கிழக்காசிய நாடான ஜப்பானில் வசிக்கும் குழந்தைகளிடையே, தலையணைச் சண்டை பிரபலமான விளையாட்டாக இருந்து வருகிறது. இரண்டு அணிகளாக பிரிந்து, எதிரெதிர் திசையில் நின்றபடி ஒருவர் மீது ஒருவர் தலையணையை துாக்கி வீசுவது தான், இந்த விளையாட்டு.இந்த தலையணைச் சண்டை இப்போது, ஜப்பானில் தேசிய அளவில் பிரபலமான விளையாட்டாக மாறி விட்டது. நம் நாட்டில் கிரிக்கெட் எப்படி பிரபலமோ, அதுபோல் ஜப்பானில் தலையணைச் சண்டை பிரபலம். இப்போது சிறுவர்கள் மட்டுமல்லாமல், பெரியவர்களும் விளையாடுகின்றனர். தேசிய அளவில் போட்டிகள் நடத்தப்பட்டு, பல கோடி ரூபாய் பரிசாக வழங்கப்படுகிறது. சுற்றுலா பயணியர் அதிகம் விரும்பி பார்ப்பதால், இந்த தலையணைச் சண்டை விளையாட்டுக்கு ஜப்பானில் பெரும் ரசிகர் வட்டம் உருவாகி உள்ளது. — ஜோல்னாபையன்