்சத்து உரமாகவும் பயன்படுகிறது.

ஒரு ஏக்கர் வயலில் நடுவதற்கு ஒரு கிலோ பயறு விதை போதும். வரப்பின் உட்புறம் கீழிருந்து ஒரு அடி உயரத்தில் ஒரு இன்ச் ஆழத்தில் விதையை ஊன்ற வேண்டும். ஒவ்வொரு விதைக்கும் இடையில் ஓரடி இடைவெளி வேண்டும். நெல் விதைப்பு மற்றும் நடவு தினத்தன்று பயறு வகைகளை வரப்பில் நடலாம். தனியாக தண்ணீர் மற்றும் பராமரிப்பு செலவு கிடையாது.
சான்று விதைகளை விதைக்க வேண்டும். அல்லது சேமித்துள்ள விதைகளை அருகிலுள்ள அரசு விதைப் பரிசோதனை நிலையத்தில் 100கிராம் அளவு விதை மாதிரியை கொடுத்து ரூ.30 கட்டணம் செலுத்தினால் முடிவுகள் விவசாயியின் வீட்டிற்கு அனுப்பப்படும்.

சிங்கார லீனா
விதை பரிசோதனை அலுவலர் மதுரை
லயோலா அன்புக்கரசி வேளாண்மை அலுவலர்
சிவகங்கை

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X