நவ., 19 கார்த்திகை தீபம்
கார்த்திகை தீபத்தன்று, அவல் பொரி உருண்டை, அப்பம் செய்து கடவுளுக்கு படைத்து வழிபடுவது வழக்கம்.
தேவையான பொருட்கள்:
பாகு வெல்ல துாள் - முக்கால் கிண்ணம், அவல் பொரி - ஐந்து கிண்ணம், பல் பல்லாக நறுக்கிய தேங்காய் ஒரு மூடி, ஏலக்காய் 9 (பொடி செய்தது) வறுத்த வேர்கடலை - கால் கப், பொட்டுக்கடலை - கால் கப், வறுத்த முந்திரி - கால் கப்.
செய்முறை: அவல் பொரியை அரிசி ஜல்லடையில் போட்டு மண் போக சலித்து சுத்தப்படுத்தவும். வெல்லத்தை கால் டம்ளர் நீர் விட்டு காய்ச்சி, மண் நீக்கி வடிகட்டவும். வெல்லப் பாகில், தேங்காய் பல், ஏலக்காய் துாள், வேர்கடலை, பொட்டுக்கடலை, முந்திரி பருப்புடன் அவல் பொரியை கொட்டி கரண்டி காம்பால் நன்றாக கலக்கவும். சூடு பொறுக்கும் பதத்தில் கைகளால் அவல் பொரியை அழுத்தி பிடித்து உருண்டைகளாக்கி தட்டில் வைக்கவும்.